ஹுக்கும் தேவ் நாராயண் யாதவ்
Appearance
ஹுக்கும் தேவ் நாராயண் யாதவ் பீகாரிய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார். இவர் 1939-ஆம் ஆண்டின் நவம்பர் பதினேழாம் நாளில் பிறந்தார். இவர் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள பிஜுலி கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் மதுபனீ மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு, ஐந்து முறை மக்களவையில் உறுப்பினராகியுள்ளார். வேளாண்மை, துணி ஆகிய துறைகளின் மத்திய அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.[1]
பதவிகள்
[தொகு]- 1967, 69 & 72: பீகார் சட்டமன்ற உறுப்பினர் (மூன்று முறை) [1]
- 1977-79: ஆறாவது மக்களவையின் உறுப்பினர் [1]
- 1980: மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
- 1989: ஒன்பதாவது மக்களவையின் உறுப்பினர்[1]
- 1999: பதின்மூன்றாவது மக்களவையின் உறுப்பினர்[1]
- 2009: பதினைந்தாவது மக்களவையின் உறுப்பினர்[1]
- 2014: பதினாறாவது மக்களவையின் உறுப்பினர்[1]
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-04-07. Retrieved 2014-10-18.