3-ஐதராக்சிபியூட்டேனால்
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
3-ஐதராக்சிபியூட்டேனால்[1]
| |
இனங்காட்டிகள் | |
107-89-1 ![]() | |
ChemSpider | 7609 ![]() 18915429 (R) ![]() |
EC number | 203-530-2 |
யேமல் -3D படிமங்கள் | Image |
ம.பா.த | 3-ஐதராக்சிபியூட்டேனால் |
பப்கெம் | 7897 13061653 (R) |
| |
UNII | 8C6G962B53 ![]() |
பண்புகள் | |
C4H8O2 | |
வாய்ப்பாட்டு எடை | 88.11 g·mol−1 |
அடர்த்தி | 0.98 கி/மி.லி |
கொதிநிலை | 162 °C (324 °F; 435 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
3-ஐதராக்சிபியூட்டேனால் (3-Hydroxybutanal) என்பது (CH3CH(OH)CH2CHO) என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கரிம வேதியியல் சேர்மமாகும். அசிட்டால்டால், ஆல்டால் என்ற பெயர்களாலும் இச்சேர்மம் அறியப்படுகிறது. H3C−CH(OH)−CH2−CH=O என்ற கட்டமைப்பு வாய்ப்பாடு இதை அடையாளப்படுத்துகிறது. ஓர் ஆல்டால் (R−CH(OH)−CHR'−C(=O)−R") சேர்மம் என இது வகைப்படுத்தப்படுகிறது. மேலும் "ஆல்டால்" என்ற சொல் குறிப்பாக 3-ஐதராக்சிபியூட்டேனால் சேர்மத்தைக் குறிக்கும். இது முறையாக அசிடால்டிகைடின் (CH3CHO) இருபடியாதல் விளைபொருளாகும். அடர்த்தியான நிறமற்ற அல்லது வெளிர்-மஞ்சள் திரவமான இது, பல்வேறு தாக்கங்களைக் கொண்ட பல்துறை மற்றும் மதிப்புமிக்க இடைநிலையாகும். [2] இந்த சேர்மத்தில் நாற்தொகுதி மையம் உள்ளது. இருப்பினும் இந்த அம்சம் பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதில்லை. இச்சேர்மம் முற்காலத்தில் தூக்க மருந்தாகவும் மயக்க மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டது [2].
தயாரிப்பு
[தொகு]நீர்த்த சோடியம் ஐதராக்சைடுடன் வினைபுரியும்போது அசிட்டால்டிகைடு இருபடியாக்கப்படுகிறது.:[3]
- 2 CH3CHO -> CH3CH(OH)CH2CHO + H2O
இது ஒரு முன்மாதிரி ஆல்டால் வினையாகும்
வினைகள்
[தொகு]3-ஐதராக்சியூட்டேனாலின் நீரிழப்பு வினை குரோட்டோனால்டிகைடை அளிக்கிறது. 3-ஐதராக்சியூட்டேனாலின் வடிகட்டுதல் இந்த மாற்றத்தை ஏற்படுத்த போதுமான அளவு கட்டாயப்படுத்துகிறது.:[3]
- CH3CH(OH)CH2CHO -> CH3CH\dCHCHO + H2O
3-ஐதராக்சிபியூட்டேனாலை ஐதரசனேற்றம் செய்தால் 1,3-பியூட்டேன் டையால் கிடைக்கிறது:
- CH3CH(OH)CH2CHO + H2 → CH3CH(OH)CH2CH2OH
இந்த டையால் 1,3-பியூட்டாடையீனின் முன்னோடியாகும், இது பல்வேறு பலபடிகளுக்கு முன்னோடியாகும்.
தன்னிச்சையாகவும் 3-ஐதராக்சிபியூட்டேனால் பலாபடியாக்கம் அடைகிறது. ஆனால் தண்ணீரைச் சேர்ப்பதன் மூலம் அதை நிறுத்தலாம்.
பயன்
[தொகு]ஆல்டால் வாசனை திரவியங்கள் தயாரிப்பதிலும், நுரை மிதப்பு முறையில் தாதுவை தூய்மையாக்கவும் பயன்படுத்தப்படுகிறது.[4]
இதையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "3-hydroxybutanal – Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 26 March 2005. Identification and Related Records. Retrieved 13 October 2011.
- ↑ Hans Brandenberger, Robert A. A. Maes. Analytical toxicology: for clinical, forensic, and pharmaceutical chemists. New York: de Gruyter, 1997.
- ↑ 3.0 3.1 Kohlpaintner, Christian; Schulte, Markus; Falbe, Jürgen; Lappe, Peter; Weber, Jürgen (2005), Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, doi:10.1002/14356007.a01_321.pub2
- ↑ American Heritage Dictionary, 1973.