உள்ளடக்கத்துக்குச் செல்

அவதேஷ் பிரசாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அவதேஷ் பிரசாத்
உறுப்பினர், மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
4 சூன் 2024
முன்னையவர்லல்லு சிங்
தொகுதிபைசாபாத்து
சட்டமன்ற உறுப்பினர உத்தரப் பிரதேச சட்டப் பேரவை
பதவியில்
10 மார்ச்சு 2022 – 11 சூன் 2024
முன்னையவர்பாபா கோரக்நாத், பாஜக
பின்னவர்அறிவிக்கப்படவேண்டும்
தொகுதிமில்கிபூர் (ப/இ)
பதவியில்
2012–2017
முன்னையவர்புதியது
பின்னவர்பாபா கோரக்நாத், பாஜக
தொகுதிமில்கிபூர் (ப/இ)
பதவியில்
1993–2012
முன்னையவர்இராமு பிரியதர்சி, பாஜக
பின்னவர்மறுவரையறை
தொகுதிசோகாவால் (ப/இ)
பதவியில்
1985–1991
முன்னையவர்மதோபிரசாத், இதேகா (இ)
பின்னவர்இராமு பிரியதர்சி, பாஜக
தொகுதிசோகாவால் (ப/இ)
பதவியில்
1977–1980
முன்னையவர்அப் ராஜ், இதேகா
பின்னவர்மதோபிரசாத், இதேகா (இ)
தொகுதிசோகாவால் (ப/இ)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு31 சூலை 1945 (1945-07-31) (அகவை 78)
பீகாபூர், ஐக்கிய மாகாணம், இந்தியா
அரசியல் கட்சிசமாஜ்வாதி கட்சி
பிள்ளைகள்2
வாழிடம்பீகாபூர்
முன்னாள் கல்லூரிஇலக்னோ பல்கலைக்கழகம் (இளநிலைச் சட்டம், 1968)
டி. ஏ. வி. கல்லூரி, கான்பூர், டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகம் (முதுகலை, 1966)

அவதேஷ் பிரசாத் (Awadhesh Prasad - பிறப்பு: 31 சூலை 1945) ஓர் இந்திய அரசியல்வாதியும், உத்தரப் பிரதேசத்தின் பைசாபாத் மக்களவை நாடாளுமன்ற உறுப்பினராகவும், சமாஜ்வாதி கட்சியின் நிறுவன உறுப்பினராகவும், தேசிய செயற்குழுவின் பொதுச் செயலாளராகவும் உள்ளார். பிரசாத் 2024ல் மக்களவை உறுப்பினராக[1] தேர்ந்தெடுக்கப்படும் வரை உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.[2]

பிறப்பு[தொகு]

அவதேஷ் 31 சூலை 1945ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தின், அயோத்தி மாவட்டத்தின் சுர்வாரில் துக்கி ராம், மைனா தேவி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.

குடும்பம்[தொகு]

அவதேஷிற்க்கு சோனாதேவி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.

சட்டமன்றத்தில்[தொகு]

பிரசாத் உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கு 1977, 1985, 1989, 1993, 1996, 2002, 2007ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்கலில் சோஹாவால் (தனி) தொகுதியிலிருந்து ஏழு முறையும், 2012 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் மில்கிபூர் (தனி) சட்டமன்றத் தொகுதியிலிருந்து[3] இரண்டு முறை என ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணிசெய்துள்ளார்.

இவர் உத்தரபிரதேச அரசில் ஆறு முறை அமைச்சராகவும், நான்கு முறை கேபினட் அமைச்சராகவும் இருந்துள்ளார்.[3][2]

மக்களவையில்[தொகு]

2024ல் நடைப்பெற்ற மக்களவை தேர்தலில் உத்தரப் பிரதேசத்தின் பைசாபாத் மக்களவை தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் சார்பாக போட்டியிட்டு, பாஜகவின் லல்லுசிங்கை 54,567 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.[4]

சட்டமன்றத் தொகுதி[தொகு]

ஆண்டு கட்சி தொகுதி முடிவு பெற்ற வாக்குகள் வாக்கு விகிதம் (%) வித்தியாசம்
1974 பாரதிய கிரந்தி தளம் சோகாவால் தோல்வி 18,879 34.70 689
1977 ஜனதா கட்சி வெற்றி 28,090 58.42 10,578
1980 மதச்சார்பற்ற ஜனதா கட்சி தோல்வி 21,932 40.72 4,071
1985 லோக்தளம் வெற்றி 27,373 46.29 9,147
1989 ஜனதா தளம் வெற்றி 29,413 33.91 10,032
1991 ஜனதா கட்சி தோல்வி 22,047 24.90 9,643
1993 சமாஜ்வாதி கட்சி வெற்றி 59,115 51.77 16,496
1996 வெற்றி 44,399 35.17 3,407
2002 வெற்றி 43,398 35.36 8,156
2007 வெற்றி 48,624 33.08 9,871
2012 மில்கிபூர் வெற்றி 73,804 42.24 34,237
2017 தோல்வி 58,684 29.77 28,276
2022 வெற்றி 103,905 47.99 13,338

மக்களவை[தொகு]

ஆண்டு கட்சி சட்டமன்றத் தொகுதி முடிவு பெற்ற வாக்குகள் வாக்குகள் % வித்தியாசம்
1996 சமாஜ்வாதி கட்சி அக்பர்பூர் தோல்வி 169,046 27.12 30,749
2024 பைசாபாத்து வெற்றி 554,289 48.59 47,935

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ayodhya, Kanpur, Gorakhpur and Gonda seats results LIVE updates: SP leads in Ayodhya as BJP's Lallu Singh falls behind". பார்க்கப்பட்ட நாள் 4 Jun 2024.
  2. 2.0 2.1 வர்மா, லால்மணி. "அயோத்தியில், நீண்டகால சமாஜ்வாதி கட்சி பிரமுகருக்கு வாய்ப்பு". இந்தியன் என்ஸ்பிரஸ். 
  3. 3.0 3.1 Singh, Banbir (31 January 2024). "बार के विधायक, Mulayam के करीबी दलित नेता... कौन हैं Awadhesh Prasad, जिन्हें सपा ने Faizabad से बनाया लोकसभा प्रत्याशी". Aaj Tak.  பிழை காட்டு: Invalid <ref> tag; name "aaj tak" defined multiple times with different content
  4. https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2454.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=அவதேஷ்_பிரசாத்&oldid=4040745" இலிருந்து மீள்விக்கப்பட்டது