அலைமருவித் தொலைக்காட்சி
Appearance
அலைமருவி (Analog அல்லது analogue) தொலைக்காட்சி என்பது அலைமருவிய பரப்புகை மூலம் ஒத்திசைந்த ஒலி மற்றும் ஒளி குறிப்பலைகளை ஒளிபரப்புவதாகும்.[1] இந்த முறை பரப்புகையில் ஒளிப்படத்தின் பல்வேறு புள்ளிகளில் உள்ள ஒளிர்மை, வண்ணப்பொலிவு போன்ற தகவல்களும் ஒலியின் பண்புகளும் அவற்றை ஏற்றிச் செல்லும் மின்காந்த அலையின் ஏதேனும் ஒரு பண்பை (அலையின் அளவையோ, அதிர்வெண்ணையோ, அலைக் கட்டத்தையோ) தொடர்ந்த முறையில் மாற்றி அனுப்பப்படுகிறது. எண்ணிமத் தொலைக்காட்சி வரும்வரை அனைத்து தொலைக்காட்சி ஒளிபரப்புகளும் அலைமருவிய முறைமையிலேயே ஒளிபரப்பப்பட்டன. அலைமருவித் தொலைக்காட்சி கம்பியில்லா பரப்புகை புவிப்புறத் தொலைக்காட்சி மூலமும் கம்பிவடத் தொலைக்காட்சியாக ஓரச்சு கம்பிவடம் மூலமும் பரப்பப்பட்டன.
வெளி இணைப்புகள்
[தொகு]- ஒளித குறிப்பலையின் அளவீடுகளும் உருவாக்கலும் பரணிடப்பட்டது 2012-04-22 at the வந்தவழி இயந்திரம்
- தொலைக்காட்சி இசைவாக்கல் பரணிடப்பட்டது 2010-03-26 at the வந்தவழி இயந்திரம்
- ஒளித பரப்புகை சீர்தர அலைவரிசைகளும் நாட்டுப் பட்டியல்களும் பரணிடப்பட்டது 2010-12-27 at the வந்தவழி இயந்திரம்
- 1958ஆம் ஆண்டின் தொலைக்காட்சிப் பெட்டியின் வடிவமைப்பை விவரிக்கும் கட்டுரை பரணிடப்பட்டது 2006-07-16 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Television Technical Performance Code" (PDF). Publication date December 2006. Ofcom – office of Communications. பார்க்கப்பட்ட நாள் 24 November 2010.