உள்ளடக்கத்துக்குச் செல்

ஆடிவேல் விழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆடிவேல் விழா கதிர்காம முருகனின் ஆடி அல்லது ஆவணி மாதத்தில் நடைபெறும் மூன்றாம் திருவிழாவின் இறுதியிலே கொழும்பில் கோலாகலமாகக் கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். இவ்விழா 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆரம்பமானது என்று கருதப்படுகிறது.

வரலாறு

[தொகு]

கதிர்காம முருகனைத் திருவிழாவின் போது தரிசிக்க முருக பக்தர்கள் பல்வேறு இடங்களிலிருந்தும் காவடி ஏந்தியும் வேல் ஏந்தியும் செல்வது மரபாகும். அத்தகைய சந்தர்ப்பங்களில் ஒருசமயம் இலங்கையின் தெற்குப் பகுதியில் நேர்ந்த அநர்த்தத்தினால் யாத்திரைகள் தடைப்பட்டதால் பக்தர்கள் தமது யாத்திரையைத் தொடர முடியவில்லை. இந்நிலையை அநுபவித்த கொழும்பு நகரத்தார் கதிர்காமத் திருவிழாவின் அந்தத்திலே கொழும்பிலே வேல்விழாவினைக் கொண்டாடத் தொடங்கினர் என நம்பப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. பூலோகசிங்கம், பூ., 1990, இந்துக் கலைக்களஞ்சியம், கொழும்பு: இந்து சமய, கலாச்சார அலுவல்கள் திணக்களம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடிவேல்_விழா&oldid=2946028" இலிருந்து மீள்விக்கப்பட்டது