உள்ளடக்கத்துக்குச் செல்

ஹலோ (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹலோ
Hello
ஹலோ திரைப்படத்தின் சுவரொட்டி
இயக்கம்கே. செல்வபாரதி
தயாரிப்புதிருவேங்கடம்
கதைகே. செல்வபாரதி
இசைதேவா
நடிப்புபிரசாந்த்
பிரீத்தி ஜங்யானி
ஒளிப்பதிவுவிஜய் மில்டன்
படத்தொகுப்புபி. எஸ் வாசு-சலீம்
கலையகம்செரீன் மூவி மேக்கர்ஸ்
வெளியீடுநவம்பர் 7, 1999 (1999-11-07)
ஓட்டம்158 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

ஹலோ திரைப்படம் (ஆங்கிலத்தில் Hello Film) என்பது கே. செல்வபாரதி இயக்கத்தில், 1999 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இதில் பிரசாந்த், பிரீத்தி, சுஜிதா, ரஞ்சித் மற்றும் பலர் நடித்துள்ளனர். திருவேங்கடம் தயாரிப்பில், தேவா இசை அமைப்பில், 7 நவம்பர் 1999 ஆம் தேதி வெளியான இத்திரைப்படம், பாக்ஸ் ஆபீசில் சராசரி வெற்றியைப் பெற்றது.[1]

நடிப்புக்கலைஞர்கள்

[தொகு]

கதைச்சுருக்கம்

[தொகு]

சந்துரு (பிரசாந்த்) பூக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறான். பெண்களை தன் வசப்படுத்த அவன் பல முறை முயன்றிருந்தாலும் அவனுக்கு அதில் வெற்றி கிடைக்கவில்லை. அதனால், அவனது நண்பர்கள் (சார்லீ, வையாபுரி (நடிகர்)) மிகவும் கேலி செய்தனர். அதிலிருந்து தப்பிக்க, கோவிலில் அறிமுகம் இல்லாத ஒரு பெண்ணை (ப்ரீத்தி) காட்டி அவள் தான் தன் காதலி என்று கூறிவிடுகிறேன் சந்துரு. அடிக்கடி அந்த பெண்ணிடம் தொலைபேசியில் பேசுவது போல் சந்துரு நாடகமாட, அவனது நண்பர்களும் அதை நம்பிவிடுகின்றனர்.

இந்நிலையில், சார்லியின் நண்பன் சுரேஷ் பெண் பார்க்க சென்னை வருகிறான். அந்த பெண் - ஸ்வேதா, சந்துரு விரும்பும் பெண் என்று தெரியவர, திருமணத்தை நிராகரிக்கிறேன் சுரேஷ். அதனால், ஸ்வேதாவின் அண்ணன் சேகர் (ரஞ்சித்) அவளை நம்பாமல் மிகவும் திட்டிவிட, அதை தாங்கிக் கொள்ள இயலாமல், தற்கொலை செய்ய முயற்சிக்கிறாள் ஸ்வேதா.

பின்னர், ஸ்வேதாவிடம் தான் யார் என்று உண்மையை மறைத்து அறிமுகமாகி, நன்மதிப்பைப் பெற்று, சந்துருவும் ஸ்வேதாவும் விரும்பினர். பின்னர், சந்துரு யார் என்று தெரியவர, சந்துரு-ஸ்வேதா திருமணம் தடைபடுகிறது. இறுதியில், அந்த காதல் ஜோடிக்கு திருமணம் நடந்ததா என்பதே மீதிக் கதையாகும்.

ஒலிப்பதிவு

[தொகு]
ஹலோ திரைப்படம்
ஒலிப்பதிவுத் தட தொகுப்பு
வெளியீடு1999
ஒலிப்பதிவு1999
இசைப் பாணிதிரைப்பட ஒலிப்பதிவு
இசைத்தட்டு நிறுவனம்பைவ் ஸ்டார் ஆடியோ
இசைத் தயாரிப்பாளர்தேவா

இந்தப் படதிற்கு தேவா இசையமைப்பில் வைரமுத்து மற்றும் நா. முத்துக்குமார் பாடல் வரிகளில் ஆறு பாடல்கள் அமைந்துள்ளது.[2]

தடம் பாடல் பாடகர்(கள்) பாடல் வரிகள் கால அளவு
1 "சலாம் குலாமு" சுக்விந்தர் சிங் நா. முத்துக்குமார் 05:20
2 "செல்லா செல்லா" ஸ்ரீநிவாஸ், அனுராதா ஸ்ரீராம் வைரமுத்து 05:07
3 "பி.பி.சி போலா" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04:52
4 "வாலண்டைன்சு" சங்கர் மகாதேவன் (ம) சபேஷ் 05:45
5 "இந்த நிமிஷம்" ஹரிஹரன், சித்ரா 05:45
6 "சலாம் குலாமு" II நவீன் நா. முத்துக்குமார் 05:21

தயாரிப்பு

[தொகு]

ஹலோ திரைப்படம் கே. செல்வபாரதியின் இயக்கத்தில் வெளிவந்த இரண்டாவது படமாகும். இப்படம் பிரீத்தியின் முதல் தமிழ் திரைப்படமாகும். அவருக்கு தமிழ் தெரியாத காரணத்தால், படப்பிடிப்பின் பொழுது அவர் வசங்களை இந்தி மொழியில் பேச, பின்னர் அதை தமிழ் மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டது. ஹலோ படத்தின் தயாரிப்பு மிகவும் விரைவாக நடந்து முடிந்ததாக நடிகை பிரீத்தி குறிப்பிட்டிருந்தார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "பாக்ஸ் ஆபீசில் வெற்றி". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2019-03-07.
  2. "itunes apple song details".
  3. "rediff".
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹலோ_(திரைப்படம்)&oldid=3661007" இலிருந்து மீள்விக்கப்பட்டது