உள்ளடக்கத்துக்குச் செல்

ஹிபாஜத்துல் இஸ்லாம் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹிபாஜத்துல் இஸ்லாம் இந்தியா, தமிழ்நாடு, சென்னையிலிருந்து 1930ம் ஆண்டில் வெளிவந்த ஒரு இசுலாமிய இதழாகும்.

ஆசிரியர்

[தொகு]
  • மௌலவி முஹம்மது அப்துல் காதிர் சாகிப்.

வெளியீடு

[தொகு]
  • சென்னை ஹிபாஜத்துல் இஸ்லாம் சங்க வெளியீடு

பணிக்கூற்று

[தொகு]

உயர்தர செந்தமிழ் மாத சஞ்சிகை முதல் பக்கத்தில் நிச்சயமாக நாம் அந்த இஸ்லாம் மதத்தைக் காப்பாற்றுவோம் என்ற திருக்குர்ஆன் உரை தலைப்பில் இடம்பெற்றிருந்தது.

பொருள்

[தொகு]

'ஹிபாஜத்துல் இஸ்லாம்' என்ற அரபுப் பதத்தின் பொருள் 'இஸ்லாமிப் பாதுகாப்பு' என்பதாகும்.

உள்ளடக்கம்

[தொகு]

இக்காலகட்டத்தில் வெளிவந்த தாருல் இஸ்லாம் இதழுக்குப் பதில் அளிக்கும் ஆக்கங்களை வெளியிட்டது. அத்துடன், இசுலாமிய இலக்கிய ஆக்கங்களையும், ஆய்வுக் கட்டுரைகளையும் கொண்டிருந்தது.