அடப்பு
அடைப்பு அல்லது தனிஷ்டா பஞ்சமி என்பது இந்து சமய சாவுச்சடங்குகளில் ஒன்றாகும். அடப்பு ஏற்படும் காலங்களில் இறந்தவரின் ஆவியானது சொர்க்கத்திற்கோ, நரகத்திற்கோ செல்லும் வழியானது அடைக்கப்பட்டு விடுமென நம்பப்படுகிறது.
அடைப்பின் காலம்
[தொகு]ஒருவர் இறந்த பிறகு அவருடைய இறப்பின் நேரத்தினைக் கொண்டு ஜோதிடத்தின் மூலமாக அடப்பின் காலத்தினை கணிக்கின்றனர். ஒருவர் தன்னுடைய காலம் முடியும் முன்பே இறந்துவிட்டால் இவ்வாறு அடப்பு ஏற்படுவதாக நம்பப்படுகிறது. ஜோதிடர்களைக் கொண்டு கணித்தபடி அடப்பின் காலம் மாதக்கணக்கலும், வருடக்கணக்கிலும் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
அடைப்பு சடங்கு முறை
[தொகு]இந்தக் காலத்தில் அவர் வீட்டில் இறந்திருந்தால் அவர் படுத்திருந்த இடத்தில் ஒரு நிறை சொம்பில் நீர் வைத்தும், தீபம் ஏற்றியும் வருகிறார்கள். இந்தக் காலங்களில் நற்காரியங்களை செய்வதிலிருந்து விலக்களிக்கிறார்கள்.இந்த அடப்பு சடங்குமுறை ஆவி வழிபாட்டு முறையாகும்.
திண்ணை முறை
[தொகு]இந்த அடப்பு சடங்கில் திண்ணை என்றொரு முறையுள்ளது. இந்த முறையில் கோழியொன்றினை பலி கொடுத்து அதை சமைத்து உண்கிறார்கள். மாமன் மச்சான் உறவுக்காரர்கள் உண்ட கோழியின் எழும்பினை சவமாகக் கருதி அதனை திண்ணை போன்ற அமைப்பினை உருவாக்கி மூடி வைக்கின்றனர். இந்த சடங்கு ஆவிச்சடங்கில் சற்று அபாயகரமானது என்று நம்பப்படுகிறது. இந்தக் காலங்களில் இறந்தவர் அந்த இல்லத்திலேயே வாழ்கிறார் என்பது நம்பிக்கையாகும். இந்தக் காலங்கள் முடிந்தபிறகே எட்டுப்படைத்தல் நடைபெறுகிறது.
தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்கள்
[தொகு]சோதிடத்தின் அடிப்படையில் பதிமூன்று நட்சத்திரங்கள் தனிஷ்டா நட்சத்திரங்கள் ஆகும். தனிஷ்டா என்றால் அஷ்டமி என்று பொருள்.[1] [2]
இவற்றையும் காண்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- "இறந்தவர்களுக்கு அடைப்பு என்றால் என்ன? அக்காலத்தில் செய்ய சடங்கு முறைகள் - காணொளி (தமிழில்)
- திதி, திவசம் பற்றி சாஸ்திரம் என்ன சொல்கிறது தெரியுமா....?
ஆதாரங்கள்
[தொகு]- ↑ தனிஷ்டா பஞ்சமி சொல்லும் ரகசியம்: இந்த 13 நட்சத்திரங்களில் இறப்பு என்பது ஏன் சிக்கலானது?
- ↑ இறக்கும் நாளில் அடைப்பு நட்சத்திரங்கள் வந்துள்ளனவா? – பகுதி 2 – ஜோதிடர் என்.ஞானரதம் 9.2.2018 தினமலர் நாளேடு திருநெல்வேலி, நாகர்கோவில் பதிப்பு