ஷோம்பென் மக்கள்
ஷோம்பென் அல்லது ஷாம் பென் (Shompen people) என்றால் இந்திய யூனியன் பிரதேசமான அந்தமான் நிகோபார் தீவுக்கூட்டங்களில் கிரேட் நிக்கோபார் தீவு, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் உள் காட்டுப் பகுதியில் மறைந்து வாழும் பழங்குடி இன மக்கள் ஆகும்., ஷோம்பென் மக்கள் இந்திய அரசால் மலைவாழ் பழங்குடியினர் என்று சான்று அளிக்கப்பட்டுள்ளார்கள்.[1]
ஷோம்பென் மொழி
[தொகு]ஷோம்பென் மக்கள் பேசும் மொழியானது அடிப்படையில் தென்கிழக்கு ஆசியாவில் பேசும் மொழிகள் என்ற குடுபம்பத்தைச் சேர்ந்தது என்று அறியப்படுகிறது. பொதுவாக இந்தியா, வியட்னாம் போன்று 168 மொழிகள் இவ்வகையில் உலகில் உள்ளதாக எனோலாக் என்னும் நிறுவனம் கணக்கிட்டுள்ளது. இதில் வியட்னாமிய மொழி, குமேர் மொழி, மோன் மொழி போன்றவை மட்டுமே எழுத்துவடிவில் உள்ளது.
சமூகம்
[தொகு]ஷோம்பென் மக்கள் பொதுவாக காட்டு வாழ்க்கையே வாழ்ந்து அதன்மூலம் கிடைக்கும் பொருள்கள் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். 1980ம் ஆண்டுகளில் இவர்கள் 2 தீவுகளிலும் சேர்ந்து 22 தனி நபர்களாகவும், 10 குழுக்களாகவும் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் கற்காலம் தொட்டு வாழ்ந்துவரும் பழங்குடிகள் என்று அறியப்படுகிறார்கள்.[2] 2011ம் ஆண்டு மக்கள் தொகைக்கணக்கெடுப்பின் படி இவர்களில் எண்ணிக்கை 229 என்று அறியப்படுகிறது. முதன் முறையாக இந்த மக்கள் 2014ம் ஆண்டிற்கான மக்களவைத் தேர்தலில் வாக்களித்துள்ளார்கள்.[3]
2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் காட்டுப்பகுதியில் வாழ்ந்து வந்த இந்த மக்கள் பலரும் இறந்து விட்டதாக அறியப்படுகிறது.[2]
பிறப்புரிமையியல்
[தொகு]இந்த மக்களின் டிஎன்ஏ சோதனைப்படி இவர்கள் இந்தோனேசிய மக்களின் டிஎன்ஏயுடன் ஒத்துப்போவதாகக் கூறுகிறார்கள். இவர்களின் Y நிறமூர்த்தம் கொண்டு சோதனை செய்தபோது ஆஸ்திரேலிய இனத்திலும், நிக்கோபார் இனத்திலும் மற்றும் வியட்நாமியர் என்றும் கூறுகிறார்கள்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "List of notified Scheduled Tribes" (PDF). Census India. p. 27. பார்க்கப்பட்ட நாள் 15 December 2013.
- ↑ 2.0 2.1 2.2 Weber, George. "The Shompen People". The Andaman Association. Archived from the original on 2008-06-18. பார்க்கப்பட்ட நாள் January 2010.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ அந்தமான் நிகோபாரில் முதல் முறையாக வாக்களித்த ஷோம்பென் பழங்குடிகள்
- ↑ Trivedi, Rajni; T. Sitalaximi, Jheelam Banerjee, Anamika Singh, P. K. Sircar and V. K. Kashyap (March 2006). "Molecular insights into the origins of the Shompen, a declining population of the Nicobar archipelago". Journal of Human Genetics 51 (3): 217–226. doi:10.1007/s10038-005-0349-2. பப்மெட்:16453062. http://www.springerlink.com/content/e7n73nq734w71600/.[தொடர்பிழந்த இணைப்பு]
வெளி இணைப்புகள்
[தொகு]- "Nicobarese and Shompen". The Andaman Association. Archived from the original on 2011-07-09. பார்க்கப்பட்ட நாள் January 2010.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help); Unknown parameter|=
ignored (help)