அசோகா குப்தா
அசோகா குப்தா | |
---|---|
பிறப்பு | நவம்பர் 1912 |
இறப்பு | 8 சூலை 2008 கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா |
தேசியம் | இந்தியன் |
பணி | சமூக சேவகர் |
பெற்றோர் | கிரண் சந்திரா சென் ஜோதிர்மாயி தேவி |
வாழ்க்கைத் துணை | சைபால் குமார் குப்தா |
பிள்ளைகள் | பார்த்தசாரதி குப்தா (மகன்) சகுந்தலா தாஸ் குப்தா (மகள்) கஸ்தூரி குப்தா மேனன் பிசாகா எகன் (மகள்) [1] |
அசோக குப்தா (Ashoka Gupta நவம்பர் 1912 - 8 சூலை 2008) ஓர் இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும் சமூக சேவகரும் ஆவார்.[2] இவர் மகிளா சேவா சமிதியின் நிறுவனர், அகில இந்தியப் பெண்கள் மாநாட்டின் உறுப்பினராகவும், இந்தியன் சொசைட்டி ஃபார் ஸ்பான்சர்ஷிப் அண்ட் அடாப்சன் அமைப்பின் தலைவராகவும் இருந்தார். [3] நோகாலி இனப்படுகொலையின் போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் பங்கேற்றார்.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]குப்தா ஆறு குழந்தைகளில் நான்காவதாக கிரண் சந்திர சென் மற்றும் ஜோதிர்மயி தேவி தம்பதியினருக்குப் பிறந்தார். சிறுவயதிலேயே இவரது தந்தை இறந்துவிட்டதால் தாயினால் வளர்க்கப்பட்டார். கொல்கத்தாவில் உள்ள செயின்ட் மார்கரெட் பள்ளியில் பயின்று, மெட்ரிகுலேஷன் தேர்வில் பெண்களில் முதலிடம் பிடித்தார். பெதுன் கல்லூரியில் கணிதத்தில் பட்டம் பெற்றார். 20 வயதில், ஐசிஎஸ் அதிகாரியான சைபல் குப்தாவை மணந்தார். [4]
தொழில் வாழ்க்கை
[தொகு]1936 இல், குப்தா 1927 இல் நிறுவப்பட்ட அகில இந்திய மகளிர் மாநாட்டின் உறுப்பினரானார். AIWC மற்றும் பல்வேறு பொதுநல அமைப்புகளின் கிளைகளை அமைப்பதில் தீவிரமாக பங்கேற்றார். 1943 ஆம் ஆண்டு வங்காளப் பஞ்சத்தின் போது, பங்குராவில் நிவாரணப் பணிகளில் பங்கேற்றார். 1945 இல், கணவரது பணிமாற்றம் காரணமாக சிட்டகாங்கிற்குச் சென்றார். [4] 1946 ஆம் ஆண்டில், நோகாலி இனப்படுகொலையின் போது, AIWC இன் சிட்டகாங் கிளை சார்பாக, நோகாலியில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக நிவாரணப் பணியாளர்களின் குழுவை வழிநடத்தினார்.
கௌரவங்கள்
[தொகு]2007 இல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக இவரது பணியை அங்கீகரிப்பதற்காக கௌரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டது . 2007 இல் ஜம்னாலால் பஜாஜ் விருது வழங்கப்பட்டது [5]
வெளியீடுகள்
[தொகு]- நோகலிர் துர்ஜோகர் டைன்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ashoka Gupta (2005). Gupta Ashoka: In the Path of Service: A memoir of a Social Worker. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788185604565. பார்க்கப்பட்ட நாள் October 6, 2019.
- ↑ "Gandhian Ashoka Gupta dead". The Indian Express. 9 July 2008. http://www.expressindia.com/latest-news/gandhian-ashoka-gupta-dead/333282/. பார்த்த நாள்: 18 September 2011.
- ↑ Sood, Saroj. "From the Desk of Founder Secretary Mrs. Saroj Sood". Indian Society for Sponsorship and Adoption. Archived from the original on 2 April 2012. பார்க்கப்பட்ட நாள் 18 September 2011.
- ↑ 4.0 4.1 "Gandhian Ashoka Gupta dead". The Indian Express. 9 July 2008. http://www.expressindia.com/latest-news/gandhian-ashoka-gupta-dead/333282/. பார்த்த நாள்: 18 September 2011.
- ↑ "Jamnanal Bajaj Award". Jamnanal Bajaj Foundation. 2015. பார்க்கப்பட்ட நாள் 13 October 2015.[தொடர்பிழந்த இணைப்பு]