ஸ்ரீ கந்த லீலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்ரீ கந்த லீலா
இயக்கம்எச். எஸ். மேத்தா
தயாரிப்புஎம். ஏ. எஸ். செல்லம் & கோ.
கோவை பிரீமியர் சினிடோன்
கதைஎல். நஞ்சப்ப செட்டியார்
இசைஜி. கோவிந்தராஜுலு நாயுடு
நடிப்புராஜா எம். ஜி. தண்டபாணி
வசந்தா
சுந்தராம்பாள்
ஒளிப்பதிவுஜே. எஸ். பட்டேல்
நடன அமைப்புமீனாட்சிசுந்தரம்
வெளியீடுமார்ச்சு 19, 1938
ஓட்டம்.
நீளம்18750 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஸ்ரீ கந்த லீலா1938 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். பிரீமியர் சினிடோன் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜா தண்டபாணி, வசந்தா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

நடிப்பு[தொகு]

இத்திரைப்படத்தில் நடித்த நடிக, நடிகையர்:[2]

நடிகர்கள்
நடிகர் பாத்திரம்
ராஜா எம். ஜி. தண்டபாணி சூரன்
எம். வி. மணி வீரவாகு
மாஸ்டர் பி. எஸ். மணி பாலமுருகன்
மாஸ்டர் முருகேசன் தண்டபாணி
மாஸ்டர் நாராயணன் சுப்பிரமணியன்
இராமைய சாத்திரி இடும்பன்
ஞானமணி நாரதர்
செல்வமணி சயந்தன்
வி. வி. எஸ். மணி பானுகோபன்
டி. ஆர். குப்புசாமி பிள்ளை பரமசிவன்
கோவிந்தராஜுலு நாயுடு விட்டுணு
சவுடப்பா பிரமன்
ஆறுமுகம் இந்திரன்
நடிகைகள்
நடிகை பாத்திரம்
வசந்தா வள்ளி
சுந்தராம்பாள் தெய்வயானை
தனலட்சுமி பார்வதி
சுசீலாதேவி இந்திராணி
சீதாலட்சுமி அசமுகி

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்துக்கான பாடல்களை எல். நஞ்சப்ப செட்டியார் எழுதியிருந்தார். வித்துவான் ஜி. கோவிந்தராஜுலு நாயுடு பாடல்களுக்கு இசையமைத்திருந்தார். வைத்தீசுவரன் கோயில் மீனாட்சிசுந்தர நட்டுவனாரும் அவரது குழுவினரும் நடனங்களை அமைத்திருந்தனர். பாடல்கள் ஓடியன் கிராமபோன் தட்டுகளில் சென்னை சரசுவதி ஸ்டோர்சினரால் வெளியிடப்பட்டது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2022-12-02. பார்க்கப்பட்ட நாள் 2016-11-24.
  2. 2.0 2.1 ஸ்ரீ கந்த லீலா பாட்டுப் புத்தகம், 1938, ரிலையன்சு பிரசு, கோயம்புத்தூர்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீ_கந்த_லீலா&oldid=3725775" இலிருந்து மீள்விக்கப்பட்டது