2023 உகாண்டா பள்ளிக்கூடத் தாக்குதல்
2023 உகாண்டா பள்ளிக்கூடத் தாக்குதல் (2023 Uganda school attack) 2023 ஆம் ஆண்டு சூன் மாதம் 17 ஆம் தேதியன்று நிகழ்ந்தது. மேற்கு உகாண்டாவில் உள்ள ஒரு பள்ளியில் இசுலாமிய மாநிலக் குழுவுடன் தொடர்புடைய கிளர்ச்சியாளர்களால் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர்.
பின்னணி
[தொகு]சமீபத்தில் பள்ளி மீது நடத்தப்பட்ட இத்தாக்குதல், பல வருடங்களுக்குப் பின்னர் உகாண்டாவில் பள்ளியை குறிவைத்து நடத்தப்பட்ட முதல் சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 1998 ஆம் ஆண்டு சூன் மாதத்தில், காங்கோ சனநாயகக் குடியரசின் எல்லைக்கு அருகில் உள்ள கிச்வாம்பா தொழில்நுட்ப நிறுவனத்தில் நேச நாட்டு சனநாயகப் படைகள் நடத்திய தாக்குதலில் 80 மாணவர்கள் உயிரிழந்தனர். அப்போது அவர்கள் தங்கும் விடுதிகளில் உயிருடன் எரிக்கப்பட்டனர். [1]
சம்பவம்
[தொகு]மேற்கு உகாண்டாவில் உள்ள பள்ளி ஒன்றில் இசுலாமிய மாநிலக் குழுவுடன் தொடர்புடைய கிளர்ச்சியாளர்கள் குறைந்தது 25 நபர்களின் உயிரைக் கொன்றுள்ளனர். உகாண்டாவின் மேற்கு மண்டலத்திலுள்ள முபாந்த்வே நகரத்தில் உள்ள உலுபிரிகா மேல்நிலைப் பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளனர். தாக்குதலின் போது ஆசாமிகள் தங்கும் விடுதிக்கு தீ வைத்ததுடன் உணவுக் கடையையும் சூறையாடினர். [1]
குற்றவாளிகள்
[தொகு]இந்த தாக்குதலுக்கு நேச நாட்டு சனநாயகப் படைகள் காரணம் என உகாண்டா காவல்துறை அடையாளம் கண்டுள்ளது. [1]
பின்விளைவு
[தொகு]காங்கோ மக்களாட்சிக் குடியரசில் விருங்கா தேசிய பூங்காவின் திசையில் தப்பி ஓடிய குழுவை வீரர்கள் பின்தொடர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பிரான்சு நாட்டு பன்னாட்டு செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, இன்னும் கணிசமான எண்ணிக்கையிலான மாணவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. [1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "Uganda: 25 killed by militants in school attack" (in en-GB). BBC News. 2023-06-17. https://www.bbc.com/news/world-africa-65937484.