ஹ்
ஹ் | |
---|---|
தமிழில் பயன்படுத்தப்படும் கிரந்த எழுத்துகள் | |
ஹ் (h) என்பது கிரந்த எழுத்து முறையின் எழுத்துகளில் ஒன்று. தமிழ் மொழியில் ஆரம்பத்தில் மணிப்பிரவாள நடையில் எழுதுவதற்கு இவ்வெழுத்துப் பயன்படுத்தப்பட்டு, இன்று பிறமொழிச் சொற்களை எழுதுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றது.[1]
ஹகர உயிர்மெய்கள்
[தொகு]ஹகர மெய், 12 உயிரெழுத்துகளுடனும் சேர்ந்து உருவாகும் உயிர்மெய் எழுத்துகளையும் அவற்றின் பெயர்களையும் கீழுள்ள வரிசைப் பட்டியல் காட்டுகின்றது.
சேர்க்கை | உயிர்மெய்கள் | |
---|---|---|
வரிவடிவம் | பெயர் | |
ஹ் + அ | ஹ | ஹானா |
ஹ் + ஆ | ஹா | ஹாவன்னா |
ஹ் + இ | ஹி | ஹீனா |
ஹ் + ஈ | ஹீ | ஹீயன்னா |
ஹ் + உ | ஹு | ஹூனா |
ஹ் + ஊ | ஹூ | ஹூவன்னா |
ஹ் + எ | ஹெ | ஹேனா |
ஹ் + ஏ | ஹே | ஹேயன்னா |
ஹ் + ஐ | ஹை | ஹையன்னா |
ஹ் + ஒ | ஹொ | ஹோனா |
ஹ் + ஓ | ஹோ | ஹோவன்னா |
ஹ் + ஔ | ஹௌ | ஹௌவன்னா |
பயன்பாடு
[தொகு]மணிப்பிரவாள நடையில் எழுதும்போதும் பிற மொழிச் சொற்களை எழுதும்போதும் ஹகர உயிர்மெய்கள் பயன்படுத்தப்படுவதுண்டு. எடுத்துக்காட்டுகளாக, ஹனுமான், ஹாரி, ஹிந்தி, ஹீலியம், ஹுவாங்லோங், ஹூக்லி, ஹெயிட்டி, ஹேலி, ஹைட்ரஜன், ஹொங்கொங், ஹோண்டா, ஹௌசா, ஹ்ரித்திக் முதலிய சொற்களைக் குறிப்பிடலாம்.
கிரந்தக் கலப்பற்ற தமிழ்
[தொகு]ஹகர உயிர்மெய்கள் வரும் சொற்களைத் தனித்தமிழ் நடையில் எழுதும்போது ஹகரத்தை அகரமாக அல்லது ககரமாக எழுதுவது பெருவழக்கு. மொழிக்கு முதலில் ஹகர உயிர்மெய் வரும்போது தனித்தமிழ் நடையில் அதனையொத்த உயிரெழுத்தை எழுத வேண்டும் (எடுத்துக்காட்டுகள்: ஹனுமான்-அனுமான், ஹீலியம்-ஈலியம்).
சொல்லொன்றின் இடையில் அல்லது இறுதியில் ஹகர உயிர்மெய் வந்தால் அதனைக் ககரமாக எழுத வேண்டும் (எடுத்துக்காட்டு: தோஹா-தோகா).[3]
மொழிக்கு முதலில் ஹ் வந்தால் அதனைக் கி எழுத்தாக எழுத வேண்டும் (எடுத்துக்காட்டுகள்: ஹ்ரித்திக்-கிரித்திக்). சில சந்தர்ப்பங்களில் ஹ் எழுத்தை நீக்கி விடுவதுமுண்டு (எடுத்துக்காட்டு: ஹ்ரித்திக்-இரித்திக்). சொல்லின் இடையில் ஹ் வந்தால் அதனைச் ஃ என்பதால் குறிக்கலாம் (எடுத்துக்காட்டு: பஹ்ரேய்ன்-பஃரேய்ன்). சில சந்தர்ப்பங்களில் ஹ் எழுத்தை நீக்க விடுவதுமுண்டு (எடுத்துக்காட்டு: தேஹ்ராதுன்-தேராதுன்). சொல்லொன்றின் இறுதியில் ஹ் வருமாயிருந்தால் அதனை நீக்கி விட வேண்டும் (எடுத்துக்காட்டு: அல்லாஹ்-அல்லா).
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 6.5 வரலாற்று நோக்கில் எழுத்துச் சீர்திருத்தம்
- ↑ "தமிழ் எழுத்துக்கள் + வடமொழி எழுத்துகள்". Archived from the original on 2012-05-27. பார்க்கப்பட்ட நாள் 2012-04-22.
- ↑ எழுத்தியல்