அவிட்டநல்லூர்
அவிட்டநல்லூர் Avitanallur | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 11°30′01″N 75°48′21″E / 11.5002000°N 75.80592°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | கோழிக்கோடு |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 17,007 |
மொழிகள் | |
• அலுவல் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | கே எல்- |
அவிட்டநல்லூர் (Avitanallur) இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். புகழ்பெற்ற மலையாளக் கவிஞர் என். என். காக்காடு பிறப்பால் அவிட்டாநல்லூர் கிராமம் பிரபலமடைந்துள்ளது. இந்த கிராமத்தின் அதிகாரப்பூர்வ பெயர் அவிட்டநல்லூர் என்றாலும், இது உள்ளூரில் கூட்டல்லிடா என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.
ஒரு நல்ல இடம் என்று பொருள் கூறும் அவிட்ட-நல்ல-ஊர் என்பது அவிட்டநல்லூர் என்ற மலையாள மொழிச் சொல்லாகும். இந்த சிறிய கிராமத்தில் கிட்டத்தட்ட 300 இல்லங்கள் (பிராமண இல்லம்) இருந்தன. அவற்றில் பெரும்பாலானவை மலபார் மாகாணத்திற்கு திப்பு சுல்தான் படையெடுத்தபோது தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டன.
மக்கள்தொகை
[தொகு]2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அவிட்டநல்லூர் கிராமத்தின் மக்கள் தொகை 17,007 ஆகும், இதில் 8,406 ஆண்கள் மற்றும் 8,601 பெண்கள் இருந்தனர். [1]
2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இங்கு 4541 குடும்பங்கள் வசித்தன. அவிட்டநல்லூர் கிராமத்தின் மக்கள்தொகை 18398 ஆகவும், இதில் 8839 ஆண்களாகவும் 9559 பேர் பெண்களாகவும் இருந்தனர்.
போக்குவரத்து
[தொகு]அவிட்டநல்லூர் கிராமம் கோயிலாண்டி நகரம் வழியாக இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைகிறது. அருகிலுள்ள விமான நிலையங்கள் கண்ணூர் மற்றும் கோழிக்கோடு ஆகும். அருகிலுள்ள இரயில் நிலையம் கோயிலண்டியில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை 66 கோயிலாண்டி வழியாகச் செல்கிறது மற்றும் வடக்கத்திய பகுதி மங்களூர், கோவா மற்றும் மும்பை ஆகிய நகரங்களை இணைக்கிறது. தெற்கு பகுதி கொச்சின் மற்றும் திருவனந்தபுரத்துடன் இணைகிறது. குட்டியாடி வழியாக செல்லும் கிழக்கு தேசிய நெடுஞ்சாலை 54 மானந்தவாடி, மைசூர் மற்றும் பெங்களூரை இணைக்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 8 December 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.