2011 உலகத் தமிழ் பண்பாட்டு மாநாடு
Appearance
2011 உலகத் தமிழ் பண்பாட்டு மாநாடு அல்லது 11 வது உலகத் தமிழ் பண்பாட்டு மாநாடு எனப்படுவது உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தினால் 2011 செப்டம்பர் 24, 25 ம் திகதிகளில் பிரான்சு நாட்டின் எவ்ரி நகரில் நடைபெற இருக்கும் மாநாடு ஆகும். இந்த மாநாட்டில் "தமிழர் கலைகள் பண்பாடு ஊக்குவிப்பு, தமிழ் ஆண்டு, தமிழ் மொழிக்கல்வி, தமிழர் வரலாற்று ஆவண சேமிப்பு, தூய தமிழ் வழக்கு, தமிழ் செம்மொழி உருவாக்கம், உலகத் தமிழர் ஒற்றுமை பேணல், தமிழ் வழி இறை வழிபாடு, தமிழ் மரபுகளை நிலைப்படுத்துதல், தமிழர் இறையாண்மை, தமிழ்ப்பாதுகாப்பு, தமிழ்க் கலை மீட்பு, தமிழ்க் கல்வி, தமிழர் நிறுவனங்கள் ஒருங்கிணைப்பு, மறைந்த மறைக்கப்பட்ட தமிழர் வரலாற்றுத் தேடல்கள், எதிர்காலத் தமிழினம் எதிர்நோக்கும் சவால்கள், தமிழ் ஊடகங்கள்" போன்ற தலைப்புகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.[1]