உள்ளடக்கத்துக்குச் செல்

அன்னா இயோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாண்புமிகு
அன்னா இயோ
Hannah Yeoh
அன்னா இயோ
மலேசிய இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
3 டிசம்பர் 2022
ஆட்சியாளர்சுல்தான் அப்துல்லா
பிரதமர்அன்வார் இப்ராகிம்
முன்னையவர்அகமத் பைசல் அசுமு
தொகுதிசிகாம்புட்
பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு துணை அமைச்சர்
பதவியில்
2 சூலை 2018 – 24 பிப்ரவரி 2020
10-ஆவது சிலாங்கூர் மாநில சட்டமன்ற சபாநாயகர்
பதவியில்
21 சூன் 2013 – 9 ஏப்ரல் 2018
தேசிய ஊடக உதவிச் செயலாளர்
ஜனநாயக செயல் கட்சி
பதவியில் உள்ளார்
பதவியில்
20 மார்ச் 2022
சிகாம்புட் மக்களவைத் தொகுதி
பதவியில் உள்ளார்
பதவியில்
9 மே 2018
பெரும்பான்மை59,684 (2022)
45,702 (2018)
சுபாங் ஜெயா சட்டமன்றத் தொகுதி
பதவியில்
8 மார்ச் 2008 – 9 மே 2018
பெரும்பான்மை28,069 (2013)
13,851 (2008)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
அன்னா இயோ சியோவ் சுவான்

9 சனவரி 1979 (1979-01-09) (அகவை 45)
சுபாங் ஜெயா; மலேசியா
அரசியல் கட்சிஜனநாயக செயல் கட்சி (DAP)
பிற அரசியல்
தொடர்புகள்
பாக்காத்தான் ராக்யாட் (PR)
(–2015)
பாக்காத்தான் அரப்பான் (PH)
(2015 முதல்)
துணைவர்
ராமச்சந்திரன் முனியாண்டி (தி. 2008)
பிள்ளைகள்2
முன்னாள் கல்லூரிதாஸ்மானியா பல்கலைக்கழகம்
வேலைஅரசியல்வாதி
தொழில்வழக்கறிஞர்
இணையத்தளம்www.hannahyeoh.com
2013-ஆம் ஆண்டு பெட்டாலிங் ஜெயாவில் ஹன்னா இயோ

ஹன்னா இயோ (மலாய்: Hannah Yeoh; ஆங்கிலம்: Hannah Yeoh Tseow Suan; சீனம்: 杨巧双); (பிறப்பு: சனவரி 9 1979); என்பவர் ஒரு மலேசிய அரசியல்வாதி ஆவார். 2022 டிசம்பர் 3-ஆம் தேதி முதல் மலேசிய அமைச்சரவையில் மலேசிய இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சராகப் (Minister of Youth and Sports) பொறுப்பு ஏற்றுள்ளார்.

முன்னதாக, இவர் முன்னாள் பிரதமர் மகாதீர் பின் முகமது; மற்றும் முன்னாள் துணைப் பிரதமர் வான் அசிசா வான் இஸ்மாயில்; ஆகியோரின் கீழ் பாக்காத்தான் அரப்பான் (PH) நிர்வாகத்தில் பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு துணை அமைச்சராக (Deputy Minister of Women, Family and Community Development) சூலை 2018 முதல் பிப்ரவரி 2020 வரை பணியாற்றினார்.

மலேசியாவின் முதல் பெண் சட்டமன்றத் தலைவர்; மற்றும் 34 வயதில் மலேசியாவின் மிக இளைய வயது சட்டமன்றத் தலைவர் எனும் சாதனையையும் படைத்து உள்ளார்.

பொது

[தொகு]

இவர் சூன் 2013 முதல் ஏப்ரல் 2018 வரை சிலாங்கூர் மாநில சட்ட மன்றத்தின் 10-ஆவது சபாநாயகராகவும் (Speaker of the Selangor State Legislative Assembly), மார்ச் 2008 முதல் மே 2018 வரை சுபாங் ஜெயாவின் சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினராகவும் (MLA) பணியாற்றினார்.[1]

அவர் பாக்காத்தான் அரப்பான் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கக் கூட்டணியின் ஓர் அங்கமான ஜனநாயக செயல் கட்சியின் (DAP) உறுப்பினரும் ஆவார். மார்ச் 2022 முதல் ஜசெகவின் உதவி தேசிய விளம்பரச் செயலாளராகவும் பணியாற்றி உள்ளார்.

பின்னணி

[தொகு]

அன்னா இயோ, சுபாங் ஜெயாவில் (Subang Jaya) பிறந்தவர். சுபாங் ஜெயா தொடக்கப்பள்ளி, சுபாங் உத்தாமா இடைநிலைப் பள்ளியில் (SMK Subang Utama) படித்தவர். அதன் பிறகு ஆஸ்திரேலியாவில் உள்ள தாஸ்மானியா பல்கலைக்கழகத்தில் (University of Tasmania) தன் படிப்பைத் தொடர்ந்தார்.[2]

சட்டப் படிப்பை முடித்ததும்; 2001-ஆம் ஆண்டில் மலேசியாவில் வழக்கறிஞராக (Malaysian Bar) அங்கீகரிக்கப் பட்டார். சனவரி 2003-இல் தாஸ்மேனியாவில் வழக்கறிஞருக்கான சட்டப்பூர்வ நடைமுறைச் சான்றிதழைப் பெற்றார். அதன் பிறகு தாஸ்மேனியாவின் உச்ச நீதிமன்றத்தில் (Supreme Court of Tasmania) அனுமதிக்கப்பட்டார்.

2006-இல் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செயவதற்கு முன், பெட்டாலிங் ஜெயாவில் மூன்று ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

அரசியல் வாழ்க்கை

[தொகு]

மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம்

[தொகு]

இவரின் பள்ளித் தோழரான எட்வர்ட் லிங் (Edward Ling) என்பரால் அரசியல் உலகிற்குள் ஈர்க்கப்பட்டார். இருவரும் 2006-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஜனநாயக செயல் கட்சியின் டாமன்சாரா கிளையில் சேர்ந்தனர். ஜனநாயக செயல் கட்சி ஓர் எதிர்க்கட்சியாக இருந்தாலும் அதில் சேர அன்னா இயோ முடிவு செய்தார்.

எந்தவொரு விசாரணையும் இன்றி கைது செய்ய அனுமதிக்கும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தால் (Internal Security Act (Malaysia) ஜனநாயக செயல் கட்சியின் தலைவர்கள் அடிக்கடி அச்சுறுத்தப் பட்டாலும், அந்தக் கட்சியின் அரசியல் நிலைப்பாடு மிகவும் நிலையானது என்பதை உணர்ந்தார்.

டாமன்சாரா கிளைத் தலைவராக இருந்த மலேசிய அரசியல்வாதி டோனி புவா என்பவரால் ஈர்க்கப்பட்டு, ஜனநாயக செயல் கட்சியில் முழுநேரமாகச் சேவை செய்ய முடிவு செய்தார். டோனி புவாவின் அடிச் சுவடுகளைப் பின்பற்றி, 2008 பொதுத் தேர்தலுக்கு சற்று முன்பு, தன் வழக்கறிஞர் தொழிலைத் துறப்பு செய்தார்; முழு நேர அரசியல்வாதியாக மாறினார்.

மலேசியாவின் முதல் பெண் சபாநாயகர்

[தொகு]

2008 பொதுத் தேர்தலில் சுபாங் ஜெயாவின் தொகுதிக்கு சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.[3] 2013 பொதுத் தேர்தலில், சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினராக இரண்டாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்டார். [4]

அவரின் மறுதேர்தலுக்குப் பிறகு, 21 ஜூன் 2013-இல், சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்தில், மலேசியாவின் முதல் பெண் சபாநாயகராகப் பதவியேற்றார். அப்போது அவருக்கு வயது 34. அத்துடன் மலேசியாவின் மிக இளைய சபாநாயகர் எனும் பெயரையும் பெற்றார்.[5]

மலேசிய அமைச்சரவை பதவி

[தொகு]

2018-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில், சிகாம்புட் மக்களவைத் தொகுதியில் போட்டியிட ஜனநாயக செயல் கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தத் தேர்தலில் அவர் வெற்றி அடைந்தார்.

தேர்தலுக்குப் பின்னர் பாக்காத்தான் அரப்பான் கூட்டணி, அரசாங்க நிர்வாகப் பொறுப்பை ஏற்றதும், புதிய மலேசிய அமைச்சரவையில் அன்னா இயோ; பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுக்கான துணை அமைச்சராக (Deputy Minister of Women, Family, and Community Development) நியமிக்கப் பட்டார்.

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

அன்னா இயோவுக்கு 4 உடன்பிறப்புகள் உள்ளனர். இவர் ஒரு முன்னாள் வழக்கறிஞர். இவரின் கணவரின் பெயர் இராமச்சந்திரன் முனியாண்டி (Ramachandran Muniandy). இவருக்கு சாய் அதிரா ராம் (Shay Adora Ram) மற்றும் கயலி இமானி ராம் (Kayleigh Imani Ram) என இரண்டு மகள்கள் உள்ளனர்.[2][6]

தேர்தல் முடிவுகள்

[தொகு]
சிலாங்கூர் மாநில சட்டமன்றம்: N31 சுபாங் ஜெயா[7][8][9][10]
ஆண்டு வாக்குகள் % எதிரணி வாக்குகள் % வாக்குப் பதிவுகள் பெரும்
பான்மை
மொத்த வாக்குகள்
2008 ஹன்னா இயோ (ஜசெக) 23,459 70.94% ஓங் சோங் சுவான் (மசீச) 9,608 29.06% 33,067 13,851 79.31%
2013 ஹன்னா இயோ (ஜசெக) 40,366 '76.09% கான் மெங் பூ (மசீச) 12,297 23.17% 53,052 28,069 86.20%
மலேசிய நாடாளுமன்றம்: P117 சிகாம்புட் மக்களவைத் தொகுதி, கோலாலம்பூர்
ஆண்டு வாக்குகள் % எதிரணி வாக்குகள் % வாக்குப் பதிவுகள் பெரும்
பான்மை
மொத்த வாக்குகள்
2018 ஹன்னா இயோ (DAP) 53,124 82.07% லோக பால மோகன் (MyPPP) 7,422 11.47% 77,956 45,702 83.72%
முகமட் சோலே அப்துல் ரசாக் (PAS) 4,181 6.46%
2022 ஹன்னா இயோ (DAP) 68,438 80.05% பிரபாகரன் வைத்திலிங்கம் (GERAKAN) 8,754 10.24% 85,491 59,684 71.45%
டேனியல் லிங் சியா சின் (MCA) 8,304 9.71%

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Yeoh is Malaysia's youngest and first female state Speaker". The Star (Malaysia) (Star Publications). 22 June 2013. https://www.thestar.com.my/news/nation/2013/06/22/yeoh-is-malaysias-youngest-and-first-female-state-speaker/. 
  2. 2.0 2.1 "She holds a Bachelor of Laws and was a practising lawyer in Australia and Malaysia before venturing into politics". Biodata. பார்க்கப்பட்ட நாள் 13 December 2022.
  3. "Billi takes defeat in his stride". The Star (Malaysia) (Star Publications). 10 March 2008. https://www.thestar.com.my/news/community/2008/03/10/billi-takes-defeat-in-his-stride/. 
  4. Lourdes, Mark. "'Handyman' wants to move." பரணிடப்பட்டது 8 ஆகத்து 2007 at Archive.today, New Straits Times (Hosted on Lee Hwa Beng's Blog), 13 February 2008. Retrieved on 2008-06-27.
  5. "Hannah Yeoh Sworn In As Country's First Woman State Speaker". Malaysian Digest (malaysiandigest.com). 21 June 2013 இம் மூலத்தில் இருந்து 23 April 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180423103643/http://www.malaysiandigest.com/news/81182-hannah-yeoh-sworn-in-as-countrys-first-woman-state-speaker.html. 
  6. "Hannah is married to Ramachandran Muniandy and they are parents to two beautiful girls, Shay Adora and Kayleigh Imani". World Economic Forum (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 13 December 2022.
  7. "Keputusan Pilihan Raya Umum Parlimen/Dewan Undangan Negeri". Election Commission of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 27 May 2010. Percentage figures based on total turnout.
  8. "KEPUTUSAN PILIHAN RAYA UMUM 13". Sistem Pengurusan Maklumat Pilihan Raya Umum. Election Commission of Malaysia. Archived from the original on 14 மார்ச் 2021. பார்க்கப்பட்ட நாள் 24 March 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)Results only available for the 2013 Malaysian general election.
  9. "Malaysian Election Data". Malaysiakini. பார்க்கப்பட்ட நாள் 12 May 2013. Percentage figures based on total turnout.
  10. "SEMAKAN KEPUTUSAN PILIHAN RAYA UMUM KE - 14". Election Commission of Malaysia. Archived from the original on 13 செப்டம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 17 May 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help) Percentage figures based on total turnout.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னா_இயோ&oldid=4093743" இலிருந்து மீள்விக்கப்பட்டது