அஜித் குமார்
அசித்து குமார் | |
---|---|
இயற் பெயர் | அசித்து குமார் |
பிறப்பு | மே 1, 1971 செகந்திராபாத், ஆந்திர பிரதேசம், இந்தியா (தற்போதைய தெலுங்கானா) |
பட்டப்பெயர்(கள்) | AK அல்டிமேட் ஸ்டார் |
நடிப்புக் காலம் | 1992 - தற்போது |
துணைவர் | சாலினி |
பிள்ளைகள் | அனுஷ்கா ஆத்விக்[1] |
பெற்றோர் | பி. சுப்பிரமணியம் (தந்தை) மோகினி (தாயார்) |
குறிப்பிடத்தக்க படங்கள் | காதல் கோட்டை வாலி வரலாறு பில்லா மங்காத்தா |
அசித்து குமார், (Ajith Kumar, பிறப்பு மே 1, 1971) தென்னிந்திய தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவரது இரசிகர்கள் இவரை அல்டிமேட் ஸ்டார் என்றும் AK என்றும் அழைக்கிறார்கள். அசித்து குமார், கார் பந்தயங்களிலும் பங்கு பெற்றுள்ளார். ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் இந்தியாவின் புகழ்பெற்ற மனிதர்கள் 2012 ஆம் ஆண்டு பட்டியலில் அசித்து குமார் 61ஆவது இடத்தினைப் பெற்றார்.[2] 2014 ஆவது ஆண்டிற்கான இப்பட்டியலில் 10 இடங்கள் முன்னேறி 51 ஆவது இடத்தைப் பிடித்தார்.[3] மேலும் 2013-வது ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய திரைப்பட நடிகரும் ஆவார்.[4]
வாழ்க்கைச் சுருக்கம்
அஜித் குமார், இந்தியாவின் செகந்திராபாத் நகரில் ஒரு தமிழ்த் தந்தைக்கும், ஒரு சிந்தி தாய்க்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார்.[5] இவர் தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பதன் மூலமே தமிழ் பேசக் கற்றுக்கொண்டார். 1986 இல் உயர்நிலைக் கல்வியை நிறைவு செய்யாமலேயே கல்வியை இடைநிறுத்தினார். அமர்க்களம் திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை சாலினியைக் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனோசுகா என்ற பெண் குழந்தையும், ஆத்விக் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.[6]
திரை வாழ்க்கை
தொடக்க காலங்களில் விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார். தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகும் முன்னர், 1992 இல் பிரேம புத்தகம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார். இந்தப் படத்தில் இவருக்கு சிறந்த புதுமுகத்திற்கான விருது கிடைத்தது. இதன் பின்னரே அமராவதி என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் படம் வெற்றி இல்லை. அடுத்த ஆண்டில் பாசமலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இதில் பவித்ரா திரைப்படம் இவருக்குக் குறிப்பிடத்தக்க திரைப்படமாக அமைந்தது. அஜித் குமாரின் முதல் வெற்றித் திரைப்படம் 1995 ஆவது ஆண்டில் வெளியான ஆசை திரைப்படமாகும். இடையில் மோட்டார் பந்தயம் ஒன்றில் போட்டியிட்டுப் படுகாயமடைந்தார். இதனால் நடிப்பில் தடை ஏற்பட்டது. அதன் பின்னர் சரண் இயக்கத்தில் 1998ஆம் ஆண்டில் வெளியான காதல் மன்னன் திரைப்படத்தின் மூலமாக மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.
2003–05
2003 முதல் 2005 வரை, அஜித் மோட்டார் பந்தயங்களில் அதிக முனைப்புடன் ஈடுபட்டது அதிக திரைப்படங்களில் நடிப்பதற்கு தடையாக அமைந்தது. இதனால் சில திரைப்படங்களில் மட்டுமே நடித்தார்.[7] 2003இல் நீண்ட தாமதற்குப் பின்னர் வெளியான என்னை தாலாட்ட வருவாளா திரைப்படமும், காவல்துறை அதிகாரியாக நடித்த ஆஞ்சநேயா திரைப்படமும் தோல்வியடைந்தது. மேலும், அந்த கால கட்டத்தில் சாமி, காக்க காக்க, கஜினி ஆகிய திரைப்படங்களில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பை பல்வேறு காரணங்களுக்காக தவிர்த்தார்.[8]
நடிகை சினேகாவுடன் இணைந்து நடித்த ஜனா திரைப்படம் ஒரு மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்தது. இக்காலகட்டத்தில் இவர் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த ஒரேயொரு திரைப்படம் சரண் இயக்கத்தில் வெளியான அட்டகாசம் திரைப்படம் மட்டுமே.[9] இப்படத்தில் அஜித்தின் இரட்டை கதாப்பாத்திரங்களின் நடிப்பும், " தல தீபாவளி" பாடலும் அஜித்தின் அதிரடி நாயகன் எனும் தகுதியை உயர்த்தியது. தொடர்ந்து 2005 ஆம் ஆண்டில், லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ஜி திரைப்படம் வணிக ரீதியாகத் தோல்வியைப் பெற்றாலும், இப்படத்திற்குக் கிடைத்த நேர்மறையான விமர்சனங்களும், இப்படம் பெற்ற ஒரு வலுவான தொடக்கமும் அஜித் மீண்டும் தனது திரை வாழ்க்கையை உறுதியாகத் தொடங்க உதவியது.[10][11] ஆக, 2003 முதல் 2005 வரையில் வெளியான ஐந்து படங்களில், அட்டகாசம் திரைப்படம் மட்டுமே வணிக ரீதியாக வெற்றியைப் பெற்றது.
2010–தற்போது வரை
2009 ஆவது ஆண்டில் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட அசல் திரைப்படம் 2010 பிப்ரவரியில் வெளியானது. அஜித் இரட்டை வேடங்களில் நடித்து மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியைப் பெறாமல் போனது.[12] இரண்டாவது முறையாக மோட்டார் பந்தயங்களில் கலந்து கொண்ட பின்னர் வெங்கட் பிரபுவின் மங்காத்தா திரைப்படத்தில் நடித்தார்.[13]
2017 ஆவது ஆண்டில் சிவா இயக்கத்தில் வெளியான விவேகம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதால் அடுத்ததாக சிவா இயக்கும் திரைப்படத்தில் நடிக்கமாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், சிவா இயக்கத்தில் விசுவாசம் எனும் புதிய திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இது அஜித் குமார், சிவா கூட்டணியின் நான்காவது திரைப்படமாகும்.
சர்ச்சைகள்
பிப்ரவரி 06, 2010 அன்று நிகழ்ந்த கருணாநிதி பாராட்டு விழாவில் நடிகர் அஜித்குமார் பேசும்போது திரையுலகினரை அரசியல் காரணங்களுக்காகத் திரைப்பட விழாக்களில் பங்கெடுக்குமாறு சிலர் மிரட்டுவதாகப் பகிரங்கமாகப் புகார் கூறினார். இதனால் அஜித்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. இந்த நிகழ்ச்சிகளுக்குப் பின்னர் அஜித், தவிர்க்க முடியாத சில நிகழ்ச்சிகளைத் தவிர மற்ற எந்த பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதில்லை.
உதவி
பல நல்ல காரியங்களுக்கு உதவிகள் செய்துள்ள இவர் 2014ஆம் ஆண்டு தனது வீட்டில் வேலை செய்பவர்கள் 12 பேருக்கும் வீடுகள் கட்டிக்கொடுத்து உதவி செய்துள்ளார்.[14]
இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம்
பாதுகாப்பான பயணத்தை வலியுறுத்தி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் 2013 ஆகஸ்டு 18 அன்று சென்னை முதல் பெங்களூர் வரையிலான இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணியில் பங்கேற்றார்.[15]
அறுவை சிகிச்சை
ஆரம்பம் திரைப்படத்தில் நடித்தபோது ஏற்பட்ட விபத்தின் காரணமாக முழங்கால் மற்றும் தோள்பட்டையில் அடிபட்டது. இதனால், 2015 நவம்பர் மாதத்தில் முழங்கால், மற்றும் தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.[16]
அரசியல்
பல்வேறு அரசியல் நிகழ்வுகளுடன் தொடர்பு படுத்தப்பட்டாலும் தொடர்ந்து அரசியலில் இருந்து விலகியே இருந்து வருகிறார்.
விருதுகள்
- அஜித் குமார் தாம் நடித்த முதல் தெலுங்கு படத்திற்காக (பிரேம புத்தகம்) பரத்முனி ஆர்ட் அகாதமியின் சிறந்த புதுமுக நடிகருக்கான விருதைப் பெற்றுள்ளார்.
- 1999 ஆம் ஆண்டு அஜித் குமார் வாலி படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருதையும், சினிமா எக்ஸ்பிரஸ் விருது மற்றும் தினகரன் திரைப்பட விருதையும் பெற்றுள்ளார்.
- 2000ஆம் ஆண்டு முகவரி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருதைப் பெற்றுள்ளார்.
- 2001 ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான மாநில அரசின் விருதை பூவெல்லாம் உன் வாசம் படத்திற்காக வென்றுள்ளார்.
- 2002ஆம் ஆண்டு வில்லன் படத்திற்காக சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது மற்றும் தினகரன் திரைப்பட விருதைப் பெற்றுள்ளார்.
- சிறந்த தென்னிந்திய நடிகருக்கான பிலிம்பேர் விருதை இருமுறைப் பெற்றுள்ளார். கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றுள்ளார்.
- 2011 ஆம் ஆண்டு மங்காத்தா திரைப்படத்தில் நடித்ததற்காக விஜய் விருதுகளின் சிறந்த எதிர்நாயகன் மற்றும் விருப்பமான நாயகன் என இரண்டு விருதுகளை பெற்றுள்ளார்.
- வென்றவை
- தமிழக அரசு சிறந்த நடிகருக்கான சிறப்பு திரைப்பட விருது - பூவெல்லாம் உன் வாசம் (2001)
- தமிழக அரசு எம்.ஜி.ஆர் திரைப்பட விருது - வரலாறு (2006)
- வென்றவை
- சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது - வாலி (1999)
- சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது - வில்லன் (2002)
- சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது - வரலாறு (2006)
- பரிந்துரைக்கப்பட்டது
- சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது - பில்லா (2007)
- சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது - மங்காத்தா (2011)
- வென்றவை
- விஜய் விருதுகள் (விருப்பமான நாயகன்) - வரலாறு (2006)
- விஜய் விருதுகள் (சிறந்த எதிர்நாயகன்) - மங்காத்தா (2011)
- விஜய் விருதுகள் (விருப்பமான நாயகன்) - மங்காத்தா (2011)
- பரிந்துரைக்கப்பட்டது
- விஜய் விருதுகள் (விருப்பமான நாயகன்) - பில்லா (2007)
- விஜய் விருதுகள் (விருப்பமான நாயகன்) - ஏகன் (2008)
- விஜய் விருதுகள் (விருப்பமான நாயகன்) - அசல் (2010)
- விஜய் விருதுகள் (விருப்பமான நாயகன்) - ஆரம்பம் (2013)
பிற விருதுகள்
- வென்றவை
- சிறந்த தமிழ் நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது - வாலி (1999)
- சிறந்த தமிழ் நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது - சிட்டிசன் (2001)
- சிறந்த தமிழ் நடிகருக்கான சென்னை டைம்ஸ் விருது - மங்காத்தா (2011)
திரைப்பட விபரம்
நடித்துள்ள திரைப்படங்கள்
இன்னும் வெளியாகாத திரைப்படங்கள் |
- குறிக்கப்பட்ட இரண்டு திரைப்படங்களைத் தவிர அனைத்தும் தமிழ்த் திரைப்படங்கள்.
வர்த்தக விளம்பரங்கள்
அஜித் குமார் திரைப்படங்கள் மட்டுமின்றி சில வர்த்தக விளம்பரங்களிலும் நடித்துள்ளார். தற்போது விளம்பரங்களில் நடிப்பதை முற்றிலும் தவிர்த்து விட்டார். இது இவர் நடித்துள்ள வர்த்தக விளம்பரங்களின் பட்டியலாகும்.
எண் | ஆண்டு | விளம்பரம் | பாத்திரம் | தயாரிப்பு | குறிப்புகள் |
---|---|---|---|---|---|
1 | மியாமி குசன்[76] | - | |||
2 | 2005 | நெஸ்லே சன்ரைஸ் | - | ராஜீவ் மேனன் | நடிகை சிம்ரனுடன் இணைந்து நடித்தது.[77] |
மேற்கோள்கள்
- ↑ [1]
- ↑ "இந்தியாவின் புகழ்பெற்ற மனிதர்கள் - ஃபோர்ப்ஸ் 2012". Archived from the original on 2014-09-26. பார்க்கப்பட்ட நாள் 2014-09-12.
- ↑ "2014 Ajith Forbes Ranking". Archived from the original on 2015-01-05.
- ↑ கூகுளில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய நடிகர்
- ↑ அஜித் குமார் உடனான நேர்காணல்
- ↑ அஜித் குமாருக்கு ஆண் குழந்தை
- ↑ Rao, Subha (24 November 2003). "A for attitude". The Hindu (Chennai, India) இம் மூலத்தில் இருந்து 25 செப்டம்பர் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110925172939/http://www.hindu.com/mp/2003/11/24/stories/2003112401580100.htm.
- ↑ "Mirattal Movie Gallery". Indiaglitz.
- ↑ "Attagasam leads the race". Indiaglitz. 16 November 2004. Archived from the original on 16 November 2004.
{{cite web}}
: Invalid|url-status=no
(help) - ↑ Pillai, Sreedhar (12 February 2005). "King of Opening is back!". The Hindu (Chennai, India) இம் மூலத்தில் இருந்து 3 செப்டம்பர் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090903024911/http://www.hindu.com/mp/2005/02/12/stories/2005021200420200.htm.
- ↑ "Ji' collapses, 'Constantine' rises!". Sify. 21 February 2005.
- ↑ "Ajith's 'Aasal' hits screens this Friday". Times of India. 2010 இம் மூலத்தில் இருந்து 12 பிப்ரவரி 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100212210225/http://movies.indiatimes.com/News-Gossip/Regional-/Tamil/Ajiths-Asal-hits-screens-this-Friday/articleshow/5526903.cms. பார்த்த நாள்: 2 February 2010.
- ↑ "MANKATHA TABLE SET FOR PLAY". Behindwoods. 2010. Archived from the original on 18 October 2010. பார்க்கப்பட்ட நாள் 16 October 2010.
{{cite web}}
: Invalid|url-status=no
(help) - ↑ வீட்டில் வேலை செய்யும் 12 பேருக்கு சொந்த வீடு- நடிகர் அஜீத் கட்டி கொடுத்தார்
- ↑ அஜித்தின் விழிப்புணர்வு பேரணி[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "அஜித் குமார் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்". இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளம். 7 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 2 சனவரி 2016.
- ↑ "Tamil celebrities who worked as child artists". The Times of India. 4 August 2015 இம் மூலத்தில் இருந்து 23 டிசம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161223112031/http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/photo-features/Tamil-celebrities-who-worked-as-child-artists/photostory/48344119.cms.
- ↑ 18.00 18.01 18.02 18.03 18.04 18.05 18.06 18.07 18.08 18.09 18.10 18.11 18.12 18.13 18.14 18.15 18.16 "ajith 56; Kadhal Puthakkam To Vedalam Special Article". web.archive.org. 2016-12-22. Archived from the original on 2016-12-22. பார்க்கப்பட்ட நாள் 2022-10-26.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ "Ajith's 50th film launched". Rediff.com. 6 August 2010. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2017.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archivedate=
(help) - ↑ Vijiyan, K. (19 December 1994). "Many flaws in this sentimental attempt". New Straits Times இம் மூலத்தில் இருந்து 13 மே 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160513021532/https://news.google.com/newspapers?id=zPlNAAAAIBAJ&sjid=jRMEAAAAIBAJ&pg=3195,3956746.
- ↑ Rajitha (4 April 1997). "The Star Next Door". Rediff.com. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2017.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archivedate=
(help) - ↑ Kumar, S. R. Ashok (7 January 2010). "Grill Mill: Interview with actor-choreographer Kalyan". The Hindu இம் மூலத்தில் இருந்து 23 டிசம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161223121253/http://www.thehindu.com/features/cinema/Grill-Mill-Interview-with-actor-choreographer-Kalyan/article16836379.ece.
- ↑ Nesam Tamil Full Movie (Motion picture). Ajith Kumar, Maheshwari, Goundamani. Pyramid Movies. 30 May 2014. பார்க்கப்பட்ட நாள் 31 December 2016.
{{cite AV media}}
: CS1 maint: others in cite AV media (notes) (link) - ↑ Raasi (Motion picture). Ajith Kumar, Rambha. Rajshri Productions. 24 March 2015. பார்க்கப்பட்ட நாள் 31 December 2016.
{{cite AV media}}
: CS1 maint: others in cite AV media (notes) (link) - ↑ Rettai Jadai Vayasu (Motion picture). Ajith Kumar, Manthra. Raj Video Vision Tamil. 10 August 2013. பார்க்கப்பட்ட நாள் 31 December 2016.
{{cite AV media}}
: CS1 maint: others in cite AV media (notes) (link) - ↑ Kadhal Mannan Tamil Full Movie (Motion picture). Ajith Kumar, Maanu, M. S. Viswanathan, Vivek. Pyramid Movies. 14 August 2015. பார்க்கப்பட்ட நாள் 31 December 2016.
{{cite AV media}}
: CS1 maint: others in cite AV media (notes) (link) - ↑ Aval Varuvala (Motion picture). Ajith Kumar, Simran. Rajshri Tamil. 22 June 2012. பார்க்கப்பட்ட நாள் 31 December 2016.
{{cite AV media}}
: CS1 maint: others in cite AV media (notes) (link) - ↑ Ramesh, Kala Krishnan (21 February 1999). "Tuvvi, tuvvi, tuvvi". Deccan Herald இம் மூலத்தில் இருந்து 22 March 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120322152641/http://www.cscsarchive.org:8081/MediaArchive/art.nsf/(docid)/93D12738A233F61165256941003DC8D0.
- ↑ S., Arul (25 April 1999). "Film Review". The New Indian Express இம் மூலத்தில் இருந்து 22 March 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120405015740/http://www.cscsarchive.org:8081/MediaArchive/art.nsf/(docid)/19E29EEB9C7D9F9B65256941003DC8F3.
- ↑ Kumar, S. R. Ashok (15 April 2000). "Star-spangled show on cards". The Hindu இம் மூலத்தில் இருந்து 27 நவம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141127033209/http://www.thehindu.com/thehindu/2000/04/15/stories/09150651.htm.
- ↑ Sebastian, Pradeep; K., Kavitha; Ramesh, Kala Krishnan (31 May 1999). "Film Reviews". Deccan Herald இம் மூலத்தில் இருந்து 22 March 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120322152641/http://www.cscsarchive.org:8081/MediaArchive/art.nsf/(docid)/93D12738A233F61165256941003DC8D0.
- ↑ Anantha Poongatre Tamil Full Movie (Motion picture). Ajith Kumar, Meena, Karthik, Malavika. Pyramid Movies. 30 May 2014. பார்க்கப்பட்ட நாள் 31 December 2016.
{{cite AV media}}
: CS1 maint: others in cite AV media (notes) (link) - ↑ Amarkalam (Motion picture). Ajith Kumar, Shalini. KTV. 28 January 2016. பார்க்கப்பட்ட நாள் 30 December 2016.
{{cite AV media}}
: CS1 maint: others in cite AV media (notes) (link) - ↑ Nee Varuvai Ena (Motion picture). Ajith Kumar, Devayani. KTV. 1 February 2016. பார்க்கப்பட்ட நாள் 30 December 2016.
{{cite AV media}}
: CS1 maint: others in cite AV media (notes) (link) - ↑ Rangarajan, Malathi (3 March 2000). "Film Review: Mugavaree". The Hindu இம் மூலத்தில் இருந்து 22 டிசம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161222113047/http://www.thehindu.com/2000/03/03/stories/09030223.htm.
- ↑ S. Theodore Baskaran (28 May 2000). "From the known to the unknown". The Hindu இம் மூலத்தில் இருந்து 31 டிசம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20161231103635/http://www.thehindu.com/2000/05/28/stories/09280223.htm.
- ↑ Rangarajan, Malathi (2 June 2000). "Film Review: Unnai Kodu Ennai Tharuvaen". The Hindu இம் மூலத்தில் இருந்து 25 டிசம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161225091055/http://www.thehindu.com/2000/06/02/stories/09020223.htm.
- ↑ Rangarajan, Malathi (2 February 2001). "Film Review: Dheena". The Hindu இம் மூலத்தில் இருந்து 25 டிசம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161225091144/http://www.thehindu.com/2001/02/02/stories/09020223.htm.
- ↑ Rangarajan, Malathi (15 June 2001). "Film Review: Citizen". The Hindu இம் மூலத்தில் இருந்து 19 மே 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150519052901/http://www.thehindu.com/2001/06/15/stories/09150222.htm.
- ↑ "The 49th Annual Filmfare Awards – South". Times Internet. Archived from the original on 19 April 2015.
- ↑ "Film Review: Poovellam Un Vaasam". The Hindu. 24 August 2001 இம் மூலத்தில் இருந்து 25 பிப்ரவரி 2005 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050225044038/http://www.thehindu.com/thehindu/2001/08/24/stories/09240222.htm.
- ↑ Mahadevan-Dasgupta, Uma (25 November 2001). "The Emperor's new clothes". The Hindu இம் மூலத்தில் இருந்து 10 ஜூன் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100610235828/http://www.thehindu.com/thehindu/mag/2001/11/25/stories/2001112500140200.htm.
- ↑ Rangarajan, Malathi (25 January 2002). ""Red"". The Hindu. Archived from the original on 25 டிசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2017.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archivedate=
(help) - ↑ Rangarajan, Malathi (12 July 2002). "Raja". The Hindu இம் மூலத்தில் இருந்து 25 டிசம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161225080608/http://www.thehindu.com/thehindu/fr/2002/07/12/stories/2002071200790200.htm.
- ↑ "Ajit, Simran bag Filmfare awards". The Times of India. Press Trust of India. 17 May 2003 இம் மூலத்தில் இருந்து 23 டிசம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161223121508/http://timesofindia.indiatimes.com/entertainment/bollywood/news-interviews/Ajit-Simran-bag-Filmfare-awards/articleshow/46685961.cms?referral=PM.
- ↑ Rangarajan, Malathi (15 November 2002). "Villain". The Hindu இம் மூலத்தில் இருந்து 25 டிசம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161225080812/http://www.thehindu.com/thehindu/fr/2002/11/15/stories/2002111501040201.htm.
- ↑ Rangarajan, Malathi (28 March 2003). ""Ennai Thalaata Varuvaala"". The Hindu இம் மூலத்தில் இருந்து 25 டிசம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161225081021/http://www.thehindu.com/thehindu/fr/2003/03/28/stories/2003032800990200.htm.
- ↑ Rangarajan, Malathi (7 November 2003). ""Anjaneya"". The Hindu இம் மூலத்தில் இருந்து 25 டிசம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20161225081317/http://www.thehindu.com/fr/2003/11/07/stories/2003110701210200.htm.
- ↑ Rangarajan, Malathi (7 May 2004). "Jana". The Hindu இம் மூலத்தில் இருந்து 25 டிசம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20161225081451/http://www.thehindu.com/fr/2004/05/07/stories/2004050701940301.htm.
- ↑ "Attakasam". Sify. 12 November 2004. Archived from the original on 3 ஜனவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2017.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archivedate=
(help) - ↑ Rangarajan, Malathi (18 February 2005). ""Ji"". The Hindu இம் மூலத்தில் இருந்து 25 டிசம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20161225082056/http://www.thehindu.com/thehindu/fr/2005/02/18/stories/2005021802320200.htm.
- ↑ Rangarajan, Malathi (20 January 2006). "Going in for a much-changed look". The Hindu இம் மூலத்தில் இருந்து 25 டிசம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161225092825/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/going-in-for-a-muchchanged-look/article3216813.ece.
- ↑ Rangarajan, Malathi (21 April 2006). "As stale as it gets — Tirupathi". The Hindu இம் மூலத்தில் இருந்து 25 டிசம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161225092624/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/as-stale-as-it-gets-tirupathi/article3217881.ece.
- ↑ "54th Filmfare Awards-Tamil". Sify. 31 July 2007. Archived from the original on 31 டிசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2017.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archivedate=
(help) - ↑ Rangarajan, Malathi (27 October 2006). "In the race, surely — Varalaaru". The Hindu இம் மூலத்தில் இருந்து 25 டிசம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161225092409/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/in-the-race-surely-varalaaru/article3231113.ece.
- ↑ Rangarajan, Malathi (19 January 2007). "Ire and fire all over again – Aazhwar". The Hindu இம் மூலத்தில் இருந்து 25 டிசம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161225090531/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/ire-and-fire-all-over-again-aazhwar/article2271259.ece.
- ↑ Rangarajan, Malathi (27 June 2007). "Whose crown is it, anyway? – Kireedam". The Hindu இம் மூலத்தில் இருந்து 25 டிசம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161225090239/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/whose-crown-is-it-anyway-kireedam/article2273150.ece.
- ↑ Pillai, Sreedhar (29 June 2008). "Filmfare Awards – And the nominations are". The Times of India.
- ↑ Rangarajan, Malathi (21 March 2007). "Billa beats boredom". The Hindu இம் மூலத்தில் இருந்து 25 டிசம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161225090056/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/billa-beats-boredom/article3024113.ece.
- ↑ Rangarajan, Malathi (31 October 2008). "Stylish sprint again — Aegan". The Hindu இம் மூலத்தில் இருந்து 23 டிசம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161223202633/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/Stylish-sprint-again-Aegan/article15400573.ece.
- ↑ Rao, Subha J. (12 February 2010). "Not the real thing". The Hindu இம் மூலத்தில் இருந்து 25 டிசம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161225085933/http://www.thehindu.com/features/cinema/Not-the-real-thing/article16814090.ece.
- ↑ Srinivasan, Pavithra (5 February 2010). "Review: Asal is for Ajith fans". Rediff.com. Archived from the original on 15 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2017.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archivedate=
(help) - ↑ "59th Filmfare Awards South". Filmfare Awards South. The Times Group.
- ↑ Rangarajan, Malathi (3 September 2011). "A gutsy game!". The Hindu இம் மூலத்தில் இருந்து 23 டிசம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161223115256/http://www.thehindu.com/features/cinema/a-gutsy-game/article2420824.ece.
- ↑ Subramanian, Karthik (14 July 2012). "Does 'Billa II' beckon?". The Hindu இம் மூலத்தில் இருந்து 23 டிசம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161223204529/http://www.thehindu.com/features/cinema/Does-Billa-II-beckon/article12642763.ece.
- ↑ Udasi, Harshikaa (18 August 2012). "An experience to remember". The Hindu இம் மூலத்தில் இருந்து 13 February 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170213070000/http://www.thehindu.com/features/cinema/an-experience-to-remember/article3790825.ece. பார்த்த நாள்: 13 February 2017.
- ↑ Kamath, Sudhish (26 October 2012). "English Vinglish: The Queen’s Speech". The Hindu இம் மூலத்தில் இருந்து 1 ஜூன் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130601040251/http://www.thehindu.com/features/cinema/english-vinglish-the-queens-speech/article3971783.ece.
- ↑ Baradwaj Rangan (4 November 2013). "Arrambam: Mission to "mass"". The Hindu இம் மூலத்தில் இருந்து 23 மார்ச் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140323022414/http://www.thehindu.com/features/cinema/cinema-reviews/arrambam-mission-to-mass/article5313603.ece.
- ↑ "61st Idea Filmfare Awards — Complete Nominations List". The Times of India. 12 July 2014 இம் மூலத்தில் இருந்து 1 அக்டோபர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151001111356/http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/61st-Idea-Filmfare-Awards-Complete-Nominations-List/articleshow/38267114.cms.
- ↑ Rangan, Baradwaj (11 January 2014). "Veeram: Generous helping of masala pongal". The Hindu இம் மூலத்தில் இருந்து 3 ஜூலை 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140703031114/http://www.thehindu.com/features/cinema/cinema-reviews/veeram-generous-helping-of-masala-pongal/article5566229.ece.
- ↑ "Nominations for the 62nd Britannia Filmfare Awards (South)". Filmfare. 3 June 2015. Archived from the original on 7 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2017.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archivedate=
(help) - ↑ "Nominations for the 63rd Britannia Filmfare Awards (South)". Filmfare. 7 June 2016. Archived from the original on 29 செப்டம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2017.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archivedate=
(help) - ↑ Subramanian, Karthik (5 February 2015). "‘Yennai Arindhaal’: Ending cop trilogy on a high". The Hindu இம் மூலத்தில் இருந்து 25 டிசம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161225084746/http://www.thehindu.com/entertainment/yennai-arindhaal-film-review-ending-cop-trilogy-on-a-high/article6860703.ece.
- ↑ Srinivasan, Sudhir (10 November 2015). "Vedhalam: Pulsating fight scenes, but predictable otherwise". The Hindu இம் மூலத்தில் இருந்து 25 டிசம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161225084525/http://www.thehindu.com/features/cinema/cinema-reviews/vedalam-pulsating-fight-scenes-but-predictable-otherwise/article7864955.ece.
- ↑ Ramanujam, Srinivasa (24 August 2017). "‘Vivegam’ review: Fast without fury". The Hindu இம் மூலத்தில் இருந்து 24 August 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170824082935/http://www.thehindu.com/entertainment/movies/vivegam-review-fast-without-fury/article19551775.ece.
- ↑ "மியாமி குசன்". யூ டியூப். பார்க்கப்பட்ட நாள் 13 திசம்பர் 2014.
- ↑ "நெஸ்லே சன்ரைஸ்". யூ டியூப்.காம். பார்க்கப்பட்ட நாள் 13 திசம்பர் 2014.
வெளி இணைப்புகள்
- அஜித் குமார் ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில்
- அதிகாரப்பூர்வ ரசிகர் மன்ற இணையத்தளம் பரணிடப்பட்டது 2005-10-01 at the வந்தவழி இயந்திரம்
- அஜித் ரசிகர்கள் இயக்கம்
- தலநகரம் ரசிகர்கள் இணையத்தளம் பரணிடப்பட்டது 2009-05-03 at the வந்தவழி இயந்திரம்
- திரை நிலா அஜித் - அஜித் ரசிகன் மாத இதழ் பரணிடப்பட்டது 2011-01-23 at the வந்தவழி இயந்திரம்
- எம்ஜிஆரும் அஜீத்தும் - சிறப்புக்கட்டுரை பரணிடப்பட்டது 2012-10-25 at the வந்தவழி இயந்திரம்