உள்ளடக்கத்துக்குச் செல்

ஹிதாயதுல் இஸ்லாம் (1919 சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹிதாயதுல் இஸ்லாம் இலங்கை, கொழும்பிலிருந்து 1919ம் ஆண்டில் வெளிந்த ஓர் இசுலாமிய மாத இதழாகும். ஹிதாயதுல் இஸ்லாம் எனும் பெயரில் இலங்கையிலும், இந்தியாவிலும் இடைக்கிடையே சில இதழ்கள் வெளிவந்துள்ளமை அவதானிக்கத்தக்கது.

பொருள்[தொகு]

'ஹிதாயதுல் இஸ்லாம்' எனும் அரபுப் பதம் 'இஸ்லாத்தின் நேர்வழி' என்று பொருள்படும்

உள்ளடக்கம்[தொகு]

இசுலாமிய சமயம் தொடர்பான கருத்துக்களுக்கு இவ்விதழ் கூடிய சந்தர்ப்பத்தினை வழங்கியுள்ளது. இசுலாமிய மூலாதாரங்களான கலிமா, தொழுகை, நோன்பு, சகாத், ஹஜ் போன்றவை பற்றி தெளிவான விளக்கங்களை வழங்கும் ஆக்கங்களைக் கொண்டிருந்தது.

ஆதாரம்[தொகு]

  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்