உள்ளடக்கத்துக்குச் செல்

பெண்கள் கிறித்தவக் கல்லூரி

ஆள்கூறுகள்: 13°4′8.76″N 80°14′55.36″E / 13.0691000°N 80.2487111°E / 13.0691000; 80.2487111
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெண்கள் கிறித்தவக் கல்லூரி, சென்னை
கல்லூரி வாசல்
குறிக்கோளுரைஒளிரப்பண்ண ஒளி (Lighted to Lighten)
வகைஅரசு உதவி பெறும் சிறுபான்மையினக் கல்லூரி
உருவாக்கம்1915; 110 ஆண்டுகளுக்கு முன்னர் (1915)
முதல்வர்முனைவர் லில்லியன் ஐ ஜாஸ்பர் [1]
கல்வி பணியாளர்
156
பட்ட மாணவர்கள்2646
அமைவிடம், ,
13°4′8.76″N 80°14′55.36″E / 13.0691000°N 80.2487111°E / 13.0691000; 80.2487111
சேர்ப்புசென்னைப் பல்கலைகழகம்
இணையதளம்கல்லூரி இணையதளம்
படிமம்:Women's Christian College, Chennai logo.jpg

பெண்கள் கிறித்தவக் கல்லூரி (ஆங்கில மொழி: Women's Christian College) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் சென்னையிலுள்ள நுங்கம்பாக்கத்தின் கல்லூரி சாலையில் உள்ள ஒரு புகழ்பெற்ற மகளிர் கல்லூரி ஆகும்.

1915 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இக்கல்லூரி அரசு உதவி பெறும் படிப்புகளையும் தன்னாட்சி அந்தஸ்து பெற்ற தகுதியில் சுயநிதி படிப்புகளையும் மாணவர்களுக்கு வழங்கி வருகிறது.

வரலாறு

[தொகு]

பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி 1915 ஆம் ஆண்டில் 41 மாணவர்கள் மற்றும் 7 ஆசிரியர்களுடன் இங்கிலாந்து, கனடா மற்றும் அமெரிக்காவில் அமைந்துள்ள 12 மிஷனரி சங்கங்களின் கூட்டு முயற்சியின் விளைவாக, தாராளவாத கலை மற்றும் அறிவியலில் இந்திய பெண்களுக்கு உயர் கல்வியை வழங்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்டதாகும். இக்கல்லூரியின் குறிக்கோள் "ஒளிரப்பண்ண ஒளி" என்பதாகும். ஆரம்பத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்த இக்கல்லூரி 1982 ஆம் ஆண்டில் பல்கலைக்கழக மானியக் குழுவால் ஒரு தன்னாட்சி கல்லூரியாக அங்கீகாரம் பெற்றுள்ளது.[2][3] தற்போது இக்கல்லூரியில் இது நான்காயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் 209 ஆசிரியர்களோடு அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பிரிவுகளில் பாடங்களை பயிற்றுவிக்கிறது.

இந்தியாவின் முதல் பெண் அரசியல் கைதியும், சுதந்திரப் போராட்ட வீரருமான ருக்மிணி லட்சுமிபதி இக்கல்லூரியின் முதல் வருட மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்லூரியின் முதல்வர்கள்

[தொகு]
  • எலினோர் மெக்டோகல்,
  • எலினோர் ரிவெட், 1938–1947
  • எலிசபெத் ஜார்ஜ், 1947–1950
  • எலினோர் டி.மேசன், 1950–1956
  • ரேணுகா முகர்ஜி, 1956–1965
  • அன்னா டி.சக்கரியா, 1965-1971
  • ரேணுகா சோமசேகர், 1971-1981
  • இந்திராணி மைக்கேல், 1981-1994
  • கண்மணி கிறிஸ்டியன், 1994-1998
  • குளோரி கிறிஸ்டோபர், 1998–2003
  • ரீட்டா ஜேக்கப் செரியன், 2003–2006
  • ரிட்லிங் மார்கரெட் வாலர் 2006-2017
  • லிலியன் ஐ ஜாஸ்பர், 2017- தற்போது வரை

அங்கீகாரம்

[தொகு]

1982 ஆம் ஆண்டில் பல்கலைக்கழக மானியக் குழுவால் ஒரு தன்னாட்சி கல்லூரியாக அங்கீகாரம் பெற்றுள்ள இக்கல்லூரி, 2019 ஆம் ஆண்டில் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையால் தரத்தை பெற்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் 2022 ஆம் ஆண்டில் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பால் (NIRF) இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் இந்த கல்லூரி தரவரிசைப்பட்டியலில் 72 வது இடத்தைப் பிடித்துள்ளது.[4]

குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்

[தொகு]

படத்தொகுப்பு

[தொகு]
  1. "Womens Christian College ‹ Lighted to Lighten". wcc.edu.in. Retrieved 25 September 2017.
  2. "campus/pages/college/wcc_pro". learning.indiatimes.com. Retrieved 25 September 2017.
  3. "Home Science Colleges In India, Top Home Science Colleges in India conducting Home Science courses, Regular Colleges or Educational Institutions list Count -". Webindia123.com career. Retrieved 2018-03-15.
  4. "Rankings_NIRF_C_2022". Retrieved 10 February 2024.
  5. "Padmashree Thangam E. Philip". Kerala Tourism, Government of Kerala. 2015. Retrieved 22 June 2015.