உள்ளடக்கத்துக்குச் செல்

அனசந்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனசந்திரம்
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635117

அனசந்திரம் (Anasandiram) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், மருதாண்டப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.

அமைவிடம்[தொகு]

அனசந்திரமானது கிருஷ்ணகிரி- பெங்களூர் சாலையில் சூளகிரியில் இருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவிலும், மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியிலிருந்து 37 கிலோமீட்டர் தொலைவிலும், மாநில தலைநகரான சென்னையிலிருந்து 292 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1]

பெருங்கற்காலச் சின்னங்கள்[தொகு]

அனசந்திரத்ல் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த கல்பதுக்கைகள் கண்டறியபட்டுள்ளன. இந்தக் கல்பதுக்கையில் மூடு கல்லில் குழிவடிவங்கள் உள்ளன. இந்த குழிவடிவங்கள் தேங்காய் சிரட்டையின் குழி அளவு உள்ளன. இவை மூடுகல் முழுவதும் சீரான இடைவெளியில் வெட்டப்பட்டுள்ளன. இதேபோன்ற குழிவடிவங்கள் வேடர் தட்டக்கலில் கண்டறியபட்ட கல்பதுக்கைகளிலும் காணப்படுகின்றன.[2]

மேற்கோள்[தொகு]

  1. "Anasandiram Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-11.
  2. த. பார்திபன், தென்பெண்ணை ஆற்றங்கரைக் கிருஷ்ணகிரி மாவட்ட வரலாறு பகுதி-II சங்க காலம். ஸ்ரீ விவேகானந்தர் கொடை மற்றும் அறகட்டளை, தருமபுரி. 2010 ஏப்ரல். p. 138. {{cite book}}: Check date values in: |year= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனசந்திரம்&oldid=3753543" இலிருந்து மீள்விக்கப்பட்டது