2018 இந்தியப் புழுதிப் புயல்கள்
வட இந்தியாவில் புழுதிப் புயல்கள் | |
நாள் | 2–3 மே 2018 |
---|---|
அமைவிடம் | உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் |
இறப்புகள் | 125+ |
காயமுற்றோர் | 200+[1] |
2018 இந்தியப் புழுதிப் புயல்கள், 2 மற்றும் 3 மே 2018ல் வட இந்தியாவை தாக்கியது. இப்புயலில் சிக்கி வட இந்தியாவில் 125 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பின்னணி
[தொகு]இந்தியாவின் பருவகால வானிலை வகைகளின் ஒன்று புழுதிப் புயல் ஆகும். [2] இப்புயல்கள் பொதுவாக கோடை மாதங்களில் ஏற்படுகின்றன. வறண்ட காலநிலைகளில் புழுதிகள் காற்றுடன் கலந்து இத்தகைய புயலை உருவாக்கும். இத்தகைய புயல்களில் பெரும்பாலும் இறப்பு எண்ணிக்கை 12 ஐ விட அதிகமாக இருக்காது;2018 ஏப்ரல் 11 இல் இந்தியாவைத் தாக்கிய புழுதிப் புயல் ஒன்று அதிகபட்சமாக, 19 பேரைக் கொன்றது. [3][4]
புயல் மற்றும் சேதம்
[தொகு]இந்திய மழைக்காலத்தின் தொடக்கத்தில் இப்புழுதிப் புயல் ஏற்பட்டது. [5] புயலுக்கு முந்தைய நாட்களில், பிராந்திய வானிலை ஆய்வாளர்கள் அந்த வாரம் முழுவதும் இடியுடன் கூடிய மழை மற்றும் அதிக காற்று ஆகியவை ஏற்படலாம் என முன்னறிவிப்பாக வெளியிட்டனர். அதிக வெப்பநிலை மேற்கொண்டு புயலை வலுப்படுத்தியது. [6]
மே 2, 2018 ல், இப்புயல் தொடங்கியது, முக்கியமாக உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களைத் தாக்கியது. [3] உத்தரப் பிரதேசத்தில் குறைந்தது 73 பேர் கொல்லப்பட்டனர், ஆக்ரா நகரில் மட்டும் 43 பேர் கொல்லப்பட்டனர்; [5] கேராகர்க் நகரில் 21 பேர் கொல்லப்பட்டனர். [3] ராஜஸ்தானில் குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டனர்.[5]
புயலுக்கு பின்
[தொகு]உத்தரப் பிரதேச அரசு புயலினால் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடாக 4 இலட்சம் ரூபாய் அறிவித்தது.[3]
குறிப்புகள்
[தொகு]- ↑ Gupta, Swati; Westcott, Ben (3 May 2018). "More than 110 killed by high-intensity dust storms in India". CNN. பார்க்கப்பட்ட நாள் 3 May 2018.
- ↑ Why This Dust Storm in India Turned Deadly. 3 May 2018. https://news.nationalgeographic.com/2018/05/india-dust-storm-wind-fatalities-science-spd/. பார்த்த நாள்: 4 May 2018.
- ↑ 3.0 3.1 3.2 3.3 "India dust storms: Nearly 100 killed in Agra,Uttar Pradesh, Rajasthan". பிபிசி. 3 May 2018. பார்க்கப்பட்ட நாள் 3 May 2018.
- ↑ https://news.nationalgeographic.com/2018/05/india-dust-storm-wind-fatalities-science-spd/
- ↑ 5.0 5.1 5.2 "More than 110 killed by high-intensity dust storms in India". CNN. 3 May 2018. பார்க்கப்பட்ட நாள் 3 May 2018.
- ↑ "Devastating Dust Storm Strikes India, Killing at Least 94". த நியூயார்க் டைம்ஸ். 3 May 2018. பார்க்கப்பட்ட நாள் 3 May 2018.