அசுபக் அகமது
அஸ்பாக் அகமது Ashfaq Ahmed ( உருது: اشفاق احمد ; 22 ஆகஸ்ட் 1925 - 7 செப்டம்பர் 2004) ஒரு பாகிஸ்தானிய எழுத்தாளர், நாடக ஆசிரியர் மற்றும் ஒளிபரப்பாளர் ஆவார்.[1][2] இவர் உருது மொழியில் பல புத்தகங்களை எழுதினார். இவர் பாக்கிஸ்தானின் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகளில் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன. புதினங்கள், சிறுகதைகள் மற்றும் நாடகங்கள் போன்ற படைப்புகளிலும் ஈடுபட்டுள்ளார். இலக்கியம் மற்றும் ஒளிபரப்புத் துறையில் இவரின் பணியினைப் பாராட்டும் விதமாக ஜனாதிபதியிடம் இருந்து சிறந்த செயல் நலம் மிக்கவர் விருது மற்றும் சீதாரா-இ-இம்தியாஸ் (ஸ்டார் ஆஃப் எக்ஸலன்ஸ்) விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன.[3]
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]அகமது ஆகஸ்ட் 22, 1925 அன்று பிரித்தானிய இந்தியாவின் பஞ்சாபின் முக்த்சரில் பிறந்தார்,[1][4][5] மொஹமண்ட் பழங்குடியினரின் பஷ்டூன் குடும்பத்தில் இவர் பிறந்தார்.[6] இவர் தனது ஆரம்பக் கல்வியை தனது சொந்த மாவட்டமான முக்த்சரில் கல்வி பயின்றார் .[7] 1947 ல் இந்தியப் பிரிவினை காலத்திற்கு முன்பு அவரின் குடும்பம் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்து பஞ்சாபின் லாகூரில் குடியேறினர்.[8] அகமது லாகூர் அரசு கல்லூரியில் உருது இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். அவரது மனைவியும் தோழியுமான பானோ குட்சியா அரசு கல்லூரியில் அவரது வகுப்புத் தோழராக இருந்தார்.[9]
மேலும் அவரது தாய்மொழி பஞ்சாபி மொழியைத் தவிர உருது, ஆங்கிலம், இத்தாலியன் மற்றும் பிரெஞ்சு மொழிகளையும் பேச கற்றுக் கொண்டார்.[1]
தொழில்
[தொகு]இவர் தனது குழந்தைப் பருவத்திலேயே சில கதைகளை எழுதத் தொடங்கினார். பின்னர் அவரின் கதைகளை குழந்தைகளுக்கான இதழான ஃபூல் [மலர்] எனும் இதழில் வெளியிடப்பட்டன. பாக்கித்தான் வானொலியில் இவர் எழுத்தாளராக சேர்ந்தார். பாக்கிஸ்தான் அரசாங்கத்தால் பிரபல கவிஞர் சூஃபி குலாம் முஸ்தபா தபஸூமுக்கு பதிலாக பிரபல உருது வார இதழான லெயில்-ஓ-நஹரில் இவர் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.[1][2]
1962 ஆம் ஆண்டில அசுபக் அகமது தல்கீன் ஷா (தி பிரீச்சர்) எனும் வானொலி நிகழ்ச்சியினைத் துவங்கினார். இந்த நிகழ்ச்சியின் மூலம் நகரங்களிலும் கிராமங்களிலும் மக்கள் மத்தியில் அவரை பிரபலமாக்கியது.[1] இவர் 1966 ஆம் ஆண்டில் மார்க்காசி உருது வாரியத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். பின்னர் அந்த் அமைப்பு உருது அறிவியல் வாரியம் என்று பெயர் மாற்றப்பட்டது. அந்தப் பதவியில் இவர் 29 ஆண்டுகள் இருந்தார்.[8] இவர் 1979 வரை குழுவில் இருந்தார். ஜியா-உல்-ஹக்கின் ஆட்சியின் போது கல்வி அமைச்சகத்தில் இவர் ஆலோசகராகவும் பணியாற்றினார்.
வானொலி நாடகங்கள்
[தொகு]1962 ஆம் ஆண்டில் இவர் தல்கீன் ஷா எனும் வானொலி நிகழ்வில் கலந்துகொண்டார். மேலும் பைதக் எனும் நிகழ்ச்சியினையும் இவர் நிகழ்த்தினார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
[தொகு]உச்சய் புர்ஜ் லாகூர் தே [2] தாலி தல்லே மற்றும் 1970 ஆம் ஆண்டில் டோட்டா கஹானி [1] பின்பபு 1975 இல் ஐக் மொஹாபத் சவு அப்சனாய் [10]அவுர் டிராமே மற்றும் சேவியா ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இவரின் படைப்புகள் இடம்பெற்றன.
பிற்கால வாழ்க்கை, மரணம் மற்றும் மரபு
[தொகு]செப்டம்பர் 7, 2004 அன்று, அஷ்பக் அகமது கணைய புற்றுநோயால் இறந்தார். பாகிஸ்தானின் லாகூரில் உள்ள மாடல் டவுனில் இவர் அடக்கம் செய்யப்பட்டார்.[1]
விருதுகள் மற்றும் அங்கீகாரம்
[தொகு]இலக்கியம் மற்றும் ஒளிபரப்புத் துறையில் இவரின் பணியினைப் பாராட்டும் விதமாக ஜனாதிபதியிடம் இருந்து சிறந்த செயல் நலம் மிக்கவர் விருது மற்றும் சீதாரா-இ-இம்தியாஸ் (ஸ்டார் ஆஃப் எக்ஸலன்ஸ்) விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Ashfaq Ahmed remembered Dawn (newspaper), Published 16 September 2009, Retrieved 26 February 2019
- ↑ 2.0 2.1 2.2 "About Ashfaq". Zaviia.com website. பார்க்கப்பட்ட நாள் 26 February 2019.
- ↑ 3.0 3.1 ISLAMABAD: Tributes paid to Ashfaq Ahmed Dawn (newspaper), Published 1 November 2004, Retrieved 25 February 2019
- ↑ Iqbal, M 1999, Colours of Loneliness, Oxford University Press, p.391
- ↑ Colours of loneliness. Books.google.co.uk. பார்க்கப்பட்ட நாள் 13 March 2016.
- ↑ "The enigma behind the man". The News International (newspaper). பார்க்கப்பட்ட நாள் 26 February 2019., Biography of Ashfaq Ahmed
- ↑ "Ashfaq Ahmed". Pakistanconnections.com website. Archived from the original on 24 September 2015. பார்க்கப்பட்ட நாள் 26 February 2019.
- ↑ 8.0 8.1 "ASHFAQ AHMED – An Unforgettable Personality". Hamariweb.com. பார்க்கப்பட்ட நாள் 26 February 2019.
- ↑ "In life, in literature: the Siamese twins". Dawn (newspaper). 10 April 2011. பார்க்கப்பட்ட நாள் 26 February 2019.
- ↑ Nadeem F. Paracha (1 March 2015). "The sage, the populist and the dictator". Dawn (newspaper). பார்க்கப்பட்ட நாள் 26 February 2019.