அத்தி பர்வதம்
அத்தி பர்வதம் | |
---|---|
![]() Hathi Parbat (on the right) from Gorson Bugyal | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 6,727 m (22,070 அடி)[1] |
புடைப்பு | 1,673 m (5,489 அடி)[1] |
பட்டியல்கள் | Ultra |
ஆள்கூறு | 30°41′06″N 79°42′21″E / 30.68500°N 79.70583°E[1][2] |
பெயரிடுதல் | |
தாயகப் பெயர் | हाथी पर्बत (Hindi) |
புவியியல் | |
அமைவிடம் | உத்தராகண்டம், இந்தியா |
மூலத் தொடர் | Garhwal Himalaya |
அத்தி பர்வதம் (Hathi Parbat, Hindi: हाथी पर्बत ) எலிஃபண்ட் பீக் என்றும் அழைக்கப்படுவது இந்தியாவில் உள்ள கர்வால் இமயமலையில் உள்ள ஒரு மலையாகும். இது உத்தரகண்ட்ட மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதன் உச்சி 6,727 மீட்டர்கள் (22,070 அடி) ) உயரம் கொண்டது.
தொன்மம்
[தொகு]அத்தி பர்வத்ததின் உச்சியில் உள்ள இரண்டு பெரிய பாறைகளின் தோற்றம் காகம் ( ககபுசுண்டி ), கழுகு ( கருடன் ) என ஒத்திருப்பதாக விவரிக்கப்படுகிறது. இராமாயணத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி பிரபஞ்ச விவகாரங்கள் குறித்து காகமும் கழுகும் உயிரோட்டமாக உரையாடுவதாக நம்பப்படுகிறது. தொன்மத்தின் மற்றொரு பதிப்பில் அயோத்தியின் ஒரு கற்றறிந்த பிராமணர் ஒருமுறை இங்கு வாழ்ந்த லோமச முனிவரின் கோபத்திற்கு ஆளானார். அதனால் முனிவரால் கொடுத்த சாபத்தினால் காகமாக அவர் மாறினார்.[சான்று தேவை]
அணுகல்
[தொகு]அத்தி பர்வதத்தை விஷ்ணுபிரயாகை அல்லது கங்காரியாவில் இருந்து அடையலாம், இது மலர்ப் பள்ளத்தாக்கிற்கு அருகில் உள்ளது. [3] கங்காரியாவில் இருந்து இதை அணுகுவது சற்று எளிதானது ஆனால் நீண்ட தொலைவானது. கோவிந்த்காட்டில் இருந்து, பியுந்தர் பள்ளத்தாக்கு மற்றும் பியுந்தர் கிராமம் வழியாக கங்காரியா வரை 18 கிமீ குதிரைப் பாதை உள்ளது. கக்புசுண்டி தால் மற்றும் குவாரி பர்வத் அத்தி பர்வதத்தின் அருகே அமைந்துள்ளது. அருகிலுள்ள இடங்கள் பியுந்தர், ஜெலம், ஷ்யாமா, ஜுமா ஆகும். அருகில் தௌலிகங்கா ஆறு ஓடுகிறது.[சான்று தேவை]
முதல் ஏற்றம்
[தொகு]சோனம் கியாட்சோ, லெப்டினன்ட். கௌஷால், எச்.சி. ராவத், தோண்டுப் செரிங், லக்பா டென்சிங், டி. எஸ். சிசோடியா, தவா நோர்பு, சோனம் வாங்கயால் ஆகியோர் அடங்கிய இந்தியக் குழு 1963 ஆம் ஆண்டு சூன் 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் அத்தி பர்வதத்தின் (22,070 அடிகள்) உச்சியை முதலில் அடைந்தது. [4]
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Listed as "Hathi Parvat" on Peaklist.org - Section 5: Himalaya between Sutlej River and Kali River (Nepal border). Retrieved 3 October 2011.
- ↑ "Hathi Parbat, India". Peakbagger.com. Retrieved 2009-12-05.
- ↑ http://www.india9.com/i9show/Hathi-Parbat-82306.htm
- ↑ AAC Publications - Asia, India, Tharkot, Kumaon and Hathi Parbat, Garhwal. 1965. http://publications.americanalpineclub.org/articles/12196547002/Asia-India-Tharkot-Kumaon-and-Hathi-Parbat-Garhwal.