உள்ளடக்கத்துக்குச் செல்

அனுபமா சோப்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனுபமா சோப்ரா
2017இல் அனுபமா சோப்ரா
பிறப்புஅனுபமா சந்திரா
23 பெப்ரவரி 1967 (1967-02-23) (அகவை 57)
கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
கல்விமும்பை, செயின்ட் சேவியர் கல்லூரி; வடமேற்கு பல்கலைக்கழகத்தின் மெடில் இதழியல் பள்ளி
பணிஆசிரியர், பத்திரிகையாளர், திரைப்பட விமர்சகர்
வாழ்க்கைத்
துணை
விது வினோத் சோப்ரா (தி. 1990)
வலைத்தளம்
www.filmcompanion.in

அனுபமா சோப்ரா (Anupama Chopra) (பிறப்பு: 1967 பிப்ரவரி 23) இவர் ஓர் இந்திய எழுத்தாளரும், பத்திரிகையாளரும், திரைப்பட விமர்சகரும் மற்றும் மாமி மும்பை திரைப்பட விழாவின் இயக்குனருமாவார்.[1] டிஜிட்டல் தளமான பிலிம் கம்பானியன் என்பதின் நிறுவனரும் மற்றும் அதன் ஆசிரியருமவார். இது சினிமாவைப் பற்றிய ஒரு அழகிய தோற்றத்தை வழங்குகிறது.[2][3] இவர் இந்திய சினிமா குறித்து பல புத்தகங்களை எழுதியுள்ளார். மேலும், என்.டி.டி.வி, இந்தியா டுடே,[4] மற்றும் இந்துஸ்தான் டைம்ஸ் ஆகியவற்றில் திரைப்பட விமர்சகராக இருந்துள்ளார். ஸ்டார் வேர்ல்டில், தி ஃப்ரண்ட் ரோ வித் அனுபமா சோப்ரா என்ற வாராந்திர திரைப்பட விமர்சனம் நிகழ்ச்சியையும் இவர் தொகுத்து வழங்கினார்.[5] தனது முதல் புத்தகமான ஷோலே: தி மேக்கிங் ஆஃப் எ கிளாசிக் என்பது சினிமா குறித்த சிறந்த புத்தகத்திற்கான 2000இல் தேசிய திரைப்பட விருதை வென்றார். இவர் தற்போது திரைப்படங்களை விமர்சிக்கிறார். பிலிம் கம்பானியனுக்காக பிரபலங்களை நேர்காணல் செய்கிறார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பின்னணி

[தொகு]

இந்தியாவின் கொல்கத்தாவில் அனுபமா சந்திரா என்ற பெயரில் சந்திர பர்ஷாத் குடும்பத்தில் பிறந்த இவர், உத்தரப்பிரதேசத்தின் படாயூன் என்ற நகரத்தில் வசித்து வருகிறார். டெல்லியைச் சேர்ந்த அனுபமாவின் தந்தை நவின் சந்திரா, யூனியன் கார்பைட் நிறுவனத்தில் நிர்வாகியாக இருந்தார். இவரது தாயார் கம்னா சந்திரா ஒரு திரைக்கதை எழுத்தாளர்; பிரேம் ரோக் (1982) மற்றும் சாந்தினி (1989) போன்ற படங்களுக்கு உரையாடல்களை எழுதியுள்ளார். சோப்ரா தனது சகோதரர் மற்றும் சகோதரியுடன் மும்பையில் வளர்ந்தார். அங்கு இவரது குடும்பம் நேபாள கடல் சாலையிலும் பின்னர் கஃப் பரேடிலும் வசித்து வந்தது. இவரது சகோதரி தனுஜா சந்திரா ஒரு பாலிவுட் இயக்குனரும் மற்றும் திரைக்கதை எழுத்தாளருமாவார். இவரது சகோதரர் விக்ரம் சந்திரா ஒரு புதின ஆசிரியர், அவர் கலிபோர்னியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் தனது நேரத்தை பிரித்துக் கொண்டு பணியாற்றுகிறார். இவர் ஒரு இளைஞியாக பல ஆண்டுகள் ஹாங்காங்கில் வசித்து வந்தார். 1987 ஆம் ஆண்டில், மும்பை செயின்ட் சேவியர் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.

பின்னர், சோப்ரா வடமேற்கு பல்கலைக்கழகத்தின் மெடில் இதழியல் பள்ளியிலிருந்து பத்திரிகைத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். மெடிலில் இருந்தபோது "கல்விசார் சிறப்பம்சம் மற்றும் பத்திரிகை பத்திரிகைத் துறையில் வெற்றி பெறுவதற்கான வாக்குறுதி" என்பதற்காக ஹாரிங்டன் விருதை வென்றார். இவர், "திரைப்பட பத்திரிகை அந்த நேரத்தில் தீண்டத்தகாததாக இருந்தது. எல்லோரும் வெட்கப்பட்டார்கள், நான் திரைப்படத்திற்காக வேலை செய்தேன் என்பதை யாரும் ஒப்புக்கொள்ள விரும்பவில்லை என்று கூறினார்.. "

தொழில்

[தொகு]

தனது கல்விக்குப் பின்னர், சோப்ரா ஒரு திரைப்பட பத்திரிகையாளர் மற்றும் விமர்சகராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பல ஆண்டுகளாக பல திரைப்படங்களின் புத்தகங்களை எழுதியுள்ளார். குறிப்பாக பாலிவுட் அல்லது இந்தி சினிமா. அவர் 1993 முதல் இந்தி திரைப்படத் துறையைப் பற்றி எழுதினார். மேலும் அச்சு, தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் என பல ஊடகங்களில் சினிமாவை ஆராய்ந்தார். அவரது முதல் புத்தகம் ஷோலே: தி மேக்கிங் ஆஃப் எ கிளாசிக் (2000) 2001ஆம் ஆண்டு சினிமா குறித்த சிறந்த புத்தகத்திற்கான தேசிய திரைப்பட விருதை (இந்தியா) வென்றது.[6] தில்வாலே துல்ஹானியா லே ஜெயங்கே (தி பிரேவ் ஹார்ட் வில் டேக் தி ப்ரைட்) (2002) அவர்களின் நவீன கிளாசிக் தொடரின் ஒரு பகுதியாக பிரித்தன் திரைப்பட நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இவரது புத்தகம், கிங் ஆஃப் பாலிவுட்: சாருக் கான் மற்றும் இந்திய சினிமாவின் கவர்ச்சியான உலகம், நியூயார்க் டைம்ஸ் புத்தக மதிப்பாய்வின் ஆண்டு "எடிட்டர்ஸ் சாய்ஸ்" பட்டியலில் இடம்பெற்றது. இது ஜெர்மன், இந்தோனேசிய மற்றும் போலந்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

பாலிவுட் தயாரிப்பாளரும் இயக்குநருமான விது வினோத் சோப்ராவை அனுபமா திருமணம் செய்து கொண்டார்.[7] இவரது மகள் ஜூனி சோப்ரா (பிறப்பு 2001/2002) ஒரு புதினம் மற்றும் கவிதைகளில் இரண்டு புத்தகங்கள் உட்பட மூன்று புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது மகன் அக்னி தேவ் சோப்ரா ஒரு துடுப்பாட்ட வீரர் ஆவார்.

நூலியல்

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. Jio MAMI Film Festival
  2. Film Companion
  3. Film Companion Youtube
  4. Anupama Chopra, Consulting Editor, Films, NDTV பரணிடப்பட்டது 3 மே 2010 at the வந்தவழி இயந்திரம் NDTV website.
  5. "Anupama Chopra's review: Paan Singh Tomar". 2 March 2012 இம் மூலத்தில் இருந்து 6 மார்ச் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120306015534/http://www.hindustantimes.com/Entertainment/Reviews/Anupama-Chopra-s-review-Paan-Singh-Tomar/Article1-819886.aspx. 
  6. "48th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா.
  7. "Sleeping with the Enemy". OPEN. 8 May 2010. பார்க்கப்பட்ட நாள் 27 July 2014.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுபமா_சோப்ரா&oldid=3718123" இலிருந்து மீள்விக்கப்பட்டது