உள்ளடக்கத்துக்குச் செல்

2-குளோரோயெத்தனால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2-குளோரோயெத்தனால்
Skeletal formula of 2-chloroethanol
Ball and stick model of 2-chloroethanol
Ball and stick model of 2-chloroethanol
Spacefill model of 2-chloroethanol
Spacefill model of 2-chloroethanol
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2-குளோரோயீத்தேன்-1-ஆல்[1]
வேறு பெயர்கள்
  • 2-குளோரோயெத்தனால்[1]
  • பீட்டா-குளோரோயெத்தனால்[2]
  • 2-குளோரோ-1-எத்தனால்[2]
  • β-குளோரோயெத்தனால்[2]
  • δ-குளோரோயெத்தனால்[2]
  • 2-குளோரோயெத்தில் ஆல்ககால் [2]
  • எத்தில் குளோரோ ஐதரின்[2]
  • எத்திலீன் குளோரோ ஐதரின் [2]
  • கிளைக்கால் குளோரோ ஐதரின்[2]
  • கிளைக்கால் மோனோகுளோரோ ஐதரின்[2]
  • 2-ஐதராக்சியெத்தில் குளோரைடு[2]
  • β-ஐதராக்சியெத்தில் குளோரைடு[2]
  • 2-மோனோகுளோரோயெத்தனால்[2]
இனங்காட்டிகள்
107-07-3 Y
3DMet B01042
Beilstein Reference
878139
ChEBI CHEBI:28200 Y
ChEMBL ChEMBL191244 Y
ChemSpider 21106015 Y
EC number 203-459-7
Gmelin Reference
25389
InChI
  • InChI=1S/C2H5ClO/c3-1-2-4/h4H,1-2H2 Y
    Key: SZIFAVKTNFCBPC-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C06753 Y
ம.பா.த Ethylene+Chlorohydrin
பப்கெம் 34
வே.ந.வி.ப எண் KK0875000
  • OCCCl
UNII 753N66IHAN Y
UN number 1135
பண்புகள்
C2H5ClO
வாய்ப்பாட்டு எடை 80.51 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
மணம் ஈதர்-போன்றது
அடர்த்தி 1.201 கி/மி.லி
உருகுநிலை −62.60 °C; −80.68 °F; 210.55 K
கொதிநிலை 127–131 °C; 260–268 °F; 400–404 K
கலக்கும்[3]
மட. P −0.107
ஆவியமுக்கம் 700 பாசுக்கல் ( 20 பாகை செல்சியசில்)
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.441
வெப்பவேதியியல்
Std enthalpy of
combustion
ΔcHo298
−1.1914 மெகாயூல்/மோல்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் உயர் நச்சு மற்றும் தீப்பற்றும்
GHS signal word அபாயம்
தீப்பற்றும் வெப்பநிலை 55 °C (131 °F; 328 K)
Autoignition
temperature
425 °C (797 °F; 698 K)
வெடிபொருள் வரம்புகள் 5–16%
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

2-குளோரோயெத்தனால் (2-Chloroethanol) என்பது C2H5ClO என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கட்டமைப்பின் படி இதை குறிக்க HOCH2CH2Cl என்ற வாய்பாடும் பயன்படுத்தப்படுகிறது. எத்திலீன் குளோரோ ஐதரின் அல்லது கிளைக்கால் குளோரோ ஐதரின் என்ற பெயர்களாலும் 2-குளோரோயெத்தனால் அழைக்கப்படுகிறது. குளோரோ ஐதரின் எனப்படும் எளிமையான பீட்டா-ஐதரின் சேர்மத்திற்கு இச்சேர்மம் ஓர் எடுத்துக்காட்டாகும்.[4] நிறமற்றிருக்கும் இத் திரவமானது ஈதர் போன்ற இனிமையான வாசனையைக் கொண்டிருக்கும். தண்ணீருடன் கலக்கும். ஆல்க்கைல் குளோரைடு மற்றும் ஆல்ககால் வேதி வினைக்குழு ஆகிய இரண்டு வினைக்குழுக்களையும் பெற்றிருக்கும். இவ்விரண்டு குழுக்களின் பணியையும் இது நிறைவேற்றும்.[5]

தயாரிப்பு[தொகு]

எத்திலீனுடன் ஐப்போகுளோரசு அமிலம் எனப்படும் உபகுளோரசு அமிலத்தைச் சேர்த்து சூடுபடுத்தி வினைபுரியச் செய்தால் 2-குளோரோயெத்தனால் உருவாகும்:[5]

2-குளோரோயெத்தனால் தயாரித்தல்

2-குளோரோயெத்தனால் ஒரு காலத்தில் எத்திலீன் ஆக்சைடு தயாரிப்பதற்கு தேவையான முன்னோடிச் சேர்மமாக பெரிய அளவில் உற்பத்தி செய்யப்பட்டது:

Synthesis of ethylene oxide from 2-chloroethanol
HOCH2CH2Cl + NaOH → C2H4O + NaCl + H2O

எத்திலீனின் நேரடியான ஆக்சிசனேற்ற வினை கொடுக்கும் பொருளாதாரப் பயனால் இந்தப் பயன்பாடு மாற்றப்பட்டது. மற்றபடி குளோரோயெத்தனால் இன்னும் மருந்துகள், உயிர்க்கொல்லிகள் மற்றும் நெகிழியாக்கிகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.[5] இவற்றில் பல பயன்பாடுகள் 2-ஐதராக்சியெத்தில் குழுக்களை நிறுவுவதில் இதன் பயன்பாட்டை உள்ளடக்கியுள்ளன.[6] குளோரோயெத்தனாலுடன் அனிலின் வழிப்பெறுதிகளை ஆல்கைலேற்றம் செய்வதன் மூலம் பல சாயங்கள் தயாரிக்கப்படுகின்றன.[7] தயோயிருகிளைக்காலை பெருமளவில் தயாரிக்கவும் இச்சேர்மம் பயன்படுகிறது.

செல்லுலோசு அசிடேட்டு, எத்தில் செல்லுலோசு, நெசவு அச்சு சாயங்கள், மெழுகுநீக்கல், ரோசின் சுத்திகரிப்பு, பைன் லிக்னின் பிரித்தெடுத்தல் மற்றும் இயந்திரங்களை சுத்தம் செய்தல் ஆகியவற்றுக்கான கரைப்பானாக 2-குளோரோயெத்தனால் பயன்படுகிறது.

சுற்றுச்சூழல் அம்சங்கள்[தொகு]

குளோரோயெத்தனால் என்பது 1,2-டைகுளோரோ எத்தேன் சிதைவில் காணப்படும் ஒரு வளர்சிதை மாற்ற பொருளாகும். ஆல்ககால் பின்னர் குளோரோ அசிட்டால்டிகைடு வழியாக குளோரோ அசிட்டேட்டிற்கு ஆக்சிசனேற்றப்படுகிறது. வினைல் குளோரைடு தயாரிப்பதற்கு உதவும் முன்னோடிச் சேர்மமாக ஆண்டுதோறும் பில்லியன் கணக்கான கிலோகிராம் அளவுகளில் 1,2-இருகுளோரோ ஈத்தேன் செயலாக்கப்பட்டதால் இந்த வளர்சிதை மாற்றப் பாதை முக்கியமானதாக உள்ளது.[8]

பாதுகாப்பு அம்சங்கள்[தொகு]

2-குளோரோயெத்தனால் எலிகளில் 89 மி.கி/கிலோ கிராம் என்ற அளவிலான உயிர் கொல்லும் அளவு கொண்ட நச்சுத்தன்மை கொண்ட சேர்மமாகும். பெரும்பாலான கரிமகுளோரின் சேர்மங்களைப் போலவே, குளோரோயெத்தனாலலும் ஐதரோகுளோரிக் அமிலம் மற்றும் பாசுச்சீனை எரிக்கும்போது வெளியிடுகிறது.

2-குளோரோயெத்தனாலின் தோல் மீதான் வெளிப்பாட்டு வரம்பைப் பொறுத்தவரை, தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிர்வாகம் மில்லியனுக்கு 5 பகுதிகள் (16 மி.கி/மீ3) என்ற அனுமதிக்கப்பட்ட வெளிப்பாடு வரம்பை எட்டு மணிநேர நேர எடையுள்ள சராசரியாக நிர்ணயித்துள்ளது. அதே நேரத்தில் தேசிய தொழில்சார் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய நிறுவனம் மில்லியனுக்கு 1 பகுதி (3 மி.கி/மீ3) என்ற வெளிப்பாடு உச்சவரம்பு மிகவும் பாதுகாப்பான பரிந்துரைக்கப்பட்ட வெளிப்பாடு வரம்பு என்று பரிந்துரைத்துள்ளது.[9]

அமெரிக்க அவசரகால திட்டமிடல் மற்றும் சமூகம் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 302 இல் வரையறுக்கப்பட்டுள்ளபடி, இச்சேர்மம் அமெரிக்காவில் மிகவும் அபாயகரமான பொருளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Nomenclature of Organic Chemistry : IUPAC Recommendations and Preferred Names 2013 (Blue Book). Cambridge: வேதியியலுக்கான வேந்திய சங்கம். 2014. p. 29. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1039/9781849733069-FP001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85404-182-4. For example, the omission of the locant '1' in 2-chloroethanol, while permissible in general usage, is not allowed in preferred IUPAC names, thus the name 2-chloroethan-1-ol is the PIN.
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 Depositor-supplied synonyms for CID 34.
  3. "NIOSH Pocket Guide to Chemical Hazards #0268". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  4. Ethylene chlorohydrin: properties
  5. 5.0 5.1 5.2 Liu, Gordon Y. T.; Richey, W. Frank; Betso, Joanne E.; Hughes, Brian; Klapacz, Joanna; Lindner, Joerg (2005), "Chlorohydrins", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a06_565.pub2
  6. Butler J; Kellogg R (1987). "Synthesis of Macrocyclic Sulfides Using Cesium Thiolates: 1,4,8,11-Tetrathiacyclotetradecane". Organic Syntheses 65 (150): 150. doi:10.15227/orgsyn.065.0150. 
  7. Raue, Roderich; Corbett, John F. (2005), "Nitro and Nitroso Dyes", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a17_383
  8. Janssen, D. B.; van der Ploeg, J. R.; Pries, F. (1994). "Genetics and Biochemistry of 1,2-Dichloroethane Degradation". Biodegradation 5 (3–4): 249–57. doi:10.1007/BF00696463. பப்மெட்:7765836. https://pure.rug.nl/ws/files/14528144/1994BiodegradJanssen.pdf. 
  9. CDC - NIOSH Pocket Guide to Chemical Hazards
"https://ta.wikipedia.org/w/index.php?title=2-குளோரோயெத்தனால்&oldid=3996004" இலிருந்து மீள்விக்கப்பட்டது