ஸ்டாக்ஹோம் சுற்றுச்சூழல் நிறுவனம்
சுருக்கம் | SEI |
---|---|
உருவாக்கம் | 1989 |
வகை | நிறுவனம் |
தலைமையகம் | ஸ்டாக்ஹோம், சுவீடன் |
சேவை பகுதி | பன்னாடு |
ஆட்சி மொழி | ஆங்கிலம் |
நிர்வாக இயக்குநர் | Måns Nilsson |
வரவு செலவு திட்டம் | 379 500 000 SEK (Global: 2022)[1] |
பணிக்குழாம் | 322 (2022)[1] |
வலைத்தளம் | https://www.sei.org/ |
ஸ்டாக்ஹோம் சுற்றுச்சூழல் நிறுவனம் (Stockholm Environment Institute) என்பது ஒரு இலாப நோக்கற்ற, தன்னாட்சி, ஆராய்ச்சி மற்றும் கொள்கை நிறுவனமாகும். இது நிலையான வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் நிபுணத்துவ அமைப்பாகும்.[2] காலநிலை மாற்றம், எரிசக்தி அமைப்புகள், நீர்வளம், காற்றின் தரம், நிலப் பயன்பாடு, சுகாதாரம், உணவு பாதுகாப்பு மற்றும் வர்த்தக பிரச்சினைகள் ஆகியவற்றில் கொள்கை மற்றும் நடைமுறையை நிலைத்தன்மையை நோக்கி மாற்றும் நோக்கில் செயல்படுகிறது.
சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டுத் துறையில் அறிவியலையும் கொள்கையையும் இணைக்கும் அறிவை வழங்குவதன் மூலம் முடிவெடுப்பதை ஆதரிக்கவும், உலகெங்கிலும் நிலையான வளர்ச்சியை நோக்கி மாற்றத்தைத் தூண்டவும் இந்த அமைப்பு விரும்புகிறது.[2]
வரலாறு
[தொகு]1989இல் சுவீடன் அரசாங்கத்தின் ஒரு முயற்சியாக இந்நிறுவனம் நிறுவப்பட்டது. இந்நிறுவனத்தின் பெயரான ஸ்டாக்ஹோம் சுற்றுச்சூழல் நிறுவனம் என்பது பெயர் 1972ஆம் ஆண்டு ஸ்டாக்ஹோமில் மனித சுற்றுச்சூழல் குறித்த ஐ.நா. மாநாட்டின் போது தீர்மானிக்கப்பட்டது.[சான்று தேவை]
செயல்பாடுகள்
[தொகு]- சுற்றுச்சூழல் சுகாதார ஆராய்ச்சி திட்டம்
- லீப்: நீண்ட தூர எரிசக்தி மாற்று திட்டமிடல் அமைப்பு
- வளங்கள் மற்றும் ஆற்றல் பகுப்பாய்வு திட்டம் (REAP)
- வளரும் நாடுகளில் பிராந்திய காற்று மாசுபாடு (RAPDIC)
- நிலையான மீகாங் ஆராய்ச்சி கட்டமைப்பு திட்டம் (SUMERNET)
- weADAPT (weADAPT.org)
- WEAP: நீர் மதிப்பீடு மற்றும் திட்டமிடல் அமைப்பு
- TRASE நிலையான பொருளாதாரங்களுக்கான வெளிப்படையான விநியோக சங்கிலிகள்.
கூட்டாண்மை
[தொகு]- ஜெர்மன் மேம்பாட்டு அமைப்பு (GIZ) உடன் இணைந்து 2007இல் நிலையான நலத்தூய்மை கூட்டணியை நிறுவிய அமைப்புகளில் இதுவும் ஒன்றாகும்[3]
நிறுவன கட்டமைப்பு
[தொகு]நிர்வாக இயக்குநர்கள்
[தொகு]- 1989-1990 கார்டன் டி. குட்மேன்
- 1991-1995 மைக்கேல் ஜே. சாட்விக்
- 1996-1999 நிக்கோலஸ் சி. சோன்டாக்
- 2000 பெர்ட் போலின் (இடைக்கால நிர்வாக இயக்குநர்) [4]
- 2000 லார்ஸ் நில்சன் (இடைக்கால நிர்வாக இயக்குநர்)
- 2000-2004 ரோஜர் காஸ்பர்சன்
- 2004–2012 ஜோஹன் ராக்ஸ்ட்ராம்
- 2012–2018 ஜோஹன் எல். குய்லென்ஸ்டீர்னா
- 2018 - தற்போது மென்ஸ் நில்சன் (நிர்வாக இயக்குநர்)
மையங்கள்
[தொகு]சுவீடனில் தலைமையகத்தினைக் கொண்டு ஏழு நாடுகளில் ஸ்டாக்ஹோம் சுற்றுச்சூழல் நிறுவனம் நிலையங்கள் செயல்படுகிறது: சுவீடன், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், எசுதோனியா, தாய்லாந்து, கென்யா மற்றும் கொலம்பியா.
நிதி ஆதாரங்கள்
[தொகு]சுவீடிய சர்வதேச மேம்பாட்டு ஒத்துழைப்பு நிறுவனம் (சிடா) ஸ்டாக்ஹோம் சுற்றுச்சூழல் நிறுவன முக்கிய புரவலர் ஆவார். அபிவிருத்தி முகவர், அரசாங்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், வணிகங்கள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்தும் இந்நிறுவனம் நிதியினைப் பெறுகிறது.[5]
எடுத்துக்காட்டாக, பில் & மெலின்டா கேட்சு அறக்கட்டளை தாய்வழி சுகாதாரம்[5] மற்றும் நிலையான சுகாதாரத்தில் நிதி வழங்குகிறது.[6][7] 2015ஆம் ஆண்டில் ஸ்டாக்ஹோம் சுற்றுச்சூழல் நிறுவன அறிவியல் மன்றத்தில், இந்நிறுவன எதிர்கால ஆராய்ச்சியை வடிவமைக்க உதவும் வகையில் நிறுவன ஊழியர்களுடன் நீடித்த தன்மை மற்றும் பாலினம் குறித்து விவாதிக்க நடைபெற்ற நிகழ்வில் மெலின்டா கேட்சு பங்கேற்றார்.[5][8]
மேலும் காண்க
[தொகு]- ஸ்டாக்ஹோம் பின்னடைவு மையம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 [1]
- ↑ 2.0 2.1 About SEI
- ↑ "1st SuSanA meeting, Eschborn, January 2007, Germany". Sustainable Sanitation Alliance. பார்க்கப்பட்ட நாள் 9 December 2016.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-07-13. பார்க்கப்பட்ட நாள் 2021-05-13.
- ↑ 5.0 5.1 5.2 "Annual Report". Stockholm Environment Institute. பார்க்கப்பட்ட நாள் 9 December 2016.
- ↑ Elisabeth von Muench, Dorothee Spuhler, Trevor Surridge, Nelson Ekane, Kim Andersson, Emine Goekce Fidan, Arno Rosemarin (2013) Sustainable Sanitation Alliance members take a closer look at the Bill & Melinda Gates Foundation’s sanitation grants, Sustainable Sanitation Practice Journal, Issue 17, p. 4-10
- ↑ "Sustainable Sanitation Alliance: Grant of $2.7 million to supercharge sustainable sanitation knowledge platform". Sanitation Updates. 4 November 2016. பார்க்கப்பட்ட நாள் 9 December 2016.
- ↑ "Youtube video: Melinda Gates 'Gender aspects of global development'". Stockholm Environment Institute. 10 June 2015. பார்க்கப்பட்ட நாள் 9 December 2016.