உள்ளடக்கத்துக்குச் செல்

2002 பாலி குண்டுவெடிப்புகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


2002 பாலி குண்டுவெடிப்புகள் (2002 Bali bombings) அக்டோபர் 12 2002 இந்தோனீசியாவின் பாலி தீவில் சுற்றுலா மையம் ஒன்றில் இடம்பெற்றது. இந்தோனீசியாவின் வரலாற்றிலேயே மிகப் பெரிய தீவிரவாதத் தாக்குதலாக இது கருதப்படுகிறது. மொத்தம் 202 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 164 பேர் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் ஆவர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் ஆஸ்திரேலியர்கள். மேலும் 209 பேர் காயமடைந்தனர்.

இத்தாக்குதலில் மொத்தம் மூன்று குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டன. முதுகில் பொதியைச் சுமந்து சென்று வெடிக்க வைத்த தற்கொலை குண்டுதாரி, பெரும் தானுந்து குண்டு, இவையிரண்டும் கூட்டா நகரில் உள்ள இரவு விடுதிகளினுள்ளேயும் வெளியேயும் வெடிக்க வைக்கப்பட்டன. மூன்றாவது சிறிய அளவிலான குண்டு டென்பசார் நகரில் அமைந்துள்ள ஐக்கிய அமெரிக்க தூதரகத்தின் முன்னால் வெடிக்க வைக்கப்பட்டது. மூன்றாவது குண்டு சிறிய அளவிலேயே சேதங்களை உண்டு பண்ணியது.

இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவான ஜெமா இஸ்லாமியா இத்தீவிரவாதத் தாகுதல்களுக்குக் குற்றம் சாட்டப்பட்டு பலர் கைதாயினர். இவர்களில் மூவர் குற்றவாளிகளாகக் காணப்பட்டு சுட்டுக் கொல்லப்படும் முறையிலான மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களின் மரண தண்டனை நவம்பர் 9, 2008 ஆம் ஆண்டு அதிகாலையில் உள்ளூர் நேரப்படி 00:15 மணிக்கு பாலியில் நிறைவேற்றப்பட்டது[1].

தாக்குதல்

[தொகு]
இறந்தோர் (நாடு வாரியாக)
தேசியம் இறப்புகள்
ஆஸ்திரேலியா 88
இந்தோனீசியா 38
ஐக்கிய இராச்சியம் 24
ஐக்கிய அமெரிக்கா 7
ஜெர்மனி 6
சுவீடன் 5
டச்சு 4
பிரெஞ்சு 4
டென்மார்க் 3
நியூசிலாந்து 3
சுவிட்சர்லாந்து 3
பிரேசில் 2
கனடா 2
ஜப்பான் 2
தென்னாபிரிக்கா 2
தென் கொரியா 2
எக்குவடோர் 1
கிரேக்கம் 1
இத்தாலி 1
போலந்து 1
போர்த்துக்கல் 1
தாய்வான் 1
வேறு 3
மொத்தம் 202


மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]