அகதா ஆல் அலாங்கு
அகதா ஆல் அலாங் | |
---|---|
வகை | |
உருவாக்கம் | ஜாக் ஷாஃபர் |
மூலம் | அகதா ஹார்க்னஸ் படைத்தவர் |
இயக்கம் | ஜாக் ஷாஃபர் |
நடிப்பு |
|
பின்னணி இசை | கிறிஸ்டோப் பெக் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
தயாரிப்பு | |
நிருவாக தயாரிப்பு |
|
படப்பிடிப்பு தளங்கள் | |
ஒளிப்பதிவு |
|
தயாரிப்பு நிறுவனங்கள் | மார்வெல் தொலைக்காட்சி |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | டிஸ்னி+ |
Chronology | |
தொடர்புடைய தொடர்கள் |
அகதா ஆல் அலாங் (ஆங்கிலம்: Agatha All Along) என்பது மார்வெல் காமிக்சு கதாபாத்திரமான 'அகதா ஹார்க்னஸை' அடிப்படையாகக் கொண்ட அமெரிக்க நாட்டு குறுந்தொடர் ஆகும். இந்த தொடர் டிஸ்னி+க்காக ஜாக் ஷாஃபர் என்பவர் உருவாக்கியுள்ளார்.[1] இது மார்வெல் ஸ்டுடியோசு தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் 11வது தொடராகவும், 2021 ஆம் ஆண்டு வெளியான வாண்டாவிஷன்[2] என்ற தொடரின் வழித்தொடரும் ஆகும்.[3] அத்துடன் மார்வெல் தொலைக்காட்சி என்ற நிறுவனத்தின் உரிமையின் மூலம் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களின் தொடர்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறது.
நடிகை காத்ரின் ஹான் வாண்டாவிஷனில் இருந்து அகதா ஹார்க்னஸ் என்ற பாத்திரத்தில் மீண்டும் நடிக்க, இவருடன் ஜோ லோக், கிங்ஸ்லி பென்-அடிர், சஷீர் ஜமாதா, அலி அஹ்ன், மரியா டிசியா, பால் அடெல்ஸ்டீன், மைல்ஸ் குட்டிரெஸ்-ரிலே, ஓக்வோய் ஓக்போக்வாசிலி, டெப்ரா ஜோ ரூப், பட்டி லுபோன் மற்றும் ஆப்ரி பிளாசா போன்றோர் நடித்துள்ளார்கள்.[4]
அகதா ஆல் அலாங் தொடர் செப்டம்பர் 18, 2024 அன்று டிஸ்னி+ இல் அதன் முதல் இரண்டு அத்தியாயங்களுடன் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. மற்ற ஏழு அத்தியாயங்கள் நவம்பர் 6 வரை வாரந்தோறும் வெளியிடப்படும். அத்துடன் இது மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் ஐந்தாம் கட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும்.[5]
கதைச்சுருக்கம்
[தொகு]வாண்டாவிஷன் (2021) என்ற குறுந்தொடரின் முடிவில், நியூ ஜெர்சியில் உள்ள வெஸ்ட்வியூ நகரில் அகதா ஹார்க்னஸ் என்ற சூனியக்காரி சிக்கினார்.[6] இந்த தொடரில், புகழ்பெற்ற மந்திரவாதிகளின் சாலையின் சோதனைகளை எதிர்கொள்ள விரும்பும் இவர் ஒரு டீன் கோத்தின் உதவியுடன் அவள் தப்பிக்கிறாள். இவள் மாயாஜால சக்திகள் இல்லாமல், ஹார்க்னெஸ் மற்றும் டீன் ஏஜ் சோதனைகளை எதிர்கொள்ள மந்திரவாதிகளின் புதிய உடன்படிக்கையை உருவாக்குகிறார்கள்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Otterson, Joe (May 26, 2021). "'WandaVision' Head Writer Jac Schaeffer Sets Overall Deal With Marvel Studios, 20th Television". Variety. Archived from the original on May 26, 2021. Retrieved May 26, 2021.
- ↑ Coggan, Devan (November 10, 2020). "Honey, I'm Chrome: Marvel prepares to take over TV with WandaVision". Entertainment Weekly. Archived from the original on November 10, 2020. Retrieved November 10, 2020.
- ↑ Otterson, Joe (October 7, 2021). "'WandaVision' Spinoff Starring Kathryn Hahn in the Works at Disney Plus (Exclusive)". Variety. Archived from the original on October 7, 2021. Retrieved October 7, 2021.
- ↑ Coggan, Devin (August 23, 2019). "Kat Dennings, Randall Park, and Kathryn Hahn join Disney+'s WandaVision". Entertainment Weekly. Archived from the original on August 24, 2019. Retrieved August 24, 2019.
- ↑ Vary, Adam B. (July 23, 2022). "Marvel Studios' Phases 5 and 6: Everything We Learned at Comic-Con About the Multiverse Saga". Variety. Archived from the original on July 24, 2022. Retrieved July 24, 2022.
- ↑ Purslow, Matt (February 19, 2021). "WandaVision: Season 1, Episode 7 Review". IGN. Archived from the original on February 19, 2021. Retrieved February 19, 2021.
வெளிப்புற இணைப்புகள்
[தொகு]- டிஸ்னி+ அசல் நிகழ்ச்சிகள்
- அமெரிக்கத் தொலைக்காட்சித் தொடர்கள்
- ஆங்கிலத் தொலைக்காட்சித் தொடர்கள்
- மார்வெல் திரைப் பிரபஞ்ச தொலைக்காட்சி தொடர்கள்
- மார்வெல் திரைப் பிரபஞ்சம்: ஐந்தாம் கட்டம்
- அமெரிக்க நகைச்சுவை தொலைக்காட்சித் தொடர்கள்
- மீநாயகன் தொலைக்காட்சி தொடர்கள்
- தொலைக்காட்சி குறுந்தொடர்கள்
- வெளிவரவிருக்கும் தொலைக்காட்சி தொடர்கள்