ஸ்ரீபிருந்தன் சண்முகராகவன்
ஸ்ரீபிருந்தன் சண்முகராகவன் | |
---|---|
பிறப்பு | 07.05.1979 யாழ்ப்பாணம், இலங்கை |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | இசையமைப்பாளர், இசை தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் |
பெற்றோர் | சண்முகராகவன், தர்மகுலராணி |
வாழ்க்கைத் துணை | கௌரி |
பிள்ளைகள் | ஹரிநிகேஷ், ஹரிநிஷா |
வலைத்தளம் | |
https://www.youtube.com/user/sbrunthan |
ஸ்ரீபிருந்தன் சண்முகராகவன் (பிருந்தன் ராகவ், யாழ்ப்பாணம்) ஈழத்துப் பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், இசைத் தயாரிப்பாளர் என அறியப்பட்டவர். இவர் 2004 ஆம் ஆண்டில் தனது முதல் இசை இறுவெட்டான "துளிகள்" இசைத்தொகுப்புக்கு இசையமைத்ததன் மூலம் கலை உலகில் பிரவேசித்தவர்.
வாழ்க்கைக்குறிப்பு
[தொகு]இவர் இசைக்குடும்பத்தில் பிறந்தவர். இவரது தாத்தா கர்நாடக சங்கீத வித்வான் 'இசைப் புலவர்' என்.சண்முகரத்தினம் அவர்கள் ஆவார். இவரது தந்தை கர்நாடக சங்கீத வித்துவான் 'கலாசூடாமணி' திரு. எஸ் .சண்முகராகவன் ஆவார்.
கல்விப்புலம்
[தொகு]இவர் தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் உடுவில் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியிலும் மேற்படிப்பை கொழும்பு இரத்மலானை இந்து கல்லூரியிலும் கற்றவர்.
இசையமைத்த பாடல்கள்
[தொகு]இசைத்தொகுப்புகள்
[தொகு]- துளிகள் (12 பாடல்கள் ) - 2004
- நதியே (12 பாடல்கள் ) - 2005
- நக்க்ஷத்ரா (15 பாடல்கள் ) - 2009
- அஞ்சனா (11 பாடல்கள் ) - 2011
- கிரிக்கெட் ஆல்பம்
´துளிகள்` இசைத்தொகுப்பு
[தொகு]துளிகள் இசைத்தொகுப்பு இவரால் இசையமைக்கப்பட்ட 12 பாடல்களுடன் 2004 இல் வெளிவந்த இசைத்தொகுப்பு ஆகும். பாடல்வரிகளை ஸ்ரீவிஜெய் ராகவன் எழுதியிருந்தார்.
துளிகள் இசைத்தொகுப்பில் இடம்பெற்ற பாடல்கள்
[தொகு]- ஒரு பொய் சொல்லாயோ நீ
- உன்னில் என்னை கண்டேனடா
- மேகம் இடம் மாறும்போது
- பெண் பூவே
- இனி எங்கள் பூமியில் யுத்தம் இல்லை
- நெஞ்சோடு நீ நுழைந்து
- தீண்டும் தீண்டும்
விருதுகள்
[தொகு]- அரச விருது 2013 - கயல்விழி என் கயல்விழி... என்ற பாடலுக்கு சிறந்த பாடலுக்கான விருது)[4] [5]
- அரச விருது 2013 - `அஞ்சனா´ இறுவெட்டுக்கு சிறந்த இறுவெட்டுத் தயாரிப்புக்கான விருது[6][7]
- இளமை எப் எம் விருது 2016 - (சிறந்த இசையமைப்பாளர்)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tamilsongslyrics Brunthan Composed Tamil Movies
- ↑ THE HINDU - Music director Brunthan
- ↑ Behind Wood - KADHAL PISASE MUSIC REVIEW
- ↑ "அரச இசை விருது வழங்கல் விழா 2013" (PDF). நூலகம். March 12, 2016. p. 98.
- ↑ "ஸ்ரீபிருந்தன் சண்முகராகவன் அவர்கள் `கயல் விழி என் கயல் விழி ...` என்ற பாடலுக்காக அரசவிருது பெற்றுக் கொண்டமைக்கான சான்றிதழ்".
- ↑ "அரச இசை விருது வழங்கல் விழா 2013" (PDF). நூலகம். March 12, 2016. p. 105.
- ↑ "ஸ்ரீபிருந்தன் சண்முகராகவன் அவர்களுக்கு ´அஞ்சனா` என்னும் தலைப்பிலான சிறந்த இறுவெட்டுத் தயாரிப்புக்காக அரசவிருது சான்றிதழ்".