உள்ளடக்கத்துக்குச் செல்

2016 மாவீரர் நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமது இன்னுயிரை ஈந்து தமிழீழ விடுதலைப் போருக்கு வீறு சேர்த்த மாவீரர்கள், அவர்களின் தலைமுறையிலேயே போற்றப்பட வேண்டும். அவர்களின் வீரங்களும் ஈகங்களும், அருஞ்செயல்களும் மக்களிடம் எடுத்துச் சொல்லப்பட வேண்டும். அந்த மாவீரர்களின் பெற்றோர்களும், குடும்பத்தினர்களும் அவலப்படக் கூடாது என்ற நோக்கின் அடிப்படையில், எமது தலைவரின் எண்ணத்திலிருந்து உருவானதுதான் மாவீரர் நாள்.

தமிழீழ விடுதலைப் போருக்கு இன்னுயிரை ஈந்து உரமாகிப்போன மாவீரர்களின் எண்ணிக்கை, பத்து நூறு என்ற நிலை மாறி ஆயிரக்கணக்காக உயர்ந்துவிட்ட நிலையில், ஒவ்வொரு மாவீரரையும் தனித்தனியாக ஆண்டுதோறும், அவரவர் நிறைவு நாட்களில் நினைவுகூர இயலாது என்ற நிலையில் அனைவரையும் ஒரே நாளில் நினைவுகூரக்கூடியதாக தமிழீழ விடுதலைப் போரில் முதல் களச் சாவடைந்த எமது இயக்க வீரர் லெப்ரினன்ட் சங்கரின் (சத்தியநாதன்) நினைவு நாளான நவம்பர் 27 ஆம் நாளை பொதுவான நாளாகத் தேர்ந்தெடுத்த எமது தலைவர் 1989 ஆம் ஆண்டில் தமிழீழ மாவீரர் நாளை அறிவித்தார்.

இலங்கையில்

[தொகு]

யாழ்ப்பாணம்

[தொகு]
  • யாழ் பல்கலைக்கழகத்தில் நவம்பர் 25 அன்று (இரண்டு நாட்கள் முன்னதாகவே) அஞ்சலி செலுத்தப்பட்டது. கைலாசபதி அரங்கில் மாணவர்களும், பல்கலைக்கழகப் பணியாளர்களும் மெழுகுதிரிகளை ஏற்றி நினைவுகூர்ந்தனர்.[1]
  • நல்லூர் பின் வீதியில் அமைக்கப்பட்ட திலீபன் நினைவுத் தூபியில் பொதுமக்கள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர். வடமாகாணசபை உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் தலைமைதாங்கிய இந்த நிகழ்வில், வடமாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன், வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.[2]
  • கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் இலங்கை இராணுவத்தின் முகாம் அமைந்துள்ளது. எனவே மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக நினைவுச் சுடரேற்றியும், மலர்களைத் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. வட மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் முற்பகல் 11.30 மணியளவில் இந்த நிகழ்வு நடைபெற்றது.[3]
  • சாட்டி எனுமிடத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுமக்கள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர். நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் தலைமையில், மாலை 3 மணியளவில், இந்த நிகழ்வு நடைபெற்றது.[4]

மன்னார்

[தொகு]
  • கப்பலேந்தி மாதா ஆலயத்தில், அருட்தந்தை இம்மானுவேல் செபமாலை அடிகளார் தலைமையில், விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. மாவீரர்களை நினைவுகூரும் வகையில் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.[5]
  • பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு காலையில் நடந்தது.[6]
  • ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடந்தது.[7]

கிளிநொச்சி

[தொகு]
  • கல்லறைகளை, குடும்பத்தினர் முந்தைய நாள் சுத்தப்படுத்தினர்.[8]
  • கனகபுரம் துயிலும் இடத்தில், ஆயிரக்கணக்கான பொது மக்கள் ஒன்றுகூடி அஞ்சலிச் சுடர்களை ஏற்றினர்.[9]

மட்டக்களப்பு

[தொகு]

நல்லையா வீதியில் உள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.[10]

வந்தாறுமூலை

[தொகு]

கிழக்குப் பல்கலைக்கழகத்தில், பல்வேறு பிரிவுகளில் கற்கும் தமிழ் மாணவர்கள் ஈகைச்சுடர் நிகழ்வை நடத்தினர்.[11]

அம்பாறை

[தொகு]

அம்பாறையில் மாவீரர் நாள் நினைவுகூரப்பட்டது.[12]

நாளிதழ்களின் நினைவுகூரல்

[தொகு]

நாட்டின் வடக்கு-கிழக்குப் பகுதியில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில், அவற்றின் தனிப்பட்ட நினைவுகூரல் அறிவிப்புகள் காணப்பட்டன.[13]

ஐக்கிய இராச்சியத்தில்

[தொகு]
  • இலண்டன் நகரத்தில் கடையமைத்து வணிகம் செய்யும் தமிழர்கள் தமது கடை வாயிலில் தமிழீழ தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, மாவீரர் நாளை நினைவுகூர்ந்தனர்.[14]
  • இலண்டன் குயின் எலிசபெத் வளாகத்தில் சுமார் 10,000 தமிழர்கள் மாவீரர் நாள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.[15]

டென்மார்க்கில்

[தொகு]
  • ஆரசு பல்கலைக்கழகத்தில், தமிழ் மாணவர்கள் நவம்பர் 25 அன்று (இரண்டு நாட்கள் முன்னதாக) அஞ்சலி செலுத்தினர். செயற்கையாக வடிவமைக்கப்பட்ட நினைவுக் கல்லின் முன் மெழுகுதிரிகளை ஏற்றி வைத்து வணங்கினர்.[16]
  • மாவீரர் நாள் நிகழ்வு ஒன்றில் தமிழர்கள் ஒன்றுகூடி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து எழுச்சி உரைகள், கவிதைகள், எழுச்சி நடனங்கள், நாடகம் ஆகியன இடம்பெற்றன.[17]

ஜெர்மனியில்

[தொகு]
  • நிகழ்வு ஒன்றில் தமிழர்கள் ஒன்றுகூடி அஞ்சலி செலுத்தினர்.[18]

பின்லாந்தில்

[தொகு]
  • தலைநகர் ஹெல்சின்கிலில் நடந்த மாவீரர் நாள் நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றுதல், தமிழீழ தேசிய கொடியினை ஏற்றுதல், மாவீரர் நாள் அறிக்கையை ஒலிக்கவிடுதல், மாவீரர்களுக்கும் போரினால் கொல்லப்பட்ட பொதுமக்களுக்கும் அக வணக்கம் செலுத்துதல், செயற்கையாக அமைக்கப்பட்ட நினைவுக் கற்களுக்கு மலர் வணக்கம் செலுத்துதல் ஆகியன இடம்பெற்றன.[19]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "யாழ் பல்கலையில் இரண்டு நாள் முன்னதாகவே மாவீரர் தினம் அனுசரிப்பு". பிபிசி தமிழோசை. 25 நவம்பர் 2016. http://www.bbc.com/tamil/sri-lanka-38105492. பார்த்த நாள்: 27 நவம்பர் 2016. 
  2. "நல்லூரில் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி". உதயன். 27 நவம்பர் 2016. http://onlineuthayan.com/news/20715. பார்த்த நாள்: 27 நவம்பர் 2016. 
  3. "கோப்பாயிலும் சுடரேற்றி அஞ்சலி". உதயன். 27 நவம்பர் 2016. http://onlineuthayan.com/news/20736. பார்த்த நாள்: 27 நவம்பர் 2016. 
  4. "யாழ்.தீவகம் சாட்டி துயிலுமில்லத்திலும் அஞ்சலி". உதயன். 27 நவம்பர் 2016. http://onlineuthayan.com/news/20738. பார்த்த நாள்: 27 நவம்பர் 2016. 
  5. "Catholic service in Mannar to remember Maaveerar". தமிழ் கார்டியன். 27 நவம்பர் 2016. http://www.tamilguardian.com/content/catholic-service-mannar-remember-maaveerar. பார்த்த நாள்: 27 நவம்பர் 2016. 
  6. "மன்னாரிலும் உணர்வுபூர்வமாக மாவீரர் தின நிகழ்வுகள்". உதயன். 27 நவம்பர் 2016. http://onlineuthayan.com/news/20737. பார்த்த நாள்: 27 நவம்பர் 2016. 
  7. "மன்னார் ஆட்காட்டிவெளியில் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் தினம்". தமிழ்வின். 27 நவம்பர் 2016. http://www.tamilwin.com/community/01/126187?ref=youmaylike1. பார்த்த நாள்: 29 நவம்பர் 2016. [தொடர்பிழந்த இணைப்பு]
  8. "Locals clean LTTE cemeteries in Kilinochchi". தமிழ் கார்டியன். 26 நவம்பர் 2016. http://www.tamilguardian.com/content/locals-clean-ltte-cemeteries-kilinochchi. பார்த்த நாள்: 27 நவம்பர் 2016. [தொடர்பிழந்த இணைப்பு]
  9. "Thousands gather at destroyed LTTE cemeteries to mark Maaveerar Naal". தமிழ் கார்டியன். 27 நவம்பர் 2016. http://www.tamilguardian.com/content/thousands-gather-destroyed-ltte-cemeteries-mark-maaveerar-naal. பார்த்த நாள்: 28 நவம்பர் 2016. 
  10. "மட்டக்களப்பில் உயிர் நீர்த்த உறவுகளின் நினைவேந்தல் நிகழ்வு". தமிழ்வின். 27 நவம்பர் 2016 இம் மூலத்தில் இருந்து 2016-11-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161127174446/http://www.tamilwin.com/community/01/126161?ref=morenews. பார்த்த நாள்: 27 நவம்பர் 2016. 
  11. "கிழக்கு பல்கலையில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற கார்த்திகை 27 நினைவேந்தல்". தமிழ்வின். 27 நவம்பர் 2016. http://www.tamilwin.com/ltte/01/126137?ref=youmaylike2. பார்த்த நாள்: 27 நவம்பர் 2016. [தொடர்பிழந்த இணைப்பு]
  12. "Maaveerar Naal commemoration in Amparai". தமிழ் கார்டியன். 27 நவம்பர் 2016. http://www.tamilguardian.com/content/maaveerar-naal-commemoration-amparai. பார்த்த நாள்: 28 நவம்பர் 2016. 
  13. "North-East Tamil papers mark Maaveerar Naal". தமிழ் கார்டியன். 26 நவம்பர் 2016. http://www.tamilguardian.com/content/north-east-tamil-papers-mark-maaveerar-naal. பார்த்த நாள்: 27 நவம்பர் 2016. 
  14. "London shopfronts display Tamil national flag for Maaveerar week". தமிழ் கார்டியன். 26 நவம்பர் 2016. http://www.tamilguardian.com/content/london-shopfronts-display-tamil-national-flag-maaveerar-week. பார்த்த நாள்: 27 நவம்பர் 2016. 
  15. "Thousands of British Tamils mark Maaveerar Naal". தமிழ் கார்டியன். 28 நவம்பர் 2016. http://www.tamilguardian.com/content/thousands-british-tamils-mark-maaveerar-naal. பார்த்த நாள்: 28 நவம்பர் 2016. 
  16. "Danish Tamil uni students commemorate Maaveerar Naal". தமிழ் கார்டியன். 26 நவம்பர் 2016. http://tamilguardian.com/content/danish-tamil-uni-students-commemorate-maaveerar-naal. பார்த்த நாள்: 28 நவம்பர் 2016. 
  17. "டென்மார்க் தேசத்தில் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு". தமிழ்வின். 27 நவம்பர் 2016 இம் மூலத்தில் இருந்து 2016-11-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161130020034/http://www.tamilwin.com/diaspora/01/126179. பார்த்த நாள்: 29 நவம்பர் 2016. 
  18. "ஜேர்மனியில் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் தினம்". தமிழ்வின். 27 நவம்பர் 2016 இம் மூலத்தில் இருந்து 2016-11-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161130021215/http://www.tamilwin.com/germany/01/126180. பார்த்த நாள்: 29 நவம்பர் 2016. 
  19. "பின்லாந்தில் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் தினம்". தமிழ்வின். 27 நவம்பர் 2016. http://www.tamilwin.com/diaspora/01/126240?ref=home. பார்த்த நாள்: 29 நவம்பர் 2016. [தொடர்பிழந்த இணைப்பு]

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=2016_மாவீரர்_நாள்&oldid=3440060" இலிருந்து மீள்விக்கப்பட்டது