உள்ளடக்கத்துக்குச் செல்

1,2-பியூட்டேன்டையால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1,2-பியூட்டேன்டையால்
Molecular forula of 1,2-Butanediol
பியூட்டேன்டையால் மூலக்கூறு
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பியூட்டேன்-1,2-டையால்
வேறு பெயர்கள்
1,2-ஈரைதராக்சிபியூட்டேன்
α-பியூட்டைலீன் கிளைக்கால்
இனங்காட்டிகள்
584-03-2 Y
40348-66-1 (R) N
73522-17-5 (S) N
ChEBI CHEBI:52682 Y
ChemSpider 10948 Y
EC number 209-527-2
InChI
  • InChI=1S/C4H10O2/c1-2-4(6)3-5/h4-6H,2-3H2,1H3 Y
    Key: BMRWNKZVCUKKSR-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C4H10O2/c1-2-4(6)3-5/h4-6H,2-3H2,1H3
    Key: BMRWNKZVCUKKSR-UHFFFAOYAV
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 11429
வே.ந.வி.ப எண் EK0380000
  • OCC(O)CC
  • CCC(CO)O
UNII RUN0H01QEU Y
பண்புகள்
C4H10O2
வாய்ப்பாட்டு எடை 90.121 கி/மோல்
அடர்த்தி 1.0023 கி/செ.மீ3 (20 °C)
உருகுநிலை −50 °C (−58 °F; 223 K)[note 1]
கொதிநிலை 195 முதல் 196.9 °C (383.0 முதல் 386.4 °F; 468.1 முதல் 470.0 K) (96.5 °செல்சியசு 10 மி.மீ.பாதரச அழுத்தத்தில்
கலக்கும்
கரைதிறன் எத்தனால், அசிட்டோன் ஆகியவற்றில் கரையும்; எசுத்தர் மற்றும் ஈதர் போன்றவற்றில் சிறிதளவு கரையும்; நீரகக்கரிமம் போன்றவற்றில் கரையாது.
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.4378 (20 °செல்சியசு)
பிசுக்குமை 7.3 mPa·s (20 °செல்சியசு)
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−532.8 கிலோயூல் [1]
Std enthalpy of
combustion
ΔcHo298
−2479 கிலோயூல்/மோல்
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் ICSC 0395
தீப்பற்றும் வெப்பநிலை 90 °C (194 °F; 363 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

1,2-பியூட்டேன்டையால் (1,2-Butanediol) என்பது C4H10O2 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். HOCH2(HO)CHCH2CH3 என்ற அமைப்பில் வேதி வாய்ப்பாட்டாலும் இதை அடையாளப்படுத்தலாம். விசினல் டையால் வகை வேதிச் சேர்மமாக இது வகைப்படுத்தப்படுகிறது. சுழிமாய்க் கலவையான இச்சேர்மத்தில் நாற்தொகுதி மையம் உள்ளது. 1,2-பியூட்டேன்டையால் ஒரு நிறமற்ற நீர்மமாகும்.

தயாரிப்பு[தொகு]

இந்த டையாலை முதன்முதலில் 1859 ஆம் ஆண்டில் சார்லசு-அடோல்ஃப் வூர்ட்சு கண்டுபிடித்து விவரித்தார்.[3]

1,2-எப்பாக்சிபியூட்டேனை ஐதரசனேற்றம் செய்து 1,2-பியூட்டேன்டையால் தயாரிக்கப்படுகிறது. [4]

இந்த செயல்முறையில் பல்யீத்தர்களின் உருவாக்கத்தை அடக்குவதற்கு பத்து முதல் இருபது மடங்கு தண்ணீர் தேவைப்படுகிறது. பயன்படுத்தப்படும் அதிகப்படியான நீரின் அளவைப் பொறுத்து, தேர்ந்தெடுக்கும் திறன் 70 முதல் 92% வரை மாறுபடும்.[5] கந்தக அமிலம் அல்லது வலுவான அமில அயனி பரிமாற்ற பிசின்கள் வினையூக்கிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. இது 160 ° செல்சியசு வெப்பநிலைக்கு கீழும் வளிமண்டல அழுத்தத்திற்கு சற்று மேலான அழுத்தத்திலும் வினை ஏற்பட அனுமதிக்கிறது.

பியூட்டாடையீனிலிருந்து 1,4-பியூட்டேன்டையாலை உற்பத்தி செய்யும்போது ஓர் உடன்விளைபொருளாக 1,2-பியூட்டேன்டையால் உருவாகிறது.[6] சார்பிட்டாலிலிருந்து எத்திலீன் கிளைக்கால் மற்றும் புரோப்பைலீன் கிளைக்கால் போன்ற சர்க்கரைகளின் வினையூக்க ஐதரசன்பிளப்பு வினைகளிலும் இது ஒரு துணை தயாரிப்பு ஆகும்.[7]

OsO4 சேர்மத்தைப் பயன்படுத்தி பியூட்-1-ஈன் சேர்மத்தை ஈரைதலாக்சிசனேற்றம் செய்தும் 1,2-பியூட்டேன்டையாலை தயாரிக்கலாம்.

பயன்பாடுகள்[தொகு]

பாலியெசுத்தர் பிசின்கள் மற்றும் நெகிழியாக்கிகள் உற்பத்திக்காக 1,2-பியூட்டேன்டையால் காப்புரிமை பெற்றுள்ளது.[6] சில அமினோ அமிலங்களுக்கு முன்னோடியான α-கீட்டோபியூட்டரிக் அமிலத்தின் தொழில்துறை உற்பத்திக்கான சாத்தியமான மூலப்பொருளாகவும் இது கருதப்படுகிறது. [8]

பாதுகாப்பு[தொகு]

எலிகளுகுக்கு வாய் வழியாக கொடுக்கப்படும்போது இதன் உயிர் கொல்லும் அளவு 16கி/கிலோகிராம் ஆகும். [4]

குறிப்புகள்[தொகு]

  1. The value of −50 °C for the melting point is taken from Ullmann's Encyclopedia of Industrial Chemistry and used by the Hazardous Substances Data Bank and the OECD Screening Information Dataset. Other reported values of the melting point range from −114 °C to −30 °C.

மேற்கோள்கள்[தொகு]

  1. Moureu, H.; Dode, M. (1937), "Chaleurs de formation de l'oxyde d'ethylene, de l'ethanediol et de quelques homologues", Bull. Soc. Chim. Fr., 4: 637–47.
  2. 1,2-Butanediol, International Chemical Safety Card 0395, Geneva: International Programme on Chemical Safety, March 1996.
  3. Wurtz, A. (1859), "Mémoire sur les glycols ou alcools diatomique" [Dissertation on glycols, or diatomic alcohols], Ann. Chim. Phys., 55: 400.
  4. 4.0 4.1 "Butanediols, Butenediol, and Butynediol", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, 2005, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a04_455
  5. Gräfje, Heinz; Körnig, Wolfgang; Weitz, Hans-Martin; Reiß, Wolfgang; Steffan, Guido; Diehl, Herbert; Bosche, Horst; Schneider, Kurt; Kieczka, Heinz (2019-07-23), "Butanediols, Butenediol, and Butynediol", Ullmann's Encyclopedia of Industrial Chemistry (in ஆங்கிலம்), Weinheim, Germany: Wiley-VCH Verlag GmbH & Co. KGaA, pp. 1–12, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a04_455.pub2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-527-30673-2, பார்க்கப்பட்ட நாள் 2022-02-18
  6. 6.0 6.1 US 4596886, Hasegawa, Ryuichi & Kohji Hayashi, "Polyester containing impure 1,2-butanediol", published 1986-06-24 .
  7. US 4966658, Berg, Lloyd, "Recovery of ethylene glycol from butanediol isomers by azeotropic distillation", published 1990-10-30 . US 5423955, Berg, Lloyd, "Separation of propylene glycol from 1,2-butanediol by azeotropic distillation", published 1995-06-13 .
  8. US 5155263, Imanari, Makoto; Hiroshi Iwane & Masashi Suzuki et al., "Process for preparing α-ketobutyric acid", published 1992-10-13 .
"https://ta.wikipedia.org/w/index.php?title=1,2-பியூட்டேன்டையால்&oldid=4037067" இலிருந்து மீள்விக்கப்பட்டது