உள்ளடக்கத்துக்குச் செல்

ஹரிசிங் ராவத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹரிசிங் ராவத்
தலைவர் (மாநில அமைச்சர்) மாநில மக்ரா விகாஷ் வாரியம், இராசத்தான்
பதவியில்
2016–2018
இராசத்தான் சட்டமன்றத்திற்கு பீம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட்ப்பேரவை உறுப்பினர்.
பதவியில்
2003–2018
முன்னையவர்இலட்சுமணன் சிங் ராவத்
பின்னவர்சுதர்சன் சிங் ராவத்
தொகுதிபீம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புபீம்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வேலைவியாபாரம்
தொழில்அரசியல்வாதி
இணையத்தளம்www.facebook.com/hsrbhimbjp/

ஹரி சிங் ராவத் (Harisingh Rawat) (பிறப்பு 26 மே 1955) ஒரு பாரதிய ஜனதா கட்சியைச் இந்திய அரசியல்வாதியும், தொழிலதிபரும் ஆவார்.2003, 2008 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து மூன்று முறை இராசத்தானின் பீம் தொகுதியிலிருந்து 14 வது மாநிலச் சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் ஆவார். 1976 முதல் 1981 வரை இந்தியத் தரைப்படையிலும் பணியாற்றியுள்ளார். இவர் இராசத்தான் அரசின் மாநில மக்ரா விகாஸ் வாரியத்தின் முன்னாள் தலைவரும் ( மாநில அமைச்சர் ) ஆவார்.[1]

சொந்த வாழ்க்கை

[தொகு]

ஹரி சிங் ராவத் 1955 ஆம் ஆண்டு மே 26 ஆம் தேதி இராசத்தானில் உள்ள பீம், ராஜ்சமந்தில் பிறந்தார். தனது பள்ளிப் படிப்பை பீம் அரசினர். மேல்நிலைப் பள்ளியில் முடித்தார்.[2] இவர் விமலா என்பவரை மணந்தார். இவர்களுக்கு 2 மகள்களும் 2 மகன்களும் என 4 குழந்தைகள் உள்ளனர். இவர் பயணம் மற்றும் சாகச விளையாட்டு ஆர்வலர். வணிக நோக்கத்திற்காக பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ள இவர், 1971 முதல் 1973 வரை உதயப்பூர் பிரிவில் சிறந்த விளையாட்டு வீரராக இருந்துள்ளார். இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வணிகத்தில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.[3]

அரசியல் வாழ்க்கை

[தொகு]

ஒரு தொழிலதிபரான இவர் தனது குழந்தைப் பருவத்தை இராசத்தானில் கழித்தார். பின்னர் மும்பை மற்றும் குசராத்திற்கு வணிகத்திற்காக சென்றார். ஆனால் தனது சொந்த ஊர், இராசத்தானின் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் ஒன்றாக இருப்பதைப் பார்த்த இவர், 2002 இல் மக்களுக்கு சேவை செய்ய அமைப்பில் நுழைய முடிவு செய்தார்.ராவத் தனது பதவிக்காலத்தின் 14 வது சட்டப் பேரவை வரை விவாதங்களில் பங்கேற்று பல கேள்விகளைக் கேட்டுள்ளார். சமூக நீதி, தொகுதி மேம்பாடு, கல்விச் சீர்திருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசினார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Harisingh Rawat Rajasthan Legislative Assembly Members of the 14th House". rajassembly.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2017-02-27.
  2. "Satyanarayan jatiya Biography - About family, political life, awards won, history".
  3. "Harisingh Rawat What is it. Encyclopedia". Archived from the original on 21 April 2021. பார்க்கப்பட்ட நாள் 21 April 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹரிசிங்_ராவத்&oldid=3692979" இலிருந்து மீள்விக்கப்பட்டது