உள்ளடக்கத்துக்குச் செல்

அஜய்கர் சமஸ்தானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஜய்கர் சமஸ்தானம்
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா
1765–1949

Flag of அஜய்கர்

கொடி

Location of அஜய்கர்
Location of அஜய்கர்
தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியா வரைபடத்தில் அஜய்கர் சமஸ்தானம்
வரலாறு
 •  நிறுவப்பட்டது 1765
 •  இந்திய விடுதலை 1949
விந்திய பிரதேசத்தில் அஜய்கர்
அஜய்கர் இராச்சியத்தின் கார் எண் 17

அஜய்கர் சமஸ்தானம் (Ajaigarh State), இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இது தற்கால இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் வடகிழக்கில் உள்ள பன்னா மாவட்டப் பகுதிகளைக் கொண்டிருந்தது. இதன் தலைநகரம் அஜய்கர் நகரம் ஆகும். 1901-ஆம் ஆண்டில் அஜய்கர் இராச்சியம் 771 mile2 (1997 km2) பரப்பளவும், 78,236 மக்கள் தொகையும், ஆண்டு வருமானம் £ 15,000 ஆக இருந்தது. பிரித்தானிய இந்தியா]] அரசுக்கு ஆண்டு [[திறை]யாக £ 460 செலுத்தினர். இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 11 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர் \.

வரலாறு

[தொகு]

1765-ஆம் ஆண்டில் அஜய்கர் இராச்சியத்தை நிறுவியவர் ஜெயித்பூர் இராச்சியத்தின் உறவினரான குகுமான் சிங் ஆவார். பின்னர் 1809-ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற அஜய்கர் இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். மத்திய இந்திய முகமையின் கீழ் புந்தேல்கண்ட் முகமையின் கீழ் இருந்த அஜய்கர் இராச்சிய மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 11 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர்.

1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி அஜய்கர் இராச்சியம் 1 சனவரி 1950 அன்று இந்தியாவின் விந்தியப் பிரதேசத்துடன் இணைக்கப்பட்டது. [1] 1 நவம்பர் 1956 அன்று மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, அஜய்கர் இராச்சியம் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் இணைக்கப்பட்டது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ajaigarh Princely State (11 gun salute)". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2022-01-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜய்கர்_சமஸ்தானம்&oldid=3431252" இலிருந்து மீள்விக்கப்பட்டது