4,4’-இருபுளோரோபென்சோபீனோன்
![]() | |
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பிசு(4-புளோரோபீனைல்)மெத்தனோன் | |
இனங்காட்டிகள் | |
345-92-6 ![]() | |
ChemSpider | 9206 ![]() |
EC number | 206-466-3 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 9582 |
| |
UNII | 88BNC11B9C |
பண்புகள் | |
C13H8OF2 | |
வாய்ப்பாட்டு எடை | 218.20 கி/மோல் |
தோற்றம் | நிறமற்ற திண்மம் |
உருகுநிலை | 107.5 முதல் 108.5 °C (225.5 முதல் 227.3 °F; 380.6 முதல் 381.6 K) |
தீங்குகள் | |
GHS pictograms | ![]() ![]() |
GHS signal word | எச்சரிக்கை |
H302, H315, H319, H335, H411 | |
P261, P264, P270, P271, P273, P280, P301+312, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P330, P332+313 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
4,4’-இருபுளோரோபென்சோபீனோன் (4,4’-Difluorobenzophenone) என்பது C13H8OF2 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒருகரிம வேதியியல் சேர்மமாகும். (FC6H4)2CO என்ற அமைப்பு வாய்ப்பாட்டாலும் இதை அடையாளப்படுத்தலாம். நிறமற்ற திண்மப் பொருளாக இச்சேர்மம் காணப்படுகிறது. உயர் செயல்திறன் பலபடி என்று அழைக்கப்படும் பல்லீத்தர் ஈதர் கீட்டோன் தயாரிப்பதற்கான முன்னோடிச் சேர்மமாக இது பயன்படுகிறது. பல்லீத்தர் ஈதர் கீட்டோன் தாக்குதலை எதிர்க்கும் என்பதால், இது பொதுவாக கார்பன் இழைப் பூச்சுகள் மற்றும் கம்பிவடத்தை மின்காப்பு செய்ய பயன்படுத்தப்படுகிறது.
தயாரிப்பு
[தொகு]பாரா-புளோரோபென்சாயில் குளோரைடுடன் புளோரோபென்சீனைச் சேர்த்து அசைலேற்ற வினைக்கு உட்படுத்துவதன் மூலம் 4,4’-இருபுளோரோபென்சோபீனோன் தயாரிக்கப்படுகிறது. இந்த வினை பொதுவாக ஒரு பெட்ரோலிய ஈதர் கரைப்பானில் உள்ள அலுமினியம் குளோரைடு வினையூக்கியின் முன்னிலையில் நடத்தப்படுகிறது.[1]
- FC6H4C(O)Cl + C6H5F → (FC6H4)2CO + HCl
பயன்கள்
[தொகு]பலபடியான பல்லீத்தர் ஈதர் கீட்டோன் ஆனது 4,4'-இருபுளோரோபென்சோபீனோனின் வினையிலிருந்து 1,4-பென்சீண்டையால் உப்புகளுடன் உருவாக்கப்படுகிறது.[2]
- C6H4(ONa)2 + (FC6H4)2CO → 1/n[(C6H4O2)(C13H8O)]n + 2 NaF
மேற்கோள்கள்
[தொகு]- ↑ R.D. Dunlop and John H. Gardner (1933). "Preparation of Fluorbenzophenones". J. Am. Chem. Soc. 55 (4): 1665–1666. doi:10.1021/ja01331a058.
- ↑ David Parker, Jan Bussink, Hendrik T. van de Grampe, Gary W. Wheatley, Ernst-Ulrich Dorf, Edgar Ostlinning, Klaus Reinking "Polymers, High-Temperature" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH, Weinheim, 2002.