ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
Appearance
வகை | கல்வி மற்றும் ஆய்வு நிறுவனம் |
---|---|
உருவாக்கம் | 2000 |
தலைவர் | முனைவர் டி.சுப்பிரமணிய ராஜு |
முதல்வர் | முனைவர் பி. சசிகுமார் |
அமைவிடம் | , , 13°08′22″N 79°52′20″E / 13.1394°N 79.8723°E |
வளாகம் | 30 ஏக்கர்கள் (120,000 m2) |
சேர்ப்பு | AICTE and NBA |
இணையதளம் | www.sriventech.ac.in |
ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (Sri Venkateswara College of Engineering and Technology) என்பது தமிழ்நாட்டின், திருவள்ளூர் மாவட்டம், திருப்பாச்சூரில் உள்ள பொறியியல் கல்லூரி ஆகும்.
அமைப்பு
[தொகு]நிர்வாகம்
[தொகு]இந்த கல்லூரி 1999 ஆம் ஆண்டு ஏஐசிடிஇ ஒப்புதலுடன் நிறுவப்பட்டு, 2000 ஆம் ஆண்டிலிருந்து செயல்படத் தொடங்கியது. இக்கல்லூரியை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளை நடத்திவருகிறது
இக்கல்லூரி இந்தியாவின் தேசிய அங்கீகார வாரியத்தால் (NBA) அங்கீகாரம் பெற்றுள்ளது.
துறைகள்
[தொகு]- கணினி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- குடிசார் பொறியியல்
- இயந்திரப் பொறியியல்
- மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல்
- மின்னணு மற்றும் தொடர்பியல் பொறியியல்
- கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
- முதுநிலை கணினி பயன்பாட்டியல்
- முதுநிலை வணிக மேலாண்மை
வளாகம்
[தொகு]இக்கல்லூரியானது பொறியியல் துறையின் பல்வேறு பிரிவுகளில் கல்வி வழங்குகிறது. இதற்காக ஆய்வகங்களையும் கொண்டுள்ளது:
- வேதியியல்
- இயற்பியல்
- மின் இயந்திரங்கள் மற்றும் நுண்செயலி
- மின்னணு சுற்றுகள், நேரியல் ஒருங்கிணைந்த சுற்றுகள், எலக்ட்ரான் சாதனங்கள் மற்றும் தொலைத்தொடர்பு
- பட்டறைகள்
- குடிமை
- வரைபட மண்டபம்
குறிப்புகள்
[தொகு]- "SVCET Official Website". பார்க்கப்பட்ட நாள் 2006-03-30.