ஆச்சார்யா கிரிசு சந்திர போசு கல்லூரி
வகை | இளநிலை பட்டக் கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1964 |
சார்பு | கொல்கத்தா பல்கலைக்கழகம் |
முதல்வர் | அசித் குமார் சர்க்கார் |
அமைவிடம் | 35 இராஜ்குமார் சக்கரபார்தி சரனி, , , , 700009 , 22°34′10″N 88°22′02″E / 22.5695344°N 88.3672145°E |
வளாகம் | நகரம் |
இணையதளம் | Acharya Girish Chandra Bose College |
ஆச்சார்யா கிரிசு சந்திரபோசு கல்லூரி (Acharya Girish Chandra Bose College) முன்பு பங்கபாசி வணிகக் கல்லூரி என்று அழைக்கப்பட்டது, 1964இல் இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் நிறுவப்பட்ட ஓர் இளநிலை கலை அறிவியல் கல்லூரி ஆகும்.[1] இக்கல்லூரி கலை மற்றும் வணிகத்தில் இளங்கலை படிப்புகளை வழங்குகிறது. ஆச்சார்யா கிரிசு சந்திரபோசு கல்லூரி 2011ஆம் ஆண்டில் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார அவையால் 'பி' தரத்துடன் அங்கீகாரம் பெற்றது.
கல்லூரியின் வரலாறு
[தொகு]கிரிசு சந்திரபோசு 1885இல் பங்கபாசி பள்ளி மற்றும் 1887இல் பங்கபாசி கல்லூரி என இரண்டு கல்வி நிறுவனங்களை நிறுவினார். இவை 1964-1965இல் பங்கபாசி காலை நேரக் கல்லூரி, பங்கபாசி மாலை கல்லூரி மற்றும் பங்கபாசி வணிகக் கல்லூரி என மறுசீரமைக்கப்பட்டன.[2] பங்கபாசி வணிகக் கல்லூரி 2005ஆம் ஆண்டில் பங்கபாசி கல்லூரியின் நிறுவனர் பெயரில் மறுபெயரிடப்பட்டது.[3]
துறைகள்
[தொகு]கலை மற்றும் வணிகம்
[தொகு]- வங்காள மொழி
- ஆங்கிலம்
- சமசுகிருதம்
- வணிகம்-கணக்கியல் மற்றும் நிதி
அங்கீகாரம்
[தொகு]ஆச்சார்யா கிரிசு சந்திரபோசு கல்லூரி புது தில்லியிலுள்ள பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[1]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Untitled Page". www.ugc.ac.in."Untitled Page". www.ugc.ac.in.
- ↑ "Welcome". Acharya Girish Chandra Bose College. பார்க்கப்பட்ட நாள் December 13, 2019.
- ↑ "College History". Acharya Girish Chandra Bose College. பார்க்கப்பட்ட நாள் December 13, 2019.
வெளி இணைப்புகள்
[தொகு]- Acharya Girish Chandra Bose College (கல்லூரி இணையத்தளம்)