ஷேர்னி
ஷேர்னி | |
---|---|
இயக்கம் | அமித் மசூர்கர் |
தயாரிப்பு | ஜைத் அலி வினோத் பானுஷாலி சிவ் சனனா ஸ்மிருதி ஜெயின் மதுலிகா ஜலாலி பூஷன் குமார் கிருஷன் குமார் விக்ரம் மல்ஹோத்ரா அமித் மசூர்கர் கௌரவ் மிஸ்ரா ஷிகா சர்மா கருணா விஸ்வநாத் |
கதை | ஆஸ்தா டிக்கு (திரைக்கதை) அமித் மசூர்கர் (உரையாடல்) யஷஸ்வி மிஸ்ரா (உரையாடல்) |
இசை | நரேன் சந்தாவர்க்கர் (பின்னணி இசை) பெனடிக்ட் டெய்லர் மயூர் நர்வேகர் (இசை இயக்குநர்) |
நடிப்பு | வித்யா பாலன் முகுல் சத்தா நீரஜ் கபி விஜய் ராஸ் ஷரத் சக்சேனா |
ஒளிப்பதிவு | ராகேஷ் ஹரிதாஸ் |
படத்தொகுப்பு | தீபிகா கல்ரா |
விநியோகம் | அமேசான் பிரைம் வீடியோ |
வெளியீடு | 2011 சூன் 18 |
ஓட்டம் | 130 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | இந்தி |
ஷேர்னி (Sherni) என்பது 2021 ஆண்டைய இந்திய இந்தி திரைப்படமாகும். ஷேர்னி என்ற இந்தி சொல்லுக்கு பெண்புலி என்பது பொருளாகும்.[1] இத்திரைப்படத்தை அமித் மசூர்கர் இயக்கியுள்ளார்.[2] இப்படத்தில் வித்யா பாலன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவருடன் முகுல் சத்தா, நீரஜ் கபி, விஜய் ராஸ், ஷரத் சக்சேனா ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஷேர்னி படத்திற்கு நரேன் சந்தாவர்க்கர், பெனடிக்ட் டெய்லர் ஆகியோர் பின்னணி இசையமைக்க, மயூர் நர்வேகர் இசை இயக்குநராக பணிபுரிந்துள்ளார். பாடல்களுக்கு வரிகளை ஹுசைன் ஹைட்ரி எழுதியுள்ளார். இப்படத்தின் கதையானது மகாராட்டிரத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது.[3]
கதை
[தொகு]இப்படத்தின் கதை இந்தியாவின் உத்திரப் பிரதேசத்தில் புலிகள் அதிகமாக வாழும் வனப்பகுதியை ஒட்டிய சிற்றூரில் நடப்பதாக காட்டப்படுகிறது. கிராமத்திலிருந்து காட்டுக்குள் கால்நடைகளை மேய்க்க வருபவரும் முதியவரும், சுள்ளி பொறுக்கவரும் பெண்ணும் அடுத்தடுத்து புலியால் அடித்துக் கொல்லப்படுகின்றனர். இதனால் பிரச்சனை சூடுபிடிக்கிறது. அடர்ந்த காட்டிலிருந்து கிராமத்தை ஒட்டிய காட்டின் எல்லைப் பகுதியில் அந்த இரட்டை குட்டிகளுள்ள அந்தப் புலி வந்துள்ளது.
புலியை அடந்த காட்டுக்குள் விரட்ட வனத்துறை பெண் அதிகாரி வித்யா வின்செண்ட் (வித்யா பாலன்) நடவடிக்கை எடுகிறார். அதனால் புலியும் நகரத் தொடங்குகிறது. அது நகரும் பாதையில் பெருமளவு காடு அழிக்கபட்டு, அடையில் தாமிர சுரங்கமும், அதிவிரைவு நெடுஞ்சாலையும் அமைக்கபட்டுள்ளது. இதனால் புலி அடர்ந்த காட்டை நொக்கி செல்வதில் தடங்களும் சிக்கலும் நேர்கிறது. மேச்சல், சுள்ளி போன்றவற்றிற்க்கு காட்டி நம்பியுள்ள மக்கள் ஒரு புறம், மனித இடையூறு இல்லாத காட்டை விரும்பும் புலி ஒருபுறம் என இருதரப்புக்கும் இடையில் சிக்கிக்கொள்ளும் வனத்துறை புலியைக் காக்க விரும்புகிறது.
ஒருபுறம் சூமூக தீர்வை நடுவதைவிட அதில் தங்களுக்கு என்ன ஆதாயம் கிடைக்கும் என்பதையும், அப்போதைக்கு பிரச்சனையை முடிவுக்கு கொண்டவரவுமே ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் முயல்கின்றனர். இனால் குழம்பிய வனத்துறையினர், அரசியலவாதிகள், உள்ளூர் அரசியல்வாதிகள், தனியார் வேட்டை ஆர்வலர்கள் என பலதரப்பினருக்கு இடையில் அந்த புலி சிக்கிக்கொள்கிறது. இறுதியில் புலிக்கு என்ன நேர்ந்தது என்பதே கதையாகும்.
நடிகர்கள்
[தொகு]- வித்யா பாலன் -வித்யா வின்செண்ட்
- முகுல் சத்தா -பவன்
- நீரஜ் கபி -அகில் நங்கியா
- விஜய் ராஸ் -ஹசன் நூரானி
- ஷரத் சக்சேனா -ரஞ்சன் ராஜன்ஸ் அக்கா பிந்து
- அஸ்வினி லடேகர் -பெண் வன காவலர்
- பிரிஜேந்திர கலா -பன்சிலால் பன்சால்
- சம்பா மண்டல் -ஜோதி
- கோபால் தத் -சைபிரசாத்
- இலா அருண் -பவனின் தாய்
- சுமா முகுந்தன் -வித்யாவின் தாய்
- சத்தியகம் ஆனந்த் -பி.கே. சிங்
- மனோஜ் பக்ஷி -ஜங்கிள் முகாமில் அமைச்சர்
- முகேஷ் பிரஜாபதி -வன காவலர்
வரவேற்பு
[தொகு]இப்படம் 2011 சூன் 18 அன்று வெளியிடப்பட்டு நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ஓடிடி திரைப் பார்வை: 'ஷேர்னி'... நினைவில் காடுள்ள பெண் புலி! - ஒரு 'த்ரில்' அனுபவம் புதிய தலைமுறை. காம் 2021 சூன் 21
- ↑ ஆதி வள்ளியப்பன், மனித உயிரின எதிர்கொள்ளல்: ‘ஷேர்னி' காட்டும் வழி, கட்டுரை, இந்து தமிழ் (நாளிதழ்) 2021 சூன் 29
- ↑ 'ஷேர்னி'யைக் கண்டோரும், காண விழைவோரும் அறியவேண்டிய 'அவ்னி' புலியின் கதை! கட்டுரை, புதிய தலைமுறை. காம் 2021 சூன் 22