உள்ளடக்கத்துக்குச் செல்

அறிவுசார் சொத்துரிமைகள் ஆய்விதழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அறிவுசார் சொத்துரிமைகள் ஆய்விதழ்
துறைஅறுவுசார் சொத்துரிமைச் சட்டம்
மொழிஆங்கிலம்
பொறுப்பாசிரியர்மது சாகானி
Publication details
வரலாறு1996–முதல்
பதிப்பகம்
இந்தியத் தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் தகவல் வளங்கள் நிறுவனம்
வெளியீட்டு இடைவெளிஇரு மாதங்களுக்கு ஒரு முறை
Standard abbreviations
ISO 4J. Intellect. Prop. Rights
Indexing
ISSN0971-7544
0975-1076
Links

அறிவுசார் சொத்துரிமைகள் ஆய்விதழ் (Journal of Intellectual Property Rights) என்பது இந்தியத் தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் தகவல் வளங்கள் நிறுவனத்தால் வெளியிடப்படும் அறிவுசார் சொத்துச் சட்டத்தை உள்ளடக்கிய இரு மாதத்திற்கு ஒரு முறை வெளியாகும் சக மதிப்பாய்வு செய்யப்பட்ட சட்டம் சார்ந்த ஆய்விதழாகும்.[1] இந்த ஆய்விதழ் 1996 முதல் வெளியாகிறது. இந்த ஆய்விதழில் ஆய்வுப் பங்களிப்பு, துறைசார் அறிஞர்களின் கட்டுரைகள், காப்புரிமை தொடர்வு வழக்கு தொடர்பான செய்திகள், காப்புரிமை மதிப்புரைகள், தற்போதைய அறிவுசார் தொத்துரிமை சிக்கல்கள் பற்றிய தொழில்நுட்ப குறிப்புகள், மதிப்புரைகள், அறிவுசார் சொத்துரிமை பற்றிய உலகச் செய்திகள், தேசிய மற்றும் பன்னாட்டுச் செய்திகள், புத்தக மதிப்புரைகள் மற்றும் வணிகச் சின்னம், காப்புரிமைகள், பதிப்புரிமைச் சட்டம், வர்த்தக ரகசியங்கள் மற்றும் இணையச் சட்டம் குறித்த மாநாட்டு அறிக்கைகளை வெளியிடுகிறது. இந்த ஆய்விதழ் ஆய்வறிக்கைகள் இசுகோபசில் சுருக்கப்பட்டு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் தலைமை தொகுப்பாசிரியர் மது சாகானி (தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் தகவல் வளங்கள் நிறுவனம்) ஆவார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "NISCAIR Online Periodicals Repository". Homepage. 2015. Retrieved 2015-06-16.

வெளி இணைப்புகள்

[தொகு]