அய்யத்தான் கோபாலன்
ராவ் சாகிப் அய்யத்தான் கோபாலன் | |
---|---|
பிறப்பு | அய்யத்தான் கோபாலன் 3 மார்ச்சு 1861 சேட்டன்குன்னு (புலப்பாடி இல்லம்), தலச்சேரி |
இறப்பு | 2 மே 1948 கோழிக்கோடு சாந்தி ஆசிரமம் | (அகவை 87)
கல்லறை | சாந்தி தோட்டங்கள் (அய்யத்தான் குடும்பக் கல்லறை, கோழிக்கோடு) |
மற்ற பெயர்கள் | தர்சார்ஜி |
படித்த கல்வி நிறுவனங்கள் | மதராசு மருத்துவக் கல்லூரி |
பணி |
|
அறியப்படுவது | மருத்துவர், எழுதுதல், அறப்பணி, கேரளாவில் சமூக சீர்திருத்தம் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | மலையாள பிரம்மதர்மம் (பிரம்மசமாஜத்தின் விவிலியம்) சரஞ்சினிபரிணயம் , சுசீலாதுக்கம் (இசை நாடகங்கள்) |
அரசியல் இயக்கம் | சுகனவர்தினி இயக்கம் |
வாழ்க்கைத் துணை | கல்லத்து கௌசல்யா அம்மாள் (தி. 1878–1930) |
பிள்ளைகள் | 5 |
உறவினர்கள் | மருத்துவர் அய்யத்தான் ஜானகி அம்மாள் |
விருதுகள் | ராவ் சாகிப் |
ராவ் சாகிப் மருத்துவர் அய்யத்தான் கோபாலன் (Rao Sahib Dr. Ayyathan Gopalan) (1861 மார்ச் 3 - 1948 மே 2) "தர்சார்ஜி" (மருத்துவர்) என்று பிரபலமாக அறியப்பட்ட இவர் ஓர் இந்திய மருத்துவரும், எழுத்தாளரும், அறப்பணியாளரும் மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஒரு சமூக சீர்திருத்தவாதியுமாவார். இவர் சுகனவர்தினி இயக்கத்தின் நிறுவனரும், கேரளாவில் பிரம்ம சமாஜத்தின் தலைவரும் பிரச்சாரகருமானவர். சிலை வழிபாட்டை கண்டித்த இவர், கேரளாவில் அந்த சமூக நடைமுறைகளை நியாயமற்றது என்று தான் நினைத்ததை முடிவுக்குக் கொண்டுவர போராடினார். இவரைப் பின்தொடர்பவர்களில் பிரம்மானந்த சுவாமி சிவயோகி,[1] வாக்பதானானந்தா,[2][3] மற்றும் பிரம்மவடி பி. குஞ்ஞிராமன் போன்றோர். கோபாலன் பி.குஞ்ஞிராமன் "பிரம்மவடி" என்றும், சிவயோகி "பிரம்மானந்த சுவாமி" என்றும் அழைக்கப்பட்டார்.
இவரது சேவைகளுக்காக பிரிட்டிசு அரசாங்கத்தால் மிக உயர்ந்த குடிமை விருதான ராவ் சாகிப் [4][5][6][7][8][9] என்றப் பட்டம் இவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. கேரள சீர்திருத்த இயக்கத்தில் சுகனவர்தினி இயக்கமும் பிரம்ம சமாஜமும் உருவானது குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தது.
சுயசரிதை
[தொகு]கேரளாவின் தலச்சேரி, சேட்டம்குன்னில் உள்ள புலப்பாடி இல்லத்தின் (மலபாரின் பிரபுத்துவ திய்யா குடும்பம்) அய்யத்தான் குடும்பத்தில் அய்யத்தான் சந்தன், கல்லத்து சிறுத்தம்மாளின் முதல் மகனாக கோபாலன் பிறந்தார். இவரது இளைய சகோதரி மருத்துவர் அய்யத்தான் ஜானகி அம்மாள் [10] கேரளாவின் முதல் பெண் மருத்துவராவார். இது இந்தியாவில் பிரிட்டிசு ஆட்சியின் போது சென்னை மாகாணத்தின் நிர்வாக மாவட்டமாக இருந்தது.
இவர் தனது பள்ளி நாட்களிலிருந்து எந்த சாதி வேறுபாடுகளையும் பழக்கவழக்கங்களையும் பின்பற்ற தயங்கினார். தனது பள்ளி நாட்களில், மரபுவழி ஒழுக்கக்கேட்டை எதிர்த்துப் போராடுவதில் ஆர்வமாக இருந்தார். இவர் பள்ளி மாணவராக இருந்தபோது, கோபாலன் தனது தலைமுடியை வெட்டிக் கொண்டார். இது பாரம்பரியமாக தலைமுடியை வளர்க்கும் மரபுவழி மரபுக்கு முரணானது. இது குடும்பத்திலும் சமூகத்திலும் ஒரு ஆச்சரியமான செயலாகும். இவர் ஒரு வசதியான, பிரபுத்துவ திய்யா சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், தாழ்ந்த சாதியினருடன் சேர இவர் அனுமதிக்கப்படவில்லை. இவர் தனது முக்குவர் இன நண்பரின் வீட்டில் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்டு அங்குள்ள உணவை சாப்பிட்டார். இதற்காக, சேட்டம்குன்னில் உள்ள தனது தந்தையின் வீடான அய்யத்தான் புலப்பாடி இல்லத்தில் தங்கி படிக்க வைக்கப்பட்டார். இவர், அஞ்சரக்கண்டி தொடக்கப்பள்ளி, பிரென்னென் பள்ளி, தேவாலயப் உயர்நிலைப்பள்ளி போன்ற பள்ளிகளில் படித்தார். பின்னர் 1884 செப்டம்பர் 19 அன்று மதராசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். இராசா ராம் மோகன் ராயின் பிரம்ம சமாஜாத்தின் அறிமுகம் கிடைத்து.[11][12][13][14], பிரம்ம சமாஜத்தில் சேர்ந்து, அதன் சமூக சீர்திருத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டார். மேலும் கொல்கத்தா பிரம்ம சமாஜ பொதுக் குழுவின் செயலில் நிர்வாக உறுப்பினரானார். இவர் கேசவ சந்திர சென், தேபேந்திரநாத் தாகூர், சிவநாதன் சாத்திரி, இரவீந்திரநாத் தாகூர், ஆர். ஜி. பண்டார்கர் போன்ற பிரம்ம தலைவர்களுடன் இணைந்து, இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் குழுவின் வருடாந்திர கலந்தாய்வுகளில் கலந்து கொண்டார். 1888 ஆம் ஆண்டில், இவர் கௌரவங்களுடன் மருத்துவப் பட்டம் பெற்று அரசாங்கச் சேவையில் நுழைந்தார். தென்னிந்தியா முழுவதும் பல மருத்துவமனைகளில் மருத்துவராகவும் மருத்துவ விரிவுரையாளராகவும் பணியாற்றினார். பிரிட்டிசு ஆட்சியின் போது மலபார் மாவட்ட நீதிபதியாகவும் பணியாற்றினார்.
கோபாலன் 1894 திசம்பர் 30 அன்று கல்லத்து கௌசல்யா அம்மாள் என்பவரை மணந்தார். அந்த நேரத்தில் பிரம்ம தலைவரும் சமூக சீர்திருத்தவாதியுமான இராம்கிருட்டிண கோபால் பண்டார்கர், சென்னை பிரம்ம சமாஜத்தில் இத்திருமணத்தை நடத்தினார். திருமணத்திற்கு பல பிரம்ம தலைவர்கள் தலைமை தாங்கினர். இவரது மனைவி கௌசல்யா அம்மாள் கோபாலனின் வலுவான ஆதரவாளராக இருந்தார். மேலும் இவரது சமூக சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு உதவினார்.
சமூக சீர்திருத்த நடவடிக்கைகள்:
[தொகு]கேரளாவில் பிரம்மசமாஜத்தின் கிளைகளை நிறுவுதல்:
[தொகு]சேலம், திருச்சிராப்பள்ளி, மதுரை, சென்னை, மைசூர், மற்றும் பெங்களூர் ( பவுரிங் & லேடி கர்சன் மருத்துவமனைகள் ) உள்ளிட்ட தென்னிந்தியாவின் பல மருத்துவமனைகளில் மருத்துவர், தலைமை அறுவை சிகிச்சை நிபுணர், கண்காணிப்பாளர் ஆகிய பொறுப்புகளில் கோபாலன் பணியாற்றினார். 1896இல் கேரளம் திரும்பிய இவர், கோழிக்கோடு லுனாடிக் புகலிடம் (இப்போது குதிரை வட்டம் மனநல மருத்துவமனை ) என்ற மருத்துவமனையில் அதன் முதல் கண்காணிப்பாளராக சேர்ந்தார். இதற்கிடையில், சாதி, இன பாகுபாடு, தீங்கிழைக்கும் பழக்கவழக்கங்கள் மற்றும் சமூக அநீதிகள் கேரளாவில் நடைமுறையில் இருந்தன. மேலும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான அட்டூழியங்கள் உச்சத்தில் இருந்தன.
கோபாலன் தனது சீர்திருத்த சித்தாந்தங்களை விரிவுபடுத்தினார். பிரம்ம சமாஜின் முதல் கிளையை 1898 சனவரி 17 அன்று நிறுவியதன் மூலம் தனது சீர்திருத்த நடவடிக்கைகளை [15][16][17][18][19] கோழிக்கோட்டில் பரப்பினார். சமாஜத்தின் கூட்டங்களையும் பிரார்த்தனைகளையும் நடத்த, ஒரு தனி பிரம்மமந்திர் என்ற கூடம் (இப்போது அய்யத்தான் கோபாலன் நினைவு பள்ளி) ஒன்றை நிறுவினார்.[20] இது 1900 அக்டோபர் 17 அன்று பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது. இந்தக் கட்டிடத்தை கோழிகோட்டின் சாமூத்திரி மன்னர் மன விக்ரமன் எட்டன் தம்புரான் திறந்து வைத்தார்.[21]
பிரம்ம சமாஜத்தின் இரண்டாவது கிளை 1924 இல் ஆலப்புழாவில் நிறுவப்பட்டது. 1928 ஆம் ஆண்டில் கொம்மாடி, ஆலப்புழாவில் (இப்போது கிருகலட்சுமி காந்தி சமாரக சேவா சங்கம்) பூந்தோப்பு என்ற இடத்தில் ஒரு தனி பிரம்மமந்திர் கட்டப்பட்டது, இந்த நிலத்தை ஆலப்புழாவின் நில உரிமையாளர் (ஜென்மி) மற்றும் கோபாலனின் நண்பர் மங்களத்து கொச்சும்மணி சாணார் ஆகியோர் நன்கொடையாக வழங்கினர். சாணார் ஒரு காலத்தில் நாராயண குருவை தீவிரமாகப் பின்பற்றுபவராக இருந்தார். ஆனால் பின்னர் பிரம்ம சமாஜத்தின் சீர்திருத்த நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டு கோபாலனுடன் இணைந்தார். அவரது மகள் மருத்துவர். எம்.சி.மந்தாகினி பாய், ஆலப்புழா பிரம்ம சமாஜத்தில் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கினார். மேலும் கோபாலனின் மூன்றாவது மகன் தேவதத் அய்யத்தானை மணந்தார். தெற்கு கேரளாவில் மிசுர விவாக வழக்கத்தை பிரபலப்படுத்திய ஆலப்புழா பிரம்ம சமாஜத்தில் நடத்தப்பட்ட முதல் பிரம்ம திருமணம் இதுவாகும்.
பின்னர் பிரம்ம சமாஜ கிளைகள் ஆலத்தூர், தலச்சேரி மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளிலும் அமைக்கப்பட்டன.
சுகனவர்தினி இயக்கம்:
[தொகு]1900 ஆம் ஆண்டில், கோபாலன் தனது மனைவி கௌசல்யா அம்மாளுடன் சேர்ந்து சுகனவர்தினி இயக்கத்தைத் தொடங்கி, சமூக சீர்திருத்த நடவடிக்கைகளை விரிவுபடுத்தினர். இந்த இயக்கத்தின் மூலம், குழந்தைகளில் மனித விழுமியங்களை வளர்ப்பதற்கும், குழந்தைகளை தனது சமூக நடவடிக்கைகளுக்கு ஈர்ப்பதற்கும், பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், பெண்களுக்கும் சமூகத்தின் ஓரங்கட்டப்பட்ட பிரிவினருக்கும், குறிப்பாக கேரளாவில் உள்ள தலித் சமூகங்களுக்கு இலவச கல்வியை வழங்கவும் இவர் பணியாற்றினார். அந்தக் காலகட்டத்தில் பிராமணர்கள், நாயர்கள் போன்ற உயர் சாதியினரால் தலித்துகள் மோசமாக நடத்தப்பட்டனர். பெண்களுக்கும் சமூகத்தின் கீழ்மட்ட பிரிவினருக்கும் கல்வி கற்பிக்கும் நோக்கத்துடன் லேடி சந்தாவார்க்கர் தொடக்கப் பள்ளியை நிறுவினார். இவரது வீடான சாந்தி ஆசிரமத்தில் வாராந்திர கூட்டங்கள் நடத்தப்பட்டன. பெண்கள், குழந்தைகள் , அனைத்து பின்னணியிலிருந்தும் மக்கள் தங்கள் துயரங்களை கோபாலன், கௌசலையம்மாள் ஆகிய இருவரும் பகிர்ந்து கொண்டனர். கௌசல்யா அம்மாள் இறந்த பிறகு, இவரது மருமகள் மருத்துவர் எம். சி. மந்தாகினி பாய் தேவதத் பெண்களையும் சமூகத்தின் கீழ் வகுப்பினரையும் ஒன்றிணைத்து அவர்களின் சமூக உரிமைகளை உறுதிப்படுத்த உதவினார். இவர்தான் "மகளிர் அமைப்பு" என்ற கருத்தை முதலில் முன்மொழிந்து அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கப் பணியாற்றினார்.
பெண்களுக்கும் நலிந்தவர்களுக்கும் ஆதரவளிப்பதும் கல்வி கற்பதும் மட்டுமல்லாமல், இவர்களின் இயக்கம் உருவ வழிபாட்டை எதிர்ப்பதற்கு சீர்திருத்தங்களை வழிநடத்தியது; மிசுர விவாகம் (சாதியினருக்கு இடையிலான திருமணங்கள்) மற்றும் மிசுர போஜனம் (சமபந்தி-உணவு) ஆகியவற்றை ஊக்குவித்தல், நடத்துதல்; பெண் கல்வியைப் பரப்புதல்; பாலின சமத்துவத்தை பேணுதல்; தீண்டாமை, சாதி மற்றும் இன பாகுபாட்டை ஒழித்தல்; வெகுஜன பிரார்த்தனைகள், ஒற்றுமை விவாதங்களை நடத்துதல் போன்ற பணிகள்.
மலபாரில் சுகனவர்தினியும் பிரம்மசமாஜத்தின் தாக்கமும்
[தொகு]பிரம்ம சமாஜத்தில் பாடிய பிரார்த்தனைகளுக்கான பாடல்கள் கோபாலனால் இயற்றப்பட்டன. மேலும் இது கீர்த்தனரத்னமாலை என்ற புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. இவர் பிரம்ம சமாஜாத்தில் பல சாதித் திருமணங்களை நடத்தினார். மேலும் சிலை அல்லாத வழிபாட்டை ஊக்குவிக்க பணியாற்றினார். வங்காள மொழியில் மகரிசி தேபேந்திரநாத் தாகூர் எழுதிய பிரம்மசமாஜத்தின் விவிலியம் என்று அழைக்கப்படும் "பிரம்மதர்மம்" என்பதை இவர் மலையாளத்தில் மொழிபெயர்த்தார். நாடகங்கள், பொது விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் எழுத்துக்களை நடத்துவதன் மூலம் தனது சீர்திருத்தவாத சித்தாந்தங்களை ஊக்குவித்தார்.
மருத்துவர் கோபாலன் சிவயோகியிடம் பிரம்ம பிரார்த்தனைக் கூட்டங்களுக்கு வழிபாட்டுக்காக பாடல்களையும் பாடல்களின் தொகுப்புகளையும் எழுதுமாறு கேட்டுக்கொண்டார். சிவயோகி இவரது கோரிக்கையை ஏற்று "பிரம்ம சங்கீர்த்தனம்" என்பதை எழுதினார். இது பிரார்த்தனைக்கான பாடல்களின் தொகுப்பாகும். கோபாலன் அவரது ஆன்மீக, இலக்கிய அறிவை அங்கீகரிப்பதற்காகவும், பிரம்மசமாஜம் மூலம் அவர்களின் சமூக சேவைகளை விரிவுபடுத்தியதற்காகவும் அவரை "பிரம்மானந்த சுவாமிகள்" என்று கௌரவித்தார்.
நாராயணகுருவால் நிறுவப்பட்டு, அதே நேரத்தில் செல்வாக்கு செலுத்திய,[22][23] சுகனவர்தினி இயக்கம், பிரம்ம சமாஜம் ஆகியவை பெரும்பாலும் அறிஞர்களால் ஆனவை. இதில் பிரம்மானந்த சுவாமி சிவயோகி, வாக்பதானாந்தா குரு, பிரம்மவடி பி. குஞ்ஞிராமன் ஆகியோர் சீர்திருத்தத்திற்கு மிகவும் மதச்சார்பற்ற அணுகுமுறையுடன் இருந்தனர்.
கோபாலன், உருவ வழிபாடு, கோயில் கட்டடம் ஆகியவற்றின் மீது வெறுப்புடன் இருந்தாலும், நாராயணகுருவுடன் சேரவில்லை. சிறீ நாராயண இயக்கத்தின் சமூக பொருத்தத்தை உணர்ந்ததால் கோபாலனும் அதை எதிர்க்கவில்லை. சமூக சீர்திருத்தம் தனது வாழ்க்கை முறை என்பதை கோபாலன் உணர்ந்தார். மேலும் தேசிய இயக்கத்திலோ போராட்டங்களிலோ பங்கேற்கவில்லை.
1917 சூன் 4 அன்று கோபாலனின் சமூக, மனிதாபிமான சேவைகளுக்காக பிரிட்டிசு அரசாங்கத்தால் மிக உயர்ந்த குடிமை விருதான ராவ் சாகிப்,[4][5][6][7] என்ற பட்டத்துடன் கௌரவிக்கப்பட்டார்.
மேலும் காண்க
[தொகு]- அய்யத்தான் ஜானகி அம்மாள்
- மிதவாதி கிருட்டிணன்
- நாராயணகுரு
- பத்மநாபன் பல்பு
- குமரன் ஆசான்
- அய்யன்காளி
- அய்யா வைகுண்டர்
- பண்டிதர் கருப்பன்
குறிப்புகள்
[தொகு]- ↑ "sivayogi". 29 April 2013.
- ↑ Kurup, K. K. N. (1988). "Kurup, K. K. N. (September 1988). "Peasantry and the Anti-Imperialist Struggles in Kerala".". Social Scientist 16 (9): 35–45. doi:10.2307/3517171.
- ↑ "Vagbhatananda".
- ↑ 4.0 4.1 "British India: INDIAN TITLE BADGE (MYB # 327), RAO BAHADUR & RAO SAHIB MEDALS". worldofcoins.eu. Retrieved 18 October 2014.
- ↑ 5.0 5.1 "rai sahib".
- ↑ 6.0 6.1 "medal".
- ↑ 7.0 7.1 "rao sahib".
- ↑ Introduction to the Constitution of India By Sharma, Sharma B.k.. 2007. p. 83.
- ↑ Kaur, Madanjit (2008). Maharaja Ranjit Singh.
- ↑ Modern Kerala, Studies in social and agrarian relations (1988). Modern Kerala:Studies in social and agrarian relations. by K.K.N.Kurup. mittal publications 1988: K.K.N.Kurup. 1988. p. 86.
- ↑ Nazir, Parwez (2011). "Raja Ram Mohan Roy: Social Reform and Empowerment of Women". Journal of Exclusion Studies 1 (2): 1. doi:10.5958/j.2231-4547.1.2.013. பன்னாட்டுத் தர தொடர் எண்:2231-4547.
- ↑ Hatcher, Brian A. (1 January 2008), "Debendranath Tagore and the Tattvabodhinī Sabhā", Bourgeouis Hinduism, or Faith of the Modern Vedantists, Oxford University Press, pp. 33–48, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/acprof:oso/9780195326086.003.0003, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780195326086
- ↑ Killingley, Dermot (27 June 2019), "Rammohun Roy and the Bengal Renaissance", The Oxford History of Hinduism: Modern Hinduism, Oxford University Press, pp. 36–53, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/oso/9780198790839.003.0003, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780198790839
- ↑ "Rabindranath Tagore: His Life and Thought", The Philosophy of Rabindranath Tagore, Routledge, 24 February 2016, pp. 1–17, எண்ணிம ஆவணச் சுட்டி:10.4324/9781315554709-1, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781315554709
- ↑ Bose, Ram Chandra. Brahmoism; or, History of reformed Hinduism from its origin in 1830. Funk & Wagnalls.
- ↑ "brahmosamaj".
- ↑ "brahmosamajnet".
- ↑ "brahmosamaj".
- ↑ "brahmosamaj".
- ↑ "Ayathan school runs under the patronage of Brahmosamaj".
- ↑ Krishna Ayyar, K. V., 1894-. The zamorins of Calicut: from the earliest times down to A.D. 1806. Publication Division, University of Calicut.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link) - ↑ "narayana guru".
- ↑ Narayana Guru. doi:10.1163/2212-5019_beh_com_9000000256.