ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட்
வகை | அரசுத்துறை நிறுவனம் |
---|---|
நிறுவுகை | சூன் 22, 1941 |
தலைமையகம் | விசாகப்பட்டினம், இந்தியா |
முதன்மை நபர்கள் | Rear Admiral என். கே. மிஸ்ரா, தலைவர் & நிர்வாக இயக்குனர் |
தொழில்துறை | கப்பல் கட்டுதல் |
சேவைகள் | கப்பல் கட்டுதல் கப்பல் சரிசெய்தல் |
இணையத்தளம் | www |
ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் (Hindustan Shipyard Limited) ஆனது இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள கப்பல் கட்டுமிடமாகும்.
வரலாறு
[தொகு]22 ஜூன் 1941 அன்று டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் அவர்களால் இந்தக் கப்பல் கட்டுமிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.[1] ஆரம்பத்தில் சிந்தியா கப்பல் கட்டுமிடம் என அறியப்பட்ட, இது தொழிலதிபர் வால்சாந் ஹிரசாந்தால் தி சிந்தியா ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் ஒருபகுதியாக கட்டப்பட்டது.[2] சுதந்திரத்திற்குப் பிறகு முழுவதும் இந்தியாவிலேயே கட்டப்பட்ட ஜல் உஷா கப்பலானது சிந்தியா கப்பல் கட்டுமிடத்தில் கட்டப்பட்டது. மேலும் இக்கப்பல் ஜவகர்லால் நேருவால் 1948 ஆம் ஆண்டு துவக்கி வைக்கப்பட்டது.
இந்த கப்பல் கட்டும் துறைமுகம் 1961 ல் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது, மேலும் ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் என பெயர் மாற்றமும் செய்யப்பட்டது.
2009ல், ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் ஆனது கப்பல் துறை அமைச்சகத்திடமிருந்து பாதுகாப்புத்துறை அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டது. அணு ஆற்றலுடன் கூடிய அரிகந்த் வகை நீர்மூழ்கிகளை உருவாக்குவதில் ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் முக்கியப் பங்காற்றியது.[3]
கப்பல்கள்
[தொகு]2009ன் படி, இத்துறைமுகத்தில் 170 கப்பல்கள் வரை கட்டப்பட்டுள்ளது, மேலும் 2000 கப்பல்கள் வரை பழுது பார்க்கப்பட்டுள்ளது. இதில் பெரிய கப்பல்கள், கடலோர கண்காணிப்புக் கப்பல்கள், ஆய்வுக் கப்பல்கள், துளையிடும் கப்பல்கள், கடலோரத் தளங்கள் போன்றவை கட்டப்படுகின்றன.[2]
இங்கு இந்தியக் கடற்படையின் நீர்மூழ்கிகளுக்கு முக்கிய சீரமைப்புப் பணிகள் செய்யப்படுகின்றன, மேலும் அணு ஆற்றலுடன் கூடிய நீர்மூழ்கிக்கப்பலைக் கட்டுமளவுக்கு இந்தக் கப்பல் கட்டுமிடம் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
நலிவு நிலை
[தொகு]இந்திய அரசின் பொதுதுறை நிறுவனமான இது நலிவடைந்து வருவதால் மூடிவிட 2015ஆம் ஆண்டி அரசு முடிவெடுத்துள்ளது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "About Us". Hindustan Shipyard Limited. Archived from the original on 2011-10-08. பார்க்கப்பட்ட நாள் 2011-09-09.
- ↑ 2.0 2.1 "Hindustan Shipyard: Making Waves". India Today. 2009-10-09. http://indiatoday.intoday.in/story/HINDUSTAN+SHIPYARD:+Making+Waves/1/65621.html. பார்த்த நாள்: 2011-09-09.
- ↑ "Govt moves Hindustan Shipyard to Defence ministry". The Times of India. 2009-12-24 இம் மூலத்தில் இருந்து 2012-09-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120926143826/http://articles.timesofindia.indiatimes.com/2009-12-24/india/28091316_1_hindustan-shipyard-defence-ministry-hsl. பார்த்த நாள்: 2011-09-09.
- ↑ நலிவடைந்த பொதுத்துறை நிறுவனங்களை மூட அரசு முடிவு: பட்டியலில் ஹெச்எம்டி, ஏர் இந்தியா, எம்டிஎன்எல்