அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம்
Appearance
அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம் இருபத்தி ஆறு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. அரக்கோணம் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் அரக்கோணத்தில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, அரக்கோணம் அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 78,938 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 25,816 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1,812 ஆக உள்ளது.[2]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 26 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்; [3]
- அம்பரிஷிபுரம்
- அம்மனூர்
- அணைகட்டாபுத்தூர்
- ஆணைப்பாக்கம்
- அனந்தாபுரம்
- ஆத்தூர்
- காவனூர்
- கீழந்தூர்
- கீழ்குப்பம்
- கீழ்பாக்கம்
- கோணலம்
- கிருஷ்ணாபுரம்
- மோசூர்
- முதூர்
- முள்வாய்
- நகரிகுப்பம்
- பெருமுச்சி
- பெருங்களத்தூர்
- புதுகேசாவரம்
- புளியமங்கலம்
- தணிகைபோளூர்
- செய்யூர்
- உளியம்பாக்கம்
- உரியூர்
- வளர்புரம்
- வேலூர்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்