உள்ளடக்கத்துக்குச் செல்

2023 துருக்கி–சிரியா நிலநடுக்கம்

ஆள்கூறுகள்: 37°10′26″N 37°01′55″E / 37.174°N 37.032°E / 37.174; 37.032
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2023 துருக்கி–சிரியா நிலநடுக்கம்
மேல் இடமிருந்து மணிக்கூட்டுத் திசையில்: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் துருக்கியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது; இடிந்து விழுந்த கட்டிடங்களுக்கு முன்னால் நடைபாதையில் அமர்ந்திருந்த ஒரு மனிதன்; நிலநடுக்கத்திற்குப் பிறகு ஏற்பட்ட சேதங்களை கணக்கெடுக்கும் மக்கள்; இடிந்து விழுந்த காவல் நிலையம்; நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இடம்பெயர்ந்து கண்காட்சி மையத்தில் தஞ்சம் அடைகின்றனர்
2023 துருக்கி–சிரியா நிலநடுக்கம் is located in துருக்கி
2023 துருக்கி–சிரியா நிலநடுக்கம்
2023 துருக்கி–சிரியா நிலநடுக்கம் is located in Mediterranean
2023 துருக்கி–சிரியா நிலநடுக்கம்
நிலநடுக்க அளவு7.8 Mww
ஆழம்17.9 கிமீ
Epicentre37°10′26″N 37°01′55″E / 37.174°N 37.032°E / 37.174; 37.032
வகைதிருப்பு பிளவுப்பெயர்ச்சி
பாதிக்கப்பட்ட பகுதிகள்துருக்கி, சிரியா
அதிகபட்ச செறிவுIX (Violent)
ஆழிப்பேரலைYes
பின்னதிர்வுகள்குறைந்தது 2,103 (11 பெப்ரவரி வரை)
180+ Mw 4.0 அல்லது அதற்கு மேற்பட்டவை
அதிகபடசம்: 7.7 Mw 6 பெப்ரவரி 2023[1][2]
உயிரிழப்புகள்29,890 இற்கும் அதிகமானோர் இறப்பு, 87,563 இற்கும் அதிகமானோர் காயம்
  • துருக்கியில்: 24,617 இறப்புகள், 80,278 காயம்
  • சிரியாவில்: 5,273 இறப்புகள், 7,285 காயம்

2023 துருக்கி–சிரியா நிலநடுக்கம் 2023 பெப்ரவரி 6 அன்று தெற்கு, மத்திய துருக்கியையும், மேற்கு சிரியாவையும் தாக்கிய நிலநடுக்கம் ஆகும்.[3][4] துருக்கிய மற்றும் சிரிய வரலாற்றில் இதுவரை பதிவாகிய மிக ஆற்றல்வாய்ந்த நிலநடுக்கங்களில் இதுவும் ஒன்றாகும். இது காக்ரமான்மராசு நகருக்கு கிழக்கே 48 கிமீ தொலைவிலும் காசியான்டெப் நகருக்கு 34 கிமீ மேற்கிலும் உள்ள பசார்ச்சிக் என்ற இடத்தில் துருக்கிய நேரம் 04:17 (01:17 ஒசநே) மணிக்கு நிகழ்ந்தது,[5] இது பரவலான சேதத்தையும் அப்பகுதியில் பல உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது. அதிகபட்ச மெர்கல்லி செறிவு IX (அதிதீவிரம்), மற்றும் குறைந்தபட்சம் Mww 7.8 அளவு கொண்ட இந்த நிலநடுக்கம் 1939 ஆம் ஆண்டில் கிழக்குத் துருக்கியின் எர்சிங்கன் நிலநடுக்கத்துடன் ஒப்பிடப்படுகிறது. இது தற்காலத்தில் துருக்கியைத் தாக்கிய வலுவான நிலநடுக்கமும், 1999 இற்குப் பிறகு நாட்டைத் தாக்கிய மிக மோசமான நிலநடுக்கமும் ஆகும்.[6]

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, வழக்கத்திற்கு மாறாக ஆற்றல்வாய்ந்த 7.5 Mww உட்பட பல பின்அதிர்வுகள் ஏற்பட்டன. 2023 பெப்ரவரி 8 வரை, குறைந்தது 29.890 இறப்புகள் பதிவாகியுள்ளன;[7] இவற்றில் துருக்கியில் 24,617 இறப்புகளும்,[8][9] சிரியாவில் 5,273 இறப்புகளும் பதிவாகின. பெரும் குளிர்காலப் புயல் மீட்பு முயற்சிகளுக்கு இடையூறாக இருந்து, இடிபாடுகள் மீது பனிப்பொழிவையும், வெப்பநிலை வீழ்ச்சியையும் கொண்டு வந்தது.[10] அரேபிய நிலத்தட்டு வடக்கு நோக்கி நகர்ந்து அனடோனிய (ஆசிய பகுதி துருக்கி) நிலத்தட்டுடன் உரசியதால் இந்நிலநடுக்கம் ஏற்பட்டது.[11]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "AFAD Başkanı Sezer: 243 artçı deprem meydana geldi". gazeteduvar (in துருக்கிஷ்). பார்க்கப்பட்ட நாள் 7 February 2023.
  2. USGS (6 February 2023). "USGS earthquake catalog". பார்க்கப்பட்ட நாள் 7 February 2023.
  3. Subramaniam, Tara; Mogul, Rhea; Renton, Adam; Sangal, Aditi; Vales, Leinz; Hammond, Elise; Chowdhury, Maureen; Vera, Amir (6 February 2023). "February 6, 2023 Turkey-Syria earthquake news" (in ஆங்கிலம்). CNN. பார்க்கப்பட்ட நாள் 7 February 2023.
  4. "Live Updates | Turkey, Syria earthquake kills thousands". AP NEWS (in ஆங்கிலம்). 6 February 2023. பார்க்கப்பட்ட நாள் 7 February 2023.
  5. "Major magnitude 7.8 earthquake – 48 km east of Kahramanmaraş, Turkey, on Monday, Feb 6, 2023, at 3:17 am (GMT +2)". Volcanodiscovery.com. 6 February 2023. பார்க்கப்பட்ட நாள் 6 February 2023.
  6. "Timeline: Turkey hit by most devastating earthquake since 1999". அல் ஜசீரா. 6 February 2023. https://www.aljazeera.com/news/2023/2/6/timeline-turkey-syria-earthquakes-most-deadly-since-1999. 
  7. Guzel, M.; Alsayed, G.; Fraser, S. (7 February 2023). "Quake deaths pass 5,000 as Turkey, Syria seek survivors". Associated Press. https://apnews.com/article/science-politics-disaster-planning-and-response-middle-east-syria-c727c62abe97d9f6171462351dc4584c. 
  8. "Kahramanmaraş merkezli depremlerde 12 bin 391 kişi hayatını kaybetti" (in tr). Andolu Agency. 9 February 2023 இம் மூலத்தில் இருந்து 9 February 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230209005616/https://www.aa.com.tr/tr/gundem/kahramanmaras-merkezli-depremlerde-12-bin-391-kisi-hayatini-kaybetti/2810980. 
  9. "AFAD: 12 bin 391 kişi hayatını kaybetti, 62 bin 914 kişi yaralandı". TRT Haber. Archived from the original on 9 February 2023. பார்க்கப்பட்ட நாள் 9 February 2023.
  10. Hubbard, Ben (8 February 2023). "Live Updates: Erdogan Visits Quake Area as Death Toll Passes 11,600 in Turkey and Syria". The New York Times இம் மூலத்தில் இருந்து 8 February 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230208072346/https://www.nytimes.com/live/2023/02/08/world/turkey-syria-earthquake. 
  11. Turkey earthquake: Where did it hit and why was it so deadly?

வெளி இணைப்புகள்

[தொகு]