அஞ்சில் ஆந்தையார்
அஞ்சில் ஆந்தையார் ஒரு சங்க காலத் தமிழ்ப் புலவர்.[1]
பெயர்க் காரணம்
[தொகு]ஆதன் தந்தை என்னும் சொற்கள் இணையும்போது ஆந்தை என அமையும் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. அஞ்சில் என்னும் ஊரில் வாழ்ந்த புலவர் இந்த ஆந்தையார்.[2]
பாடிய பாடல்கள்
[தொகு]சங்க இலக்கியங்களில் இவரது பெயரில் இரண்டு பாடல்கள் உள்ளன.
குறுந்தொகை: 294 நெய்தல்
[தொகு]பாடல் தரும் செய்தி: தலைவன் தலைவியோடு கடலாடினான். கானல் என்னும் கடற்பெருவெளியில் இவளுடன் தங்கியிருந்தான். தலைவி தன் தோழிமாரோடு சேர்ந்து தழூஉ ஆடும்போது இவனும் சேர்ந்து ஆடினான். ஏதோ தொடர்பு இல்லாதவன் போல வந்தவன் தலைவியைத் தழுவிக்கொண்டான். இவள் தன் உறுப்பை மறைக்க அணிந்துள்ள தழையாடை போல இவளை இவன் சுற்றிக்கொண்டிருக்கிறான். விளைவு தலைவியின் தாய் இவளைக் காப்பாற்றும் நிலை வந்துவிட்டது. இப்படித் தோழி தலைவனுக்குச் சொல்கிறாள்.
பாடல் தரும் செய்தி: தலைவன் தலைவி களவொழுக்கம் நீள்கிறது. தோழி தலைவியை எச்சரிக்கிறாள். கடுவனும் மந்தியும் நடுங்கும்படி குரங்குக்குட்டி மேக இருளில் மறைந்துகொள்ளும் நாட்டை உடையவன் தலைவன். உன்னுடைய நெஞ்சிலுள்ள ஈரத்தைத் தொட்டுப்பார். இவன் ஆன்றோர் சொல்லின்படி நடக்கும் சான்றோனா என்று எண்ணிப்பார். தெளிந்தபின் இவனோடு தொடர்பு கொள், என்கிறாள்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ கா., கோவிந்தன் (1964). சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை - கo. மாநகர்ப் புலவர்கள் -க. (மறுபதிப்பு) (PDF). திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட். p. 9-10.
- ↑ நற்றிணை 2, பாரி நிலையம், முதற்பதிப்பு : 1980, சென்னை 1 பக்க எண் 419
- ↑ "அஞ்சில் ஆந்தையார்". TAMIL VIRTUAL ACADEMY. தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved 29 September 2024.