உள்ளடக்கத்துக்குச் செல்

ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையம்
Homebush Tamil Study Centre
ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையம் இயங்கும் ஹோம்புஷ் ஆரம்பப் பாடசாலை
அமைவிடம்
ஹோம்புஷ், நியூ சவுத் வேல்ஸ்
ஆத்திரேலியா ஆத்திரேலியா
தகவல்
வகைதமிழ்ப் பாடசாலை
குறிக்கோள்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தொடக்கம்1987
தரங்கள்முன்பள்ளி–12
பால்ஆண்கள், பெண்கள்
இணையம்

ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையம் ஆத்திரேலியாவின் நியூ சவுத் வேல்சு மாநிலத்தில் சிட்னி மாநகரின் ஹோம்புஷ் என்ற புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தமிழ்க் கல்வி நிலையம் ஆகும். இது 1987ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. புலம்பெயர் தமிழ் வம்சாவழியினரின் இளைய தலைமுறையினருக்கு அடிப்படைத் தமிழ்க் கல்வியோடு தமிழ்க் கலை கலாசாரமும் இங்கு பயிற்றப்படுகின்றது.[1]

இக்கல்வி நிலையத்துக்கான வகுப்புகள் முன்பள்ளிக் கல்வி முதல் உயர்தர வகுப்புகள் வரை ஹோம்புஷ் ஆரம்பப் பாடசாலைக் கட்டடத்தில் சனிக்கிழமை தோறும் காலை, மாலை நேரங்களில் நடைபெறுகின்றன. அத்துடன் ஞாயிற்றுக் கிழமை காலை நேரத்தில் சிறப்பு வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.

இக்கல்வி நிலையம் ஆண்டு தோறும் வகுப்பு சோதனைகளோடு தமிழ் அறிவுப் போட்டி, பேச்சுப்போட்டி, பட்டிமன்றம், கவிஅரங்கம் போன்றவற்றை நடத்தி வருகிறது. அத்துடன் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் தமிழை ஒரு பாடமாக உயர்தரப் பரீட்சையில் எடுப்பதற்கு மாணவர்களைப் பயிற்றுவிக்கின்றது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலைய 26வது ஆண்டு நிறைவுக் கலைவிழா". தமிழ்முரசு ஆவுஸ்திரேலியா. 7 ஏப்ரல் 2013. பார்க்கப்பட்ட நாள் 8 மார்ச் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]