உள்ளடக்கத்துக்குச் செல்

அனிமேலியா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனிமேலியா
இயக்கம்சோபியா அலௌய்
தயாரிப்பு
  • மார்காக்சு லோரியர்
  • தௌபிக் ஆயாடி * கிறிசுடோப் பேரல்
கதைசோபியா அலௌய்
இசைஅமீன் பௌகாபா
நடிப்பு
  • இட்டோவாக ஓமாமா பாரிட் * அமீனாக மொகதி டெக்பி * பவாத் ஆக பவாத் ஓகாவ் * சவாத் கௌயி
ஒளிப்பதிவுநோ பாக்
படத்தொகுப்புகோலோயிசு பெல்லோகெட்
விநியோகம்விளம்பர விடம் விநியோகம்
வெளியீடு20 சனவரி 2023 (2023-01-20)(2023 சன்டான்சு திரைப்பட விழா பிரான்சு)
ஓட்டம்91 நிமிடங்கள்
நாடு
  • பிரான்சு* மொராக்கோ
மொழி
  • பிரஞ்சு * அரபு * பெர்பர்

அனிமேலியா (Animalia) என்பது 2023ஆம் ஆண்டு வெளியான பிரான்சு-மொராக்கோ அறிவியல் புனைகதை திரைப்படமாகும். சோபியா அலௌயி இயக்கிய முதல் திரைப்படம் இதுவாகும். இது அலௌயின் சோ வாட் இப் தி கோட்சு டை குறும்படத்தினை அடிப்படையாகக் கொண்டது. மொராக்கோ நடந்த வேற்று கிரக நிகழ்வுகள் நாட்டை குழப்பத்திற்குள் தள்ளியதால் தனது கணவர் அமீனுடன் மீண்டும் ஒன்றிணைய முயற்சிக்கும் கர்ப்பிணிப் பெண் இட்டோவின் (ஓமாமா பாரிட்) கதையாக இப்படம் அமைகின்றது.

இந்தப் படம் 20 சனவரி 2023 அன்று 2023 சன்டான்சு திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது. விமர்சகர்கள் குறிப்பாக இயக்கம், பாரிட் மற்றும் டெஹ்பியின் நடிப்பு மற்றும் இசையைப் பாராட்டினர். இதன் மூலம் இந்தப் படம் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்றது.[1][2]

நடிப்பு

[தொகு]
  • இட்டோவாக ஓமாமா பாரிட்
  • அமீனாக மொகதி டெக்பி
  • பவாத் ஆக பவாத் ஓகாவ்
  • சவாத் கௌயி

தயாரிப்பு

[தொகு]

முப்பத்தைந்து நாட்கள் படப்பிடிப்புக்குப் பிறகு 2021 நவம்பரில் ஆரம்பக்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது.[3] அனிமலியா ராங் பிலிம்சும் எஸ்ஆர்ஏபி பிலிம்சும் இதனைத் தயாரித்துள்ளது. மேலும் ஆர்ட் பிரான்சு சினிமாவும் மொராக்கோ நிறுவனங்களான ஜியாங்கோ பிலிம்சும், துனியா தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து இத்திரைப்படத்தினைத் தயாரித்துள்ளது.[4][5] இந்தப் படம் 'பர்மிநசு' ('அமங் அசு') என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது.[6] பன்னாட்டு வெளியீடு விற்பனையை டோட்டெம் பிலிம்சு கையாளுகிறது.[4]

வெளியீடு

[தொகு]

அனிமலியா உலக அளவில் வெளியீடானது 23 சனவரி 2023 அன்று 2023 சன்டான்சு திரைப்பட விழாவில் நடைபெற்றது.[7][8] இது 9 ஆகத்து 2023 அன்று பிரான்சில் ஆட் விட்டம் வெளியீட்டு நிறுவனம் மூலம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.[9]

வரவேற்பு

[தொகு]

விமர்சனம் திரட்டும் வலைத்தளமான ராட்டன் டொமாடோசில், 20 விமர்சகர்களின் விமர்சனங்களின் அடிப்படையில் இந்தப் படம் 100% ஒப்புதல் மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. சராசரி மதிப்பீடு 7.7/10.[10]

2023 கல்கரி பன்னாட்டுத் திரைப்பட விழாவில் இந்தப் படம் சிறந்த பன்னாட்டுத் திரைப்படத்திற்கான விருதை வென்றது.[11]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Khairy, Wael (March 2, 2023). "The Oneness of All Things: On Sofia Alaoui's Animalia". RogerEbert.com. Retrieved March 22, 2024.
  2. Kiang, Jessica (January 20, 2023). "'Animalia' Review: Aliens Invade the Art-house in an Impressively Atmospheric and Enigmatic Feature Debut". Variety. Retrieved March 22, 2024.
  3. Lemercier, Fabien (25 November 2021). "EXCLUSIVE: Sofia Alaoui's Animalia is now in post-production". Cineuropa. Retrieved 27 January 2023.
  4. 4.0 4.1 "Animalia" (in பிரெஞ்சு). Wrong Films. February 2023. Retrieved 11 August 2023.
  5. Lemercier, Fabien (23 January 2023). "Review: Animalia". Cineuropa. Retrieved 11 August 2023.
  6. San Frax, Julien (3 August 2023). "Bienvenue au Maroc, dans un film de SF mystique". Causeur (in பிரெஞ்சு). Retrieved 2 February 2024.
  7. D'Alessandro, Anthony; Patten, Dominic (7 December 2022). "Sundance Film Festival Lineup Set With Ukraine War, Little Richard, Michael J. Fox, Judy Blume Docs; Pics With Anne Hathaway, Emilia Clarke, Jonathan Majors; More". Deadline Hollywood. Retrieved 27 January 2023.
  8. Kudláč, Martin (8 December 2022). "An in-person Sundance returns with a raft of rising European voices". Cineuropa. Retrieved 27 January 2023.
  9. "Animalia, Les Avantages de voyager en train, Un coup de maître... : les films de la semaine aidés par le CNC" (in பிரெஞ்சு). CNC. 7 August 2023. Retrieved 10 August 2023.
  10. "Animalia". Rotten Tomatoes. Fandango Media. Retrieved 2 February 2024.
  11. Aryn Toombs, "Winners of 2023 CIFF competitions unveiled". LiveWire Calgary, 25 September 2023.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனிமேலியா_(திரைப்படம்)&oldid=4055842" இலிருந்து மீள்விக்கப்பட்டது