உள்ளடக்கத்துக்குச் செல்

2024 சென்னை விமான சாகசக் காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2024 சென்னை விமான சாகசக் காட்சி (2024 Chennai Air Show) இந்திய விமானப் படை தொடங்கப்பட்டு 92-ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில், 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6-ம் தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மொத்தம் 2 மணி நேரம் விமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஒவ்வோர் ஆண்டும் இந்திய விமானப்படை நாள் அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்கு முன்பாக 2003 ஆம் ஆண்டு சென்னையில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. விமான சாகசக் காட்சியைக் காண்பதற்கு 15 இலட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் வந்திருந்தனர்.[1] உலகத்திலேயே அதிக மக்கள் நேரில் பார்த்த இராணுவ நிகழ்ச்சியாக இந்நிகழ்ச்சி கருதப்படுகிறது.[2]

இந்திய விமானப் படையின் அதிநவீன போர் விமானமான ரஃபேல் விமானம் உள்ளிட்ட 72 விமானங்கள் இந்த சாகச நிகழ்ச்சியில் பங்கேற்றன.

விபத்து

[தொகு]

சென்னை மெரினா கடற்கரையில், இந்திய விமானப்படையின் 92 ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்திருந்த விமானக் கண்காட்சியின் போது, ​​கூட்ட நெரிசல் ஏற்பட்டது.[3][4][5] இவ்விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. The Hindu (October 7, 2024). "Five persons die due to heatstroke after IAF air show on the Marina". The Hindu. https://www.thehindu.com/news/cities/chennai/five-persons-die-after-iaf-air-show-on-the-marina/article68725179.ece. 
  2. "புதிய சாதனை படைத்த சென்னை விமான சாகச நிகழ்ச்சி". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2024/Oct/06/a-new-record-chennai-marina-flight-adventure-program. பார்த்த நாள்: 7 October 2024. 
  3. "Tragedy strikes IAF event in Chennai – 5 dead, scores hospitalised as 12 lakh turn up". The Indian Express. 7 October 2024. Retrieved 7 October 2024.
  4. "Poor planning, exhaustion: What led to 5 deaths at Chennai air show". Hindustan Times. Retrieved 7 October 2024.
  5. "Five persons die due to heatstroke after IAF air show on the Marina". the hindu. Retrieved 7 October 2024.