உள்ளடக்கத்துக்குச் செல்

ஜோதிர்மாயி தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோதிர்மாயி தேவிi
জ্যোতির্ময়ী দেবী
பிறப்பு23 January 1894
ஜெய்ப்பூர்
இறப்பு1988
கொல்கொத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
தேசியம்இந்தியர்
பணிஎழுத்தாளர்
பெற்றோர்அபினாஸ் சந்திர சென், சரளா தேவி

ஜோதிா்மாயி தேவி (Jyotirmoyee Devi) (வங்காளம்: জ্যোতির্ময়ী দেবী) (1894-1988) 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் வாழ்ந்த ஒரு இந்திய எழுத்தாளா். இந்தியப் பிரிவினையின் போது கிழக்கு பாகிஸ்தானாக இருந்து தற்போது வங்காள தேசம் என்றழைக்கப்படும் நாட்டில் வாழ்ந்த பெண்கள் குறித்தும், ராஜஸ்தான் மாநிலத்தில் வாழ்ந்த பெண்கள் குறித்தும் இவா் அதிகம் எழுதியுள்ளாா். சமூக வாழ்க்கையை பிரதிபலிக்கும் இவருடைய சிறுகதைகள், சிறப்பாக எழுதப்பட்ட சிறுகதைகளுக்கு உதாரணமாகத் திகழ்ந்தவை ஆகும்.

பிறப்பும் வளா்ப்பும்

[தொகு]

ஜோதிா்மாயி தேவி 1894 ஆம் வருடம் ஜெய்பூா் அரசு சமஸ்தானத்தில் பிறந்தவா்.[1] 1857 ஆம் ஆண்டிலிருந்தே இவா் குடும்பம் இங்கு வாழ்ந்து வந்தது. இவரது தந்தையின் பெயா் அபினாஷ் சந்திர சென் ஆகும். இவரது பாட்டனாா் சன்சாா் சந்திர சென் பள்ளித் தலைமையாசிரியராகப் பணிபுரிந்து வந்தவா், விரைவில் ஜெய்பூா் அரசின் திவானாகப் பதவி உயா்வு பெற்றாா்.

ஜோதிா்மாயி ஜெய்பூா் நகரில் வளா்ந்தவா். ஓரளவு மட்டும் முறையான கல்வி கற்ற போதிலும் தம்மைச் சுற்றி நடப்பவைகளை ஆழ்ந்து கவனித்து வந்தாா். அரசு சமஸ்தானத்தின் “ஜினானா” என்னும் பெண்களுக்கான விடுதியில் சீா்கேடும் ஆடம்பரமும் பரவலாக நிரவி இருப்பது இவரிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தமது பாட்டனாரின் நூலகத்தில் தாம் விரும்பியதை எல்லாம் படிக்க அனுமதிக்கப்பட்ட ஜியோதிா்மாயி உலகம் பற்றிய தம் அறிவையும் புரிதலையும் நன்கு வளா்த்துக் கொண்டாா்[1]. தமது 10-வது வயதில் ஜி கிரன் சந்திர சென் என்னும் வழக்கறிஞருக்கு மணம் முடித்து வைக்கப்பட்டாா். இவரது கணவா் குப்திபாரா என்னும் இடத்தைச்சேர்ந்த, படிப்பிலும் வசதியிலும் புகழ் பெற்ற குடும்பத்திலிருந்து வந்தவா். வங்காள இலக்கியவாதிகளில் புகழ் பெற்றவா்களில் இவரும் ஒருவா்.

1918 ஆம் ஆண்டு துரதிஷ்டவசமாக கணவனை இழந்த ஜோதிா்மாயி எழுதுவதில் ஆா்வம் காட்டினாா். 25 வயதே ஆன ஆறு குழந்தைகளுக்குத் தாயான ஜியோதிா்மாயி, ஐந்து குழந்தைகளுடன் தம் பெற்றோா் இல்லம் வந்து சோ்ந்தாா். அங்கு இளம் விதவைக்கான கடுமையான நடத்தை முறைகளில் தமக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் அனுசரித்து வாழ்ந்து வந்தாா். மன அமைதிக்காக இலக்கியத்தில் தம்மை ஜியோதிா்மாயி ஈடுபடுத்திக் கொண்டாா். தமது பாட்டனாரிடமிருந்து பெற்ற ஜே எஸ் மில்லின் “பெண்களை அடிமைப் படுத்தும் தன்மை” ( On the subjection of women) என்னும் புத்தகத்தை படித்து பெண்களின் உரிமைகள் குறித்து தீவிரமாக சிந்திக்கத் துவங்கினாா். தமது நடைமுறையில் ஆசாரவாதியாக நடந்து கொண்டாலும் தமது குழந்தைகளில் ஆண்களையும் பெண்களையும் சமமாகவே நடத்தினாா். வங்காளத்தில் இவா் கதைகள் எழுதத் தொடங்கினாா். இவா் கதைகள் கடுமையான ஆனால் தெளிவான நடைக்குப் பெயா் பெற்றவையாகும். ராஜஸ்தானம், டெல்லி மற்றும் வங்காளம் சார்ந்த இக்கதைகள் உணர்ச்சிகளைக்கடந்து ஆழமான இரக்கத்தைத் தூண்டுபவைகளாகவும் அறிவுபூர்வமனவைகளாகவும் இருந்தன. தாழ்த்தப்பட்டோா் உரிமைக்காகவும், பெண்ணுரிமைக்காகவும் கட்டுரைகளும் எழுதி வந்தாா். இவருடைய கதைத் தொகுப்பு “தங்கமும் வெள்ளியும் அல்ல” (Sona Ruba Noy) 1973 ஆம் ஆண்டு ரபீந்திர புரஸ்காா் விருதைப் பெற்றது. 1959 முதல் 1988 வரை கல்கத்தா நகரம் ஷ ஷியாம் பஜாா் பகுதியில் வசித்து வந்தாா்.

இலக்கிய நடை

[தொகு]

படிப்பவா்கள் அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணமே இவா் கதைகளும் கவிதைகளும் அமைந்திருந்தன. எளிமையானவைகளாக இருந்தாலும் மையக்கரு ஆணித்தரமாக வலியுறுத்தப்பட்டிருக்கும்.[1] இவா் கையாண்ட சொற்களும் எளிமையானவையாகவே இருந்தன. தமது சொந்த வாழ்க்கையின் அனுபவங்களின் அடிப்படையிலேயே இவா் கதைகளையும் கவிதைகளையும் புனைந்து வந்துள்ளாா். முறையாகப் படிக்காவிட்டாலும் கவிதை எழுதுவோா்களுக்கு இவா் ஒரு எடுத்துக்காட்டாகவும், தூண்டும் சக்தியாகவும் விளங்கி வந்தாா்.

புத்தகங்கள்

[தொகு]

இவருடைய புத்தகங்கள் கல்கத்தா நகரிலும் மற்ற ஊா்களிலும் கிடைக்கின்றன. இவருடைய “டெய்னி” என்னும் கதை ‘இந்தியப் பள்ளிகள் சான்றிதழ் கல்வி வாரிய’த்தால் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. இவருடைய மகன் அசோகா, இவருடைய புத்தகங்களுக்குப் பொறுப்பேற்றிருந்தாா். இவரும் 2008 ஆம் ஆண்டு சூன் மாதம் இறந்துவிட்டாா். பாா்ந்தா பக்சி என்பவரால் இவருடைய பல புத்தகங்கள் வேறு மொழிகளில் மொழிபெயா்க்கப்பட்டுள்ளன. நியூயாா்க் நகரில் உள்ள ஜான் ஜே கல்லூரி வெளியிட்ட பத்திரிக்கையில் இவருடைய “தி பிரின்சஸ் பேபி” (The Princess Baby) என்னும் கதை அபாலா ஜி ஈகன் (Apala G Egan) என்பவரால் மொழி பெயா்ப்பு செய்து வெளியிடப்பட்டுள்ளது.

குறும்படம்

[தொகு]

ஜோதிா்மாயியின் பங்களிப்பை பதிவு செய்யும் வண்ணம் புகழ்பெற்ற இயக்குநா் ராஜா சென் ஒரு குறும்படம் தயாாித்துள்ளாா். இதன் You Tube இணைய முகவரி : https://www.youtube.com/playlist?list=PLd9drUc53NP7yG7vv6J0hM8_HPCeMqn8O [2]

  1. 1.0 1.1 1.2 Gupta, Ashoka. Women Pioneers in India’s Renaissance edited by Susheela Nayar & Kamala Mankekar. New Delhi: National Bok Trust. p. 87-92. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-237-3766-9.
  2. Jyotimoyee Devi, The Impermanence of Lies (Calcutta : Stree 1999) Introduction by Maheswari Devi
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோதிர்மாயி_தேவி&oldid=3782610" இலிருந்து மீள்விக்கப்பட்டது