உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்டீவ் பைக்கோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்டீவ் பைக்கோ
பிறப்பு(1946-12-18)18 திசம்பர் 1946
கிங்வில்லியம் நகர், தென்னாபிரிக்கா
இறப்பு12 செப்டம்பர் 1977(1977-09-12) (அகவை 30)
பிரிட்டோரியா, தென்னாபிரிக்கா
அறியப்படுவதுநிறக்கொள்கைக்கெதிராக போராட்டம்

ஸ்டீவ் பைக்கோ (18 டிசம்பர் 1946 – 12 செப்டம்பர் 1977) தென்னாபிரிக்காவின் நிறவெறிக்கொள்கைக் கெதிராக போராடி காவற்துறையினரின் காவலில் இருந்தபோது கொல்லப்பட்டவர் .[1]

பிறப்பு , ஆரம்ப வாழ்க்கை

[தொகு]

தென் ஆப்பிரிக்காவில் நிறக்கொள்கை ஆதிக்கம் செலுத்திய கால கட்டத்தில் -1946 ஆம் ஆண்டு டிசம்பர் 18ல் ஈஸ்டர்ன் கேப் மாகாணத்தில், கிங்வில்லியம் நகரில் பிறந்தார் .[2] லவ்டேல் பள்ளிப் படிப்பின் போது தான் இவர் நிர்வாகத்திற்கு எதிராக இருந்ததால் வெளியேற்றப்பட்டார்.[3] பின்னர் நேட்டாலில் உள்ள ரோமன் கத்தோலிக்க உறை விடப்பள்ளியில் சேர்க்கப்பட்டார்.[2] அதே நகரில் மருத்துவக் கல்லூரியில் படித்தபோது தென்னாப்பிரிக்க மாணவர்களின் தேசிய சங்கத்தில் இணைந்தார்.

அரசியல் வாழ்க்கை

[தொகு]

தென்னாப்பிரிக்க மாணவர்களின் தேசிய சங்கத்தில் பல இனத்தினருக்கும் பிரதிநிதித்துவம் உள்ளதாக சொல்லிக் கொண்டாலும் வெள்ளை இனத்தவர்தான் தலை தூக்கிநின்றனர்.இதனால் கருப்பர், இந்தியர் மற்றும் மாநிற முள்ள மாணவர்களுக்கு தனிச்சங்கம் தேவை என்பதை உணர்ந்து தென் ஆப்பிரிக்க மாணவர் சங்கத்தைத் தோற்றுவித்தார்.[4] கருப்பு இனத்தவர் நலன் கருதும் பல்கலைக்கழக மாணவர்களை ஒருங்கிணைப்பதும், அரசியல் சுயசார்பும் இந்த சங்கத்தின் நோக்கங்களாக இருந்தன. 1968 ஆம் ஆண்டு 22வது வயதில் இந்த சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.தீவிர அரசியல் நடவடிக்கைகள் காரணமாக நேட்டால் பல்கலைக்கழகத்திலிருந்தும் அவர் வெளியேற்றப்பட்டார்.[5]

அனுபவித்த அடக்கு முறைகள்

[தொகு]

1973 ஆம் ஆண்டு பைக்கோவுக்கு வெள்ளை நிறவெறி அரசு விதித்த தண்டனை விதித்தது .[6] அதன் சாராம்சங்கள் [5]

  1. ஒன்றுக்கும் அதிகமான நபர்களிடம் அவர் பேசக்கூடாது.
  2. கிங்வில்லியம்ஸ் நகரத்தைவிட்டு வெளியே செல்லக் கூடாது.
  3. பொதுப்பத்திரிகைகளில் எழுதக் கூடாது .
  4. ஊடகங்களுடன் பேசக்கூடாது.
  5. பைக்கோ பேசியதையோ எழுதியதையோ மேற்கோள் காட்டவும் கூடாது .

சொவைட்டோ கிளர்ச்சி

[தொகு]

பைக்கோவும் அவர் தலைமை ஏற்றிருந்த கருப்பு இன உணர்வாளர்கள் இயக்கமும் மக்களிடம் ஊடுருவிச் செய்த வேலைகள் 1976 ஜூன் 16 சொவைட்டோ பெரும் கிளர்ச்சிக்கு வழி வகுத்தன.[7]

சிறை தண்டணை , இறப்பு

[தொகு]

சொவைட்டோ கிளர்ச்சி காரணமாக வெள்ளை இனவெறி காவல்துறையின் இலக்கானார் ஸ்டீவ் பைக்கோ. ஓராண்டுக்குப் பின் 1977 ஆகஸ்ட் 18ல் அந்த விடுதலைப் போராளி பயங்கர வாதத் தடைச்சட்டத்தின் படி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். போர்ட் எலிசபெத் காவல் துறை அதிகாரிகள் அவரை விசாரித்த 619ஆம் எண்கொண்ட காவல்நிலையம் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தது.நிறவெறி அரசின் ஏவல்துறை 22 மணி நேரத்திற்கும் அதிகமாக விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்தது. அரக்கத்தன மான அதிகாரிகளின் தாக்குதலால் தலையில் காயங்கள் ஏற்பட்டு சுய நினைவிழந்தார் பைக்கோ.[5] ஒரு நாள் முழுவதும் ஜன்னலோடு சங்கிலியால் கட்டிவைத்து கொடுமைப் படுத்தினர்.1977 செப்டம்பர் 11 அன்று ஒரு காரின் பின்பக்கத்தில் அவரைத் திணித்து 1100 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பிரிட்டோரியாவுக்குக் கொண்டு சென்றனர். இங்குதான் மருத்துவசதி கொண்ட சிறைச்சாலை இருந்தது. ஆனாலும் அந்தச் சிறையை நெருங்குவதற்கு முன்பாகவே செப்டம்பர் 12 அன்று பைக்கோவை மரணம் தழுவிக் கொண்டது. நீண்டநாள் உண்ணாவிரதம் இருந்ததால் அவர் இறந்து போனதாக கூறியது போலீஸ். ஆனால் தலைக் காயங்கள் காரணமாகவே அவர் இறந்தார் என்பதை உறுதி செய்தது பிரேத பரிசோதனை அறிக்கை.[8] பிற்காலத்தில் தென்னாப்பிரிக்க பத்திரிகையாளரான டொனால்ட் வுட்ஸ் எழுதிய ‘பைக்கோ’ என்ற புத்தகம் அவரின் வாழ்க்கையையும் போராட்டங்களையும் விவரித்தன. பைக்கோவின் காயங்களை ரகசியமாகப் படம் பிடித்து வெளிப்படுத்தியவர் டொனால்ட்வுட்ஸ்.

கவுரவங்கள்

[தொகு]

கேப்டவுண் பல்கலைக் கழக மாணவர் சங்கத்தின் பிரதான கட்டிடத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அவரது பெயரில் நினைவு சொற் பொழிவு நிகழ்ச்சி நடைபெறுகிறது. மான்செஸ்டர் பல்கலைக்கழக மாணவர் சங்க கட்டிடத்திற்கு அவரது பெயர் சூட்டி கவுரவிக்கப் பட்டுள்ளார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ரஸ்கின் கல்லூரி மாணவர் விடுதி அவர் பெயரில் தான் உள்ளது . பிரிட்டனில் உள்ள மாணவர் சங்கங்கள் பலவற்றில் இவரது பெயருடன் கட்டிடங்களும் பிரிவுகளும் உள்ளன . பிரேசில், எல் சல்வடோர்ரில் இவரது பெயரில் கல்விநிறுவனம் உள்ளது.[9] பிரிட்டோரியா மருத்துவக்கல்லூரியும் அவரது பெயரில் [10], டர்பன் பல்கலைக்கழகத்தின் பரந்து விரிந்த வளாகம் அவரது பெயர் தாங்கிநிற்கிறது.இதே பல்கலைக்கழக வளாகத்தின் சுதந்திர சதுக்கத்தில் அவருக்கு மார்பளவு வெண்கலச் சிலை வைக்கப்பட்டுள்ளது .

மேற்கோள்கள்

[தொகு]
  1. மயிலை பாலு (15 ஏப்ரல் 2012). "வரலாற்றுச்சுவடுகள்:வீரம் விதைத்த இளைஞன்". தீக்கதிர். Archived from the original on 2016-03-06. பார்க்கப்பட்ட நாள் 26 ஏப்ரல் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. 2.0 2.1 Elizabeth J. Verwey; HSRC Press (1995). "New Dictionary of South African Biography, Volume 1". books.google.com. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-07969-1648-8.
  3. Peter Joyce (2007). "The Making of a Nation: South Africa's Road to Freedom". books.google.com. p. 142. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1770073128.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Background: Steve Biko: martyr of the anti-apartheid movement". BBC News. 8 December 1997. http://news.bbc.co.uk/2/hi/africa/37448.stm. பார்த்த நாள்: 16 April 2007. 
  5. 5.0 5.1 5.2 Appiah, Kwame Anthony (1997). The Dictionary of Global Culture. New York: Alfred A. Knopf. pp. 76–77. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-394-58581-X. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help)
  6. "Martyr of Hope: A Personal Memoir" by Aelred Stubbs C.R., in Biko, Steve (2002). I Write What I Like. Chicago: Harper & Row. p. 161.
  7. "The birth and death of apartheid". பார்க்கப்பட்ட நாள் 17 June 2002.
  8. Helen, Zille (9 September 2007). "Steve Biko's legacy lives on". IOL.co.za. Archived from the original on 20 ஜூன் 2012. பார்க்கப்பட்ட நாள் 26 ஏப்ரல் 2014. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  9. Martins, Alejandra (25 May 2005). "Black Brazilians learn from Biko". BBC News. http://news.bbc.co.uk/1/hi/world/americas/4552119.stm. பார்த்த நாள்: 19 June 2011. 
  10. Newsbeat. "The Steve Biko Academic Hospital". Pah.org.za. Archived from the original on 27 ஜூன் 2015. பார்க்கப்பட்ட நாள் 19 June 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டீவ்_பைக்கோ&oldid=3657427" இலிருந்து மீள்விக்கப்பட்டது