உள்ளடக்கத்துக்குச் செல்

2-குளோரோநாப்தலீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2-குளோரோநாப்தலீன்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2-குளோரோநாப்தலீன்
வேறு பெயர்கள்
β-குளோரோநாப்தலீன், 2-குளோரோநாப்தலீன்
இனங்காட்டிகள்
91-58-7
ChemSpider 6789
EC number 202-079-9
InChI
  • InChI=1/C10H7Cl/c11-10-6-5-8-3-1-2-4-9(8)7-10/h1-7
    Key: CGYGETOMCSJHJU-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 7056
  • ClC1=CC=C2C=CC=CC2=C1
UNII 49O81U3ITI
பண்புகள்
C10H7Cl
வாய்ப்பாட்டு எடை 162.62 g·mol−1
தோற்றம் அரை வெண்மை படிகத்தூள்
அடர்த்தி 1.2±0.1 கி/செ.மீ3
உருகுநிலை 59 °C (138 °F; 332 K)
கொதிநிலை 255 °C (491 °F; 528 K)
கரையாது
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H315, H319, H335
P261, P280
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

2-குளோரோநாப்தலீன் (2-Chloronaphthalene) என்பது C10H7Cl என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும்.[1][2] கரிமகுளோரின் சேர்மமான இது நாப்தலீனின் குளோரினேற்ற வழிப்பெறுதியாகக் கருதப்படுகிறது. 2-குளோரோநாப்தலீன் சேர்மம் 1-குளோரோநாப்தலீன் சேர்மத்தின் மாற்றியமாகும்.[3]

தயாரிப்பு

[தொகு]

நாப்தலீனை குளோரினேற்றம் செய்து நேரடியாக 2-குளோரோநாப்தலீன் சேர்மத்தை தயாரிக்க இயலும். ஆனால் இவ்வினையில் 1-குளோரோநாப்தலீன், 2-குளோரோநாப்தலீன் ஆகிய ஒற்றைக்குளோரினேற்ற சேர்மங்களுடன் கூடுதலாக இருகுளோரோ நாப்தலீன் மற்றும் முக்குளோரோ நாப்தலீன் ஆகிய சேர்மங்களும் உருவாகும்.[4]

பண்புகள்

[தொகு]

2-குளோரோநாப்தலீன் எரியக்கூடிய வேதிப்பொருளாகும். வெள்ளை நிறத்தில் மணமற்று ஒரு திண்மப்பொருளாக இது காணப்படுகிறது. நடைமுறையில் தண்ணீரில் கரையாது. இந்த சேர்மம் வலுவான ஆக்சிசனேற்ற முகவர்களுடன் வினைபுரியும்.[5]

பயன்பாடுகள்

[தொகு]

2-குளோரோநாப்தலீன் புலரின்கள் தயாரிப்பில் பெரிதும் பயன்படுகிறது. [6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "2-Chloronaphthalene". EPA. comptox.epa.gov. பார்க்கப்பட்ட நாள் 14 June 2017.
  2. "2-Chlornaphthalin". பார்க்கப்பட்ட நாள் 14 June 2017.
  3. "2-Chlornaphthalin Produkt Beschreibung" (in German). chemicalbook.com. பார்க்கப்பட்ட நாள் 14 June 2017.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  4. Bavendamm, W.; Bellmann, H. (February 1953). "Chlornaphthalin-Präparate" (in German). Holz Als Roh- und Werkstoff 11 (2): 81–84. doi:10.1007/BF02605462. 
  5. "2-Chlornaphthalin Produkt Beschreibung" (in German). பார்க்கப்பட்ட நாள் 14 June 2017.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  6. Krüger, Anke (2007). Neue Kohlenstoffmaterialien: Eine Einführung (in German). Springer-Verlag. p. 53. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-8351-9098-6.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=2-குளோரோநாப்தலீன்&oldid=4030128" இலிருந்து மீள்விக்கப்பட்டது