உள்ளடக்கத்துக்குச் செல்

அனில் பைரோஜியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனில் பைரோஜியா
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
23 மே 2019
முன்னையவர்சிந்தாமணி மாளவியா
தொகுதிஉஜ்ஜைனி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு14 சூலை 1971 (1971-07-14) (அகவை 52)
உஜ்ஜைன், மத்தியப் பிரதேசம், இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வாழிடம்(s)6, பாகத்நகர், தசரா மைதானம், உஜ்ஜைன், மத்தியப் பிரதேசம்
தொழில்அரசியல்வாதி

அனில் பைரோஜியா (Anil Firojiya; பிறப்பு சூலை 14,1971) மத்தியப் பிரதேசம் உஜ்ஜைனியினைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் ஆவார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

பைரோஜியா 1971 சூலை 14 அன்று மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனில் புரேலால் பைரோஜியாவுக்கும் ஜாவெத்ரிக்கும் மகனாகப் பிறந்தார். இவர் உஜ்ஜைன் அரசு மாதவ் கலை வர்த்தகக் கல்லூரியில் வணிக இளங்கலைப் பட்டம் பெற்றார். பைரோஜியா சந்தியாவினை மணந்தார். இந்த இணையருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்[1]

அரசியல் வாழ்க்கை[தொகு]

மத்தியப் பிரதேசச் சட்டப்பேரவை உறுப்பினராக[தொகு]

பைரோஜியா 2013 முதல் 2018 வரை உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள தாரானா சட்டமன்றத் தொகுதியிலிருந்து மத்தியப் பிரதேசச் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்.

மக்களவை உறுப்பினராக[தொகு]

பைரோஜியா 2019 இந்தியப் பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினராக உஜ்ஜைனி மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் பைரோஜியா 2024 இந்தியப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[2]

2019 சூலை 24 முதல், இவர் பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் நலக் குழுவில் உறுப்பினராக உள்ளார். இவர் உணவு, நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் பொது விநியோகம் தொடர்பான நிலைக்குழு மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் 13 செப்டம்பர் 2019 முதல் உள்ளார்.[1][3][4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Members : Lok Sabha". 164.100.47.194. பார்க்கப்பட்ட நாள் 13 September 2019.
  2. https://www.myneta.info/LokSabha2024/candidate.php?candidate_id=5170
  3. "Top RSS-BJP leaders reach Mahakal darbar". Free Press Journal. பார்க்கப்பட்ட நாள் 1 February 2020.
  4. "Anil Phirojiya(Bharatiya Janata Party(BJP)):Constituency- TARANA(UJJAIN) - Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 1 February 2020.
  5. "Ujjain: Shivraj spends three hours in Mahakal City ahead of 'Mission-2018'". Free Press Journal. பார்க்கப்பட்ட நாள் 1 February 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனில்_பைரோஜியா&oldid=4032877" இலிருந்து மீள்விக்கப்பட்டது